பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட கறாரான பாலியல் ஒழுக்கத்தை, கணவன் ஒருவனோடு மட்டுமே உடலுறவு கொள்ளுற ஒழுக்கத்தை தான் கற்புன்னு சொல்லுறாங்க. ஆனா ஒரு பொண்ணு ‘கற்பை” இழக்குறதுக்கு கணவன் இல்லாத வேறொரு ஆணோட உடலுறவு வெச்சுக்குற அளவுக்குப் போகனும்னு அவசியமே இல்ல. அவ கணவனைத் தவிர வேறொருத்தன பார்த்தாலே போதும், மத்தவங்க தராசுப்பார்வைகளால தொடுக்குற கேள்விக்கணைகளே அவளை சாகடிச்சுடும். அதுக்குத் தான் எதுக்க வர்ற பஸ்ஸோ, ரயிலோ அடிச்சு நீ செத்தாலும் பரவால்ல, மவளே நீ குனிஞ்ச தலை நிமிரவேக்கூடாது ஜாக்கிரதைன்னு கட்டுப்பாடு போட்டுருக்காங்க. கணவனைத் தவிர வேறொருத்தனோட அவ பேசுனா அவ்ளோ தான் பேச்சுக்கே எடமில்ல, கதை முடிஞ்சுச்சு. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு பதிவிரதைகளா கணவனுக்கு அடிமைகளா மூளையில்லாத முட்டாள்களா இருக்குறவங்க தான் கற்புக்கரசிகளா போற்றப்படுறாங்க. கற்புக்கரசியா போற்றப்படுற கண்ணகிக்கு சிலை வெச்சு, கோவில் கட்டிக் கும்பிடுறாங்க. ஆனால் இந்த கற்புக்கரசிகளை விட உடலுறவு ஒழுக்கத்துல இன்னும் ரொம்ப ஒசத்தியான கற்புக்கரசிகள் இருக்காங்களா? இருக்குறாங்க, கேட்டா நீங்களே ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.
ஒரு பண்பட்ட ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி உடலுறவு என்பது மனம்
சார்ந்த உளவியலுடன் பிரிக்கமுடியாத காதலோடு இணைந்த ஒன்றாகத் தான் இருக்கு. கற்பு என்பது
உண்மையிலேயே உடலுறவு ஒழுக்கமாக இருந்துருந்தா அது தம்பதிகள், கணவன், மனைவி அல்லது காதலர்கள்
இருவருக்குமே பரஸ்பரமான ஒன்றாக, பொதுவானதாகத் தான் இருக்கமுடியுமே தவிர அது ஒரு தனி
நபருக்கான ஒழுக்கமா இருக்கவே முடியாது. ஏன்னா ரெண்டு நபர்கள், ஒரு ஆணும், பெண்ணும்
ஒன்னு சேர்ந்து உடலுறவுல ஈடுபட்டாங்கன்னா அதுல ஈடுபடுற ஆண் பல தாரப் பிரியராகவோ, பல
பெண்களை விரும்புறவராகவோ அல்லது ஒரு பொம்பளப் பொறுக்கியாகவோ இருக்கும் போது அவருடன்
உடலுறவுல ஈடுபடுற மனைவியால் மட்டும் எப்புடிங்க கற்புக்கரசியா இருக்க முடியும்? ஒன்னு
ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் உண்மையுள்ளவர்களாக கற்புள்ளவர்களா இருக்கமுடியும்,
அப்புடி இல்லைனா கற்பு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒன்னு ஆமாம் இல்லைனா இல்லை இதுல இடைநிலைக்கு
வாய்ப்பே இல்லை.
அது சரி இந்த கற்புக்கரசிகளை
விட உடலுறவு ஒழுக்கத்துல இன்னும் ரொம்ப ஒசத்தியான சிறந்த கற்புக்கரசிகள் இருக்காங்கன்னு
சொன்னிங்க. ஆனா அது யாருன்னு இன்னும் சொல்லவேயில்லையேன்னு கேக்குறீங்களா? இப்ப சொல்றேன்
கேளுங்க, கடலுயிரியான மட்டி (clam), நண்டு, இறாலுடன் நெருங்கிய
இனமான கொட்டலசு (Barnacle) இந்த ரெண்டுமே “hermaphrodite” எனப்படும் இருபாலுயிரிகள். இவை ரெண்டுமே கற்பனை செஞ்சு
கூட பார்க்கமுடியாத அளவுக்கு ஈடு இணையற்ற கற்புக்கரசிகளா வாழுறாங்க. இந்த கற்புக்கரசிகளோட
உடல்ல ஆணுருப்பும் இருக்கு, பெண்ணுருப்பும் இருக்கு. அதுனால இந்த கற்புக்கரசிகள் தன்னினத்தைச்
சேர்ந்த இன்னொரு விலங்கோட சேராம இருக்குறதால அவங்களோட இனப்பெருக்க உறுப்புக்கள் அசுத்தமடையாம,
தூய்மையை இழக்காம அக்மார்க் தர கற்போடு இருக்குது. இவங்க கற்பை இழக்குறதுக்கு
0.0001% கூட வாய்ப்பே இல்லை. அப்புறம் நம்ம மேரியம்மா கதையில தான் கன்னித்தாயா ஏசுவை பெத்தெடுத்தாங்க ஆனா
உண்மையிலே “கன்னித் தாய்களாவே கொழந்தை பெத்துக்குற
சில வகை விலங்குகள் இருக்குறாங்க.கொமடோ டிராகன் உடும்புகள், சில வகை பல்லிகள், நீர்ப்பூச்சி,
அசுவினிப் பூச்சி, குச்சிப் பூச்சி இதுங்க எல்லாம் பரிசுத்தமான கன்னித் தாய்களா புள்ளை
பெத்துக்குறாங்க. அதுனால கண்ணகிகளை விட உயர்தனிச் சிறப்புடைய கற்புக்கரசிகள் மட்டியும்,
கொட்டலசும், அப்புறம் மேல சொன்ன கன்னித்தாய்களும் தாங்க. அதுனால கற்புக்கரசிகளுக்காக சிலை வைக்கனும்னா நீங்க
இவுங்களுக்குத்தான் சிலை வைக்கனும்.
(தொடரும்)
No comments:
Post a Comment