குக்குவின் அம்மா: வட அரைக்கோளத்துல மிகவும் குறைந்த வெப்பநிலையும் சைபீரியாவுல தான் காணப்படுது. குளிர்காலத்துல அங்க வெப்பநிலை -50 டிகிரி செல்சியஸுக்கு கீழ குறைஞ்சிடும். ரஷ்யாவுல, தான் உலகின் மிகப் பரந்த தைகா காட்டுப்பகுதி பசிபிக் பெருங்கடல்லேருந்து யூரல் மலைகள் வரை சுமார் 5,800 கிலோமீட்டர்கள் வரை நீண்டுக் காணப்படுது. வெப்பமண்டலக் காடுகளை விட இரண்டு மடங்கு அதிக கார்பனை தைகா காடுகளால சேமித்து வெச்சுக்கமுடியும். இன்னும் சரியா சொல்லனும்னா தைகாக் காடுகள் புவியின் வட அரைக்கோளத்தில் தூந்திர பிரதேசத்திற்கும், மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைஞ்சிருக்கு. தைகாக்காடுகள்ல மண் எப்போதுமே உறைஞ்சிருக்கும் அதை உறைமண்ணுன்னு சொல்றாங்க.. தைகா காடுகள்ல ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரிபழங்களைக் கொண்ட புதர்ச்செடிகள் காணப்படுது. அவை அங்குள்ள விலங்குகள், பறவைகளுக்கு முக்கியமான உணவா இருக்கு…
குக்கு:
அங்க என்னென்ன விலங்குகளெல்லாம் இருக்குமா
குக்குவின்
அம்மா: அங்க பல வகையான விலங்குகள் இருக்கு. அங்க ரொம்பக் குளிரா இருக்குறதால குளிருக்கு
தகவமைச்சு வாழும் விலங்குகளால தான் அங்க தாக்குப்பிடிக்கமுடியும். விலங்குகள் அங்க அடர்ந்த ரோமங்களோட புஸுபுஸுனு இருக்கும். பாம்பு, ஓணான் போன்ற ஊர்வன வகை விலங்குகள் குளிர்
ரத்தப்பிராணிகள், அதுங்களால உடலோட வெப்பத்தை அதிகரிக்கவோ, ஒழுங்குபடுத்தவோ முடியாது.
அதனால ஊர்வன வகை விலங்குகள் அங்க ரொம்பக்குறைவா தான் காணப்படுது. பனி முயல், அணில்,
சிப்மங்க், மர்மொட், லெம்மிங்க் பைகா போன்ற கொரித்து வாழும் சின்ன விலங்குகளும் ரெய்ண்டீர்,
கரீபௌ, எல்க் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, குதிரை, கருங்கரடி, பழுப்பு கரடி, பனிக்கரடி,
ஓநாய், ரக்கூன், லிங்க்ஸ், நரி, ஒட்டர், சைபீரியப்புலி, அமுர் வேங்கை, போன்ற பெரிய விலங்குகளும் அங்க இருக்கு. மூஸ் எனப்படும் உலகின் மிகப்பெரிய மான் வகையும், உலகின் மிகப்பெரிய புலியான, 300-கிலோ எடையுள்ள சைபீரிய புலியும் தைகா காடுகள்ல தான்
காணப்படுது. தைகா காடுகள்ல பல வகை குருவிகள், கழுகுகள், பனி ஆந்தைகள், கொம்பு ஆந்தைகள்
போன்ற 300 வகை பறவைகள் காணப்படுதாம். குளிர்காலத்துல அங்குள்ள விலங்குகள் எதுவுமே செய்யாம
ஹைபர்னேசன் எனப்படும் நீண்ட குளிர்கால உறக்கத்தில் இருப்பதனால தான் குளிர்காலத்த தாக்குப்புடிக்கிறாங்க.
தைகாக் காடுகள்ல உள்ள பறவைகள் பொதுவா குளிர்காலத்துல தெற்கு நோக்கி இடம்பெயர்ந்துருங்க.
குக்கு: அப்போ விலங்குகள்
குளிர்காலம் முழுக்க தூங்குவாங்களா ஏம்மா அப்படி
குக்குவின்
அம்மா: குளிர்காலத்துல அவங்களுக்கு உணவு கெடைக்காது. உடலை ஒறையவைக்கும் குளிரிலிருந்து
பாதுகாத்துக்கொள்வதற்கான தகவமைப்புதான் அது…
குக்கு:
தைகா விலங்குகள் ஹைபர்னேசன்ல எப்படி வாழ்றாங்கன்னு பார்க்க ஆசையா இருக்கும்மா…
குக்குவின்
அம்மா: கட்டாயம் பாக்கலாம் குக்கு. நான் ஒனக்கு வீடியோ காட்டுறேன். இன்னொரு முக்கியமான
விசயமும் சொல்லனும் குக்கு. சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பிறகு சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக் காடுகள் அழிக்கப்பட்டு வருது. மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தாலயும்
தைகா காடுகள் பாதிக்கப்பட்டுருக்கு. புவியின் உயிர்ச்சூழலையும் பன்முகத்தன்மையும்
பாதுகாக்க தைகாக் காடுகள பத்திரமா பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்ம எல்லாருக்குமே
இருக்கு குக்கு.
(தொடரும்)
No comments:
Post a Comment