குக்குவின் அம்மா: நீ குட்டிப் பாப்பா தான, ஒனக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பத்தியெல்லாம் தெரியாதுனு நெனச்சுட்டோம்…
குக்கு:
அது எப்படி எனக்கு எது தெரியும், எது தெரியாது, எது புரியும், எது புரியாதுங்கறத
என்ன கேக்காமலே நீங்களே முடிவுபண்ணிக்கிறீங்க…
குக்குவின்
அம்மா: தப்பு தான்டா இனிமே அப்படி பண்ணமாட்டோம்…
குக்கு: நீங்க இந்த மாதிரி
பண்றது இது மொதல் தடவ கிடையாது, நெறைய வாட்டி இப்டி தான் நடந்துருக்கு…
குக்குவின்
அம்மா: சரி கோபப்படாத குக்கும்மா இனிமேல் அப்படி நடக்காது. வால்டேரிமுல்கஹைனென் மட்டும்
இல்ல குக்கும்மா, உலகத்துல பல கலைஞர்கள் இந்த மாதிரி அழகழகான சம்பவங்களையெல்லாம் காட்சியாக்கிருக்காங்க…
நம்ம தமிழ்நாட்டிலயும் இது மாதிரி நெறைய இயற்கை ஆர்வலர்கள் அழகழகா படம் எடுத்துருக்காங்க…
நான் அப்பா வந்ததும் அதையெல்லாம் ஒனக்கு காட்டுறேன் சரியா…
குக்கு:
அம்மா தைகா காடுகள்னு ஏதோ சொன்னியே
அப்டினா என்ன, அது தமிழ்நாட்டுலயும் இருக்கா…
குக்குவின்
அம்மா: தைகாக் காடுகள் பூமியோட வட எல்லையில குளிர்ப்பிரதேசங்கள்ல தான் இருக்கு குக்கு…
நம்ம தமிழ்நாட்டுல தைகாக் காடுகள் இல்லடா. தைகா காடுகள் பனிக்காடுகள்னு அழைக்கப்படுது.
அங்க குளிர்காலத்துல ரொம்பக் குளிரா பனி ஒரைஞ்சு காணப்படும்… அங்கே ஊசியிலை மரங்கள்
தான் அதிகமா காணப்படுது…
குக்கு: அம்மா ஊசியிலை மரங்கள் எப்படி இருக்கும், நம்ம ஊர்ல
அது இருக்கா
குக்குவின்
அம்மா: நீ கிறிஸ்மஸ் மரம் பார்த்துருக்கீல குக்கு, அது மாதிரிதான் இன்னும் ஒயரமா பெருசா
இருக்கும், நம்ம நாட்டுல மலைப்பிரதேசங்கள்ல ஊசியிலை மரங்கள் இருக்கு… அதோட வடிவம் நம்ம
நெட்டிலிங்க மரம் இருக்கு பாத்தியா, மேல போகப்போக குறுகலா கூம்பு வடிவத்துல இருக்கும்ல
அது மாதிரிதான் இருக்கும்…
குக்கு: நெட்டிலிங்க மரம்
எனக்கு ரொம்பப்புடிக்கும்மா, அது மத்த மரங்கள் மாதிரி குண்டா இல்லாம ஒல்லியா இருக்கும்…
அம்மா தைகா காட்டுல உள்ள மரங்களோட பேரெல்லாம் சொல்றியா…
குக்குவின்
அம்மா: பனிக்காடுகள்ல பைன் மரங்கள், ஸ்புருஸ் மரங்கள், பிர்ச்,லார்ச் போன்ற வகை மரங்கள்
அதிகமா காணப்படும் ஓக், மேபிள், எல்ம், ஆல்டர், வில்லோ, பாப்ளார் போன்ற மரங்களும் காணப்படுது.
ரஷ்யக் கதைகள்ல பாப்ளார் மரங்கள் அதிகமா பேசப்பட்டுருக்கு…
குக்கு: அம்மா தைகாக்காடுகள்
எவ்வளவு பெருசா இருக்கும்…
குக்குவின்
அம்மா: தைகாக்காடுகள் ரொம்ப பெருசுடா. ஒலகத்தின்
17% நிலப்பரப்பு முழுவதும் தைகாக் காடுகள் தான் காணப்படுது இதோட பரப்பு 1.7 கோடி சதுர
கிலோமீட்டர் வட அமெரிக்காவின் கனடா, அலாஸ்காவுலேர்ந்து
ஜப்பான் வரை தைகாக் காடுகள் பரந்து காணப்படுது. ரஷ்யா, ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே,
எஸ்தோனியா, ஐஸ்லாந்து மங்கோலியா, சீனா, கஸகஸ்தான் ஆகிய நாடுகள்ல தைகா காடுகள் காணப்படுது.
ரஷ்யாவுல இருக்குற சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக்காடுகளா தான் இருக்கு.
(தொடரும்)
No comments:
Post a Comment