பால் எயின்சிக் ஒரு முதலாளித்துவ பொருளாதார அறிஞரா இருந்ததுனால அவர் பணத்தை நடுநிலையான ஊடகமா தான் பார்க்குறார். பணம், மூலதனத்தின் வர்க்க சார்பையும் அவரால புரிஞ்சுக்கமுடியல. தனியுடைமை சமூகத்தின் வளர்ந்த பரிவர்த்தனை ஊடகம் தான் பணம் என்பதையும் புரிஞ்சுக்கமுடியல. அதுனால தான் கீழ வரும் பத்திகள்ல பணத்தை ஒழிப்பது இன்னும் கம்யூனிசக் கொள்கையின் இறுதி நோக்கமாக இருக்கிறது என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும், ஒரு சோசலிச அரசில் பணவியல் அமைப்பைத் தக்கவைத்துக்கொள்வது இப்ப வசதியானது என்று கருதப்படுவதாகவும் விமர்சனம் செஞ்சிருக்குறாரு. ஆனா விசயம் என்னன்னா, கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில ஒரு நாட்டில் சோசலிசப் புரட்சி வெற்றியடைஞ்சாலும் கூட ஒரே நாள்ல ஒரு நாட்டை சோசலிச நாடா மாத்த முடியாது. முதலாளித்துவத்துக்கும், சோசலிசத்துக்கும் இடைப்பட்ட நிலையில இருக்குற இடைநிலை பொருளாதாரங்களில் பணம் இருக்கத் தான் செய்யும். இயங்கியல் அறிவு இருந்தா கருப்பு வெள்ளையா புரிஞ்சிக்குற போதாமைக்கு இடமே இருக்காது. இடைநிலை பொருளாதாரங்களில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு பணமே தேவையில்லை என்ற அளவுக்கு வளர்ச்சியடைஞ்சிருந்தாலும் கூட சுத்தியுள்ள நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக இருக்கும் வரை குறைந்த பட்சம் சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்காவது பணத்தின் தேவை இருக்கத்தான் செய்யும். அதே நேரம் பண்டமாற்றின் மூலமாவும் சர்வதேசப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கு. சோவியத் ரஷ்யாவின் ரூபிள், மத்த முதலாளித்துவ நாடுகளில் இருந்த பணங்களிலிருந்து மாறுபட்டது. சோவியத் ரூபிளோ, அதன் மூலம் திரட்டப்பட்ட மூலதனமோ மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுத்தப்படவில்லை. ஊக வணிகத்திற்கான ஊடகமாகவோ, பங்குச்சந்தை சூதாட்டத்திற்கான ஊடகமாகவோ சோவியத் ரூபிள் பயன்படுத்தப்படவில்லை. மத்த நாடுகளின் வளங்களை அந்நிய முதலீடுகளின் மூலம் சுரண்டுவதற்காகவும் சோவியத் ரூபிள் பயன்படுத்தப்படவில்லை. இதையெல்லாம் மனசுல வெச்சுக்குட்டு பால் எயின்சிக்கோட விமர்சனத்தைப் படிங்க. சரி இதுக்கு முன்னாடி தென் அமெரிக்காவின் இன்கா குடியரசுல திட்டமிட்டப் பொருளாதாரம் இருந்ததைப் பத்தி பாத்தோம். அதைத் தொடர்ந்து பணமில்லா சமூகங்களைப் பத்தி பால் எயின்சிக் என்ன சொல்றாருண்ணு இப்போ பாப்போம்.
பணமில்லா சமூகங்கள்:
“இன்கா பேரரசில்
நிலவிய பணமில்லாத அமைப்புக்கு ரொம்ப நெருக்கமான ஒரு அமைப்பு, 16, 17 ஆம் நூற்றாண்டுகளில்
பராகுவேயின் ஜெசுட் குடியரசில் செயல்பட்ட சர்வாதிகார அமைப்பாகும். ஓரளவு பெரியதாக இருந்த
அந்தச் சமூகத்துல, எந்த விதமான பணமும் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுது. தேநீர்
ஒருவித வரையறுக்கப்பட்ட பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டாலும்,
அந்தக் கூற்று ஒருபோதும் நிரூபிக்கப்படலை. ஜெசுட் பாதிரியார்களே பணத்தின் உதவியுடன்
ஒரு குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு வர்த்தகத்துல ஈடுபட்டாங்க, ஆனால் தங்களோட கட்டுப்பாட்டில்
இருந்த நாட்டை ஒரு திட்டமிடப்பட்ட பணமற்ற அடிப்படையில் ஒழுங்கமைச்சாங்க. லத்தீன் அமெரிக்காவின்
மத்த பகுதிகளில் வெற்றியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய இரக்கமற்ற, பேராசை கொண்ட
சாகசக்காரர்களால் இந்தியர்கள் சுரண்டப்படுவதிலிருந்தும் அழிக்கப்படுவதிலிருந்தும் அவர்களைப்
பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இன்கா பேரரசைப் பத்தி கிடைப்பதை விட, இந்த அமைப்பின்
செயல்பாடு குறித்த விரிவான தகவல்கள் குறைவாகவே கிடைக்குது. பெருவில் இருந்ததைப் போல
திட்டமிடல் அத்தகைய மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்பதும், பணமற்ற பொருளாதாரத்தில்
மத்திய அதிகாரத்தால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதோடு, பெரும்பாலும் பண்டமாற்று முறையின்
உதவியுடன் செயல்பட்டது என்பதும் சாத்தியமானதாகத் தெரியுது.
அமைப்பின்
போதாக்குறை காரணமாக இருந்ததா அல்லது அதன் போதுமானதாக இருந்தபோதிலும் நிகழ்ந்ததா என்பது
ஒருபுறம் இருக்க, இந்த ஆட்சியின் கீழ நாடு மிகக் குறைந்த உயிர்ப்புத்தன்மையையே காட்டியது
என்பதும், மேலும் கொடூரமான ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட கைப்பற்றப்பட்ட பெரு, பிற லத்தீன்
அமெரிக்கப் பிரதேசங்களைப் போலவே, ஏறக்குறைய அதே அளவிற்கு மக்கள் தொகை குறைந்து போனது
என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இருந்தாலும், பணமில்லாப் பொருளாதாரம் பல தலைமுறைகளாகத்
தொடர்ந்தது, அது சாத்தியமான ஒன்று என்பதைக் காட்டுகிறது. உண்மையில, ஜெசுட் பாதிரியார்கள்
தங்கள் வரம்பற்ற அதிகாரத்தை இழந்த பிறகும் கூட, அது பெருமளவு தொடர்ந்தது. 18 ஆம் நூற்றாண்டின்
இறுதியில, அனைத்துப் பொருட்களும் ஒன்றுக்கொன்று பண்டமாற்று செய்யப்பட்டன; மதகுருக்கள்,
பாதிரியார்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் சம்பளங்களும், அனைத்து வரிகளும் பொருள்களாகவே
செலுத்தப்பட்டன. அசுன்சியோனில் ஒரு இல்லத்தரசி கடைக்குச் செல்லும்போது, பருத்தி,
தேநீர், புகையிலை, சர்க்கரை, உப்பு போன்ற பல்வேறு பொருட்களைக் கொண்ட ஒரு கூடையைத் தன்னோட
எடுத்துட்டுப் போயிருக்காங்க. அவர் வாங்க விரும்பிய பொருட்களின் விற்பனையாளர்கள், தங்கள்
பொருட்களுக்கு இணையானவற்றை அவரது கூடையிலிருந்த பொருட்களிலிருந்து தேர்ந்தெடுத்துக்
கொண்டனர்.
19 ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியில நியூ லனார்க்கில் ராபர்ட் ஓவன் மேற்கொண்ட பரிசோதனையை, திட்டமிடப்பட்ட
பணமற்ற பொருளாதாரங்களின் பட்டியல்ல சேர்க்க முடியாது. ஏன்னா, அது வழக்கமான பண வடிவத்திற்குப்
பதிலாக உழைப்புச் சீட்டுகளை ஏற்றுக்கொள்றதன் மூலம், பழைய மதிப்புத் தர அளவுகோலுக்குப்
பதிலாக ஒரு புதிய மதிப்புத் தரஅளவுகோலுக்கு மாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.
1917 ஆம் ஆண்டு
கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு, சோவியத் ரஷ்யா ஒரு பணமற்ற பொருளாதாரத்தை நடைமுறைக்குக்
கொண்டுவரும் என்று நம்பப்பட்டது. எப்படியாயினும், தீவிரப் பணவீக்கத்தின் மூலம் ஏற்கனவே
இருந்த பணவியல் அமைப்பு அர்த்தமற்றதாக்கப்பட்ட விதத்திலிருந்து இது ஊகிக்கப்பட்டது.
இருப்பினும், அது ஒரு திட்டமிட்ட கொள்கையாக அல்லாமல், அப்போதைய சூழ்நிலைகளில் பற்றாக்குறைக்கு
நிதியளிப்பதற்கான ஒரே சாத்தியமான வழியாகவே செய்யப்பட்டது. உண்மையில், உள்நாட்டுப் போர்
முடிவடைந்து அரசியல், பொருளாதார நிலைமைகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு, உள்நாட்டுப் போர்க்
காலப் பணம் ஒரு புதிய பணவியல் அமைப்பால் மாற்றப்பட்டது. அந்த அமைப்பு, வெளித்தோற்றத்திலாவது,
முதலாளித்துவ நாடுகளில் செயல்படும் விதிகளுக்கு இணங்குவதாக இருந்தது. பணத்தை ஒழிப்பது
என்பது இன்னும் கம்யூனிசக் கொள்கையின் இறுதி நோக்கமாக இருக்கிறது என்று நம்புவதற்கு
எந்தக் காரணமும் இல்லை. அவ்வாறு செய்வது சாத்தியம் என்றாலும், ஒரு சோசலிச அரசில் பணவியல்
அமைப்பைத் தக்கவைத்துக்கொள்வது இப்போது வசதியானது என்று கருதப்படுது.”
(தொடரும்)

No comments:
Post a Comment