“அஞ்சறிவு”ள்ள விலங்குகள் எல்லாம் தங்களோட சொந்தத்துக்குள்ள ஜோடி சேராம வெளில தான் இணையைத் தேடுதுங்க. ஒங்க வீட்டுல இருக்கே எலி அது கூட சொந்தத்துக்குள்ள இணையைத் தேடுறதுல்ல. எலி, வெள்ளெலி, யானை, சிங்கம், ஓநாய், சிம்பன்சி உட்பட வாலில்லா குரங்குகள் என பல விலங்குகள் சொந்தத்தை விட்டு வெளில தான் இணையைத் தேர்ந்தெடுக்குதுங்க. அந்த “அஞ்சறிவு”ள்ள விலங்குகள் எல்லாம் இயற்கைத் தேர்வின் படி முற்போக்கா செயல்படுறாங்க, பரிணாம வளர்ச்சி அடையுறாங்க. ஆனா ஆறறிவுள்ள மனுசன் இயற்கைத் தேர்வுக்கு புறம்பா படுபிற்போக்கா சாதிக்குள்ளே கல்யாணம் பண்ணிக்குறது எவ்வளவு பெரிய அவமானம். பரிணாம அறிவியலோட தந்தை சார்லஸ் டார்வின் இப்ப உயிரோட இருந்தா நம்மள பாத்து காறித்துப்பமாட்டாரா? ஏண்டா ஒன் வீட்டுல உள்ள எலியே ஒன்ன பாத்து சிரிக்குறமாதிரி இருக்கியே?, வீட்டுல உள்ள எலி, காட்டுல உள்ள சிம்பன்சி எல்லாம் ஒன்னை விட முற்போக்கா இருக்கே, ஒன்னை பார்த்து சிரிக்குதே, இந்த அளவுக்கு கேவலப்பட்டு போயிட்டியே, ஒனக்கு வெக்கமாவே இல்லையா, ஒன்னால மனித இனத்துக்கே அவமானம், ஒன் ஆறாவது அறிவ சாதிக்கிட்ட அடகு வெச்சுட்டியான்னு கேக்கமாட்டாரா? மொதல்ல சாதியை விட்டு வெளில வந்து மனுசனா லட்சணமா வாழ கத்துக்கடான்னு சொல்லமாட்டாரா? இந்த அவமானம் நமக்கு தேவையா? இவ்வளவு கேவலப்பட்டவங்களா நாம இருக்கனுமா? வேணாங்க, வேணவே வேணாம், போதுங்க, நாம அவமானப்பட்டது போதும், நாம திருந்துவோம். நம்மளை மாத்திக்குவோம். சாதிய விட்டு வெளில வந்து மனுசனா சுயமரியாதையோட வாழுவோம்.
சாதித்
திருமணங்களால இன்னும் என்னென்ன பிரச்சினையெல்லாம் இருக்கோ? இன்னும் என்னென்ன வியாதியெல்லாம்
வருமோ? யாருக்குத் தெரியும்? இந்திய மக்களை முழுமையா ஆய்வு செஞ்சா தான் அதெல்லாம் அம்பலமாகும்.
இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2800க்கும்
மேற்பட்ட நபர்களோட மரபணு மாதிரிகளை வெச்சு சிசிஎம்பியைச் சேர்ந்த டாக்டர் கே தங்கராஜ்
தலைமையில செஞ்ச ஆய்வு ஒரு சிறு துளி மாதிரி தான். அதுலயே சாதித்திருமணங்களால வரக்கூடிய
பாதிப்புகள பத்தி இந்தளவுக்கு தெரியவந்துருக்குன்னா, இந்தியாவுல உள்ள எல்லா சாதியினரையும் ஆய்வு செஞ்சாங்கன்னு இன்னும்
எவ்வளவு பிரச்சினைகள் தெரியவரும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க?. செய்யவேண்டிய இந்த
ஆய்வுகளோட முடிவுகள நாம இப்போதைக்குத் தெரிஞ்சுக்கமுடியாது. இதுவே ஒரு நல்ல மக்கள்
நல அரசோட ஆட்சியில நீங்க இருந்தீங்கன்னா அரசே அந்த ஆய்வுகள ஊக்குவிச்சு துரிதப்படுத்திருக்கும்.
இந்த ஆய்வுகளோட முடிவுகள் எல்லாம் எப்பவோ ஒங்களுக்கு தெரியவந்துருக்கும். ஆனா உயர்சாதிகளோட
மேலாதிக்கத்தையே நிரந்தரமாக்குறதுக்காக 13 வருசமா சாதிக் கணக்கெடுப்பையே பண்ணாம, இடஒதுக்கீட்டையே
காலிசெய்யப் பாக்குற கேவலப்பட்ட பாஜக ஆட்சிக்கிட்ட இதையெல்லாம் நீங்க எதிர்பாக்கமுடியுமா?.
இந்த ஆராய்ச்சி செஞ்சவங்கள எல்லாம் பாஜக அரசு ஜெயில்ல தள்ளாம இருக்குறதே பெரிய அதிசயம்
தான். அதுனால இந்த ஆய்வுமுடிவுகள் வரட்டும் அப்புறம் பாத்துக்குவோம்னு விட்டாத்தியா
இருந்துடாதிங்க. சாதிக்குள்ளயே மொடங்கிக் கெடக்காம வெளில வந்து சந்தோசமா மூச்ச விடுங்க.
கல்யாணம்னு வந்துட்டா சட்டு புட்டுனு சாதி மறுப்பு கல்யாணத்த செஞ்சுக்கங்க. சாதி மறுப்பு
கல்யாணத்துக்கு குறுக்க நிக்காம நீங்களே அத செஞ்சுவைங்க.
(தொடரும்)
No comments:
Post a Comment