யம்மு பாட்டி: உலக அழகுப் போட்டியில நடுவர் குழு பேசுறதையே கேக்கமுடியாத அளவுக்கு கைதட்டுற சத்தம் பலமா இருந்துச்சு…
நடுவர்
குழு: இன்னும் விருது அறிவிப்புகள் முடிவடியல, அது முடிஞ்ச பெறகு இன்னும் நல்லா பலமா
கூட தட்டுங்க, ஆனா இப்ப நாங்க சொல்றது எல்லாருக்கும் கேக்கனும், அதுக்கு நீங்க தான்
அனுமதிக்கனும்… சரி
நடையழகுக்கான விருது பூனை, குதிரை, கரடி, சிறுத்தை, பென்குயின்,
மயில், செம்போத்து குழுவுக்கு
சிறகு அழகுக்கான விருது கழுகு, பருந்து, ஆந்தை, ஆல்பட்ரஸ், மக்கா,
அன்னம் குழுவுக்கு
கொம்பழகுக்கான விருது காளை, காட்டெருமை, பெருங்கொம்பாடு, கொம்பு
மான், சைகா மான், இபெக்ஸ் மான், அடாக்ஸ் மான், காண்டாமிருகம் குழுவுக்கு
ஏற்கெனவே அறிவிச்சதுல விடுபட்டது கண்ணழகுக்கான விருதுக் குழுவுல
டிக் டிக் மான், பைகா, தரை நாயும் இருக்காங்க…
விருதுகளை அறிவிச்சவுடனே
எல்லாரும் வந்து விருது வாங்கிட்டாங்க… அறிவிப்பு முடிஞ்சவுடனே ஓண்ணு அழுற சத்தம் கேட்டுச்சு…
முதலை கண்ணீர் வடிச்சுக்கிட்டே மேடைக்கு வந்துடுச்சு…
நடுவர்
குழு: என்னாச்சு ஏன் அழறீங்க
முதலை: எனக்கு சிரிப்பழகு
விருது கெடைக்கும்ணு நெனச்சேன், இப்டி ஏமாத்துவீங்கண்ணு நான் நெனக்கவேயில்ல… நல்லா
பல்ல காட்டுறவங்களுக்கு தான புன்னகையரசி பட்டம் கொடுக்குறீங்க, நான் என்ன கொறைச்சலாவா
காட்டுறேன்… என்னோட 110 பல்லையும் இல்ல காட்டுறேன், விருது கொடுக்கலைனா வழக்கு போடுவேன்…
நடுவர்
குழு: உங்களுக்கு கொடுத்தா சுறா மீனுக்கும் கொடுக்கனும், அவுங்களுக்கு கொஞ்ச நஞ்சம் இல்ல
3000 பல் இருக்கு… பெயர் விடுபட்டுருந்தா மன்னிச்சுக்கங்கண்ணு தான் சொல்லியிருந்தோமே
ஏன் புரிஞ்சுக்கமாட்டிங்கிறிங்க…. சரி தன்னோட பல்லழகுல முதலை வெச்சுருக்க நம்பிக்கைய
கொறைச்சு மதிப்பிட்டது தப்பு தான் சிரிப்பழகு விருதை முதலை, சுறா இருவருக்குமே அறிவிக்கிறோம்…
வாங்க வந்து வாங்கிக்கங்க…
சிங்கம்:
நான் ரெண்டு வார்த்தை பேசலாமா…
நடுவர்
குழு: நீங்க பேசாட்டி எப்புடி, நல்லா பேசுங்க…
சிங்கம்:
என்னோட சிகையழகுக்குக் காரணம் என்னண்ணு நெனைக்கிறீங்க… நானே சொல்லிடுறேன்… ஷாம்பு
போடாததுனால தான் என் முடி இவ்வளவு அழகா இருக்கு…
ஆசாமி:
அப்டிண்ணா நீங்க சிங்கமார்க் சீயக்காய் போடுறீங்களா…
சிங்கம்:
இந்த வாய்க் கொழுப்பு தான வேணாங்குறது, நான் சிங்கமார்க்கும் போடல, புளி மார்க்கும்
போடல, இந்த மாதிரி கண்டதெல்லாம் போட்டு என்னோட இயற்கை அழகை காலி பண்ணாம அப்டியே ச்சும்மா
விட்டுருவேன்… அது தான் என் அழகின் ரகசியம்… நடக்குறதெல்லாம் நானும் பாத்துக்குட்டு
தான் இருக்கேன்… லிப்ஸ்டிக் போட்டா தான் உதட்டுக்கு கான்ஃபிடன்ஸ் வரும்ணு சொல்றாங்க…
காஜல் போட்டா தான் கண்ணுக்கு கான்ஃபிடன்ஸ் வரும்ணு சொல்றாங்க, ஃபேசியல் பண்ணா தான்
மூஞ்சிக்கு கான்ஃபிடன்ஸ் வரும்ணு சொல்றாங்க, ஷாம்பு போட்டா தான் முடிக்கு கான்ஃபிடன்ஸ்
வரும்ணு சொல்றாங்க, எப்பா முடியல சத்தியமா சொல்றேன் தாங்கமுடியல… இதையெல்லாம் நம்பி
ஏமாந்துறாத கண்ணா… என்ன மாதிரி ஒன்னுமே பண்ணாம இயற்கை அழகோட ச்சும்மா சிங்கம் மாதிரி
மாஸ் காட்டுங்க… வரட்டா….
(தொடரும்)

No comments:
Post a Comment