உலக அளவுல ஆதிகால சமூகங்கள் தாய்வழிச்சமூகங்களா இருந்ததை பல மானுடவியலாளர்கள் அங்கீகரிக்க மறுக்குறாங்க. தாய்வழிச் சமூகங்கள் எங்குமே இருந்ததுல்ல, இயற்கையில மனித சமூகங்கள் எப்பவுமே தந்தைவழி சமூகங்களா தான் இருந்துருக்குன்னு வரலாற்றைத் திரிக்கிறாங்க. அட பாவிகளா நிகழ்காலத்துல தான் ஒங்களால பெண்களோட சமூக முக்கியத்துவத்தை ஏத்துக்க முடியலைனு பாத்தா, பெண்களோட வரலாற்றுப் பங்களிப்பைக் கூட இருட்டடிப்பு செய்யுற அளவுக்கா ஆணாதிக்கவாதிகளா இருப்பீங்க!. பெண்களோட சமத்துவமற்ற சமூகநிலையையும், ஆணாதிக்கத்தையும், வர்க்கப் பிரிவினைகளையும் இயற்கையானதாக நியாயப்படுத்தக்கூடிய இந்த கணவான்கள் விட்டா ஆதிகாலத்துல ஆண்கள் தான் கொழந்தை பெத்தாங்கன்னு கதைகட்ட கூட தயங்கமாட்டாங்க. இவங்க மார்கனோட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளையும் அங்கீகரிக்க மறுக்குறாங்க.
வர்க்க பிரிவினையில்லாத
சமத்துவமான ஆதிப்பொதுவுடைமை சமூகங்கள் தான் பிற்காலத்துல வர்க்கப் பிரிவினையுடைய சமத்துவமற்ற
சமூகங்களா மாறியிருக்கு என்பதை சான்றாதாரங்களோட விளக்கும் மார்கனின் பண்டைய சமூகம்
வருங்காலம் சோஷலிசத்துக்கானது என்பதை பறைசாற்றுவதா இருந்துச்சு. மார்கனின் படைப்பை
அங்கீகரிச்சு ஊக்குவிச்சா சோசலிச சிந்தனைகளும், நடைமுறைகளும் காட்டுத்தீ போல பரவிடுமேன்னு
எச்சரிக்கையடைஞ்ச முதலாளித்துவ ஆதரவாளர்கள் மார்கனோட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை
அங்கீகரிக்காம அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இருட்டடிப்பு செஞ்சிருக்காங்க.
ஆரம்பகால சமூகங்களைப்
பற்றி ஆய்வு செஞ்சு மார்கன் கண்டடைஞ்ச முடிவுகள், மார்க்ஸ் வரலாற்றுப்பொருள்முதல்வாதத்தின்
மூலமா சமூக பரிணாமம் பற்றி கொடுத்த தத்துவார்த்த முடிவுகளுடன் ஒன்றுபட்டதா இருந்துருக்கு.
மார்கனின் ஆராய்ச்சியும், விஞ்ஞானக்
கண்ணோட்டமும் பரிணாம உயிரியலில் டார்வினின் பணியைப் போலவே மானுடவியலில் ஒரு புரட்சியை
உருவாக்குனுச்சு.
"ஏன்னா,
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாடி மார்க்ஸ் கண்டுபிச்ச வரலாற்றின் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தை
அமெரிக்காவுல தனது வழியில் புதுசா கண்டுபிடிச்சார் மார்கன், அதோட காட்டுமிராண்டித்தனத்தையும்,
நாகரீகத்தையும் ஒப்பிடும்போது அது அவரை முக்கிய கருத்துக்கள்ல மார்க்சின் அதே முடிவுகளுக்கு
இட்டுச் சென்றது"ன்னு எங்கெல்ஸ் சொல்லியிருக்காரு.
அமெரிக்க மானுடவியலாளர்
மார்கனின் பணியால் கார்ல்மார்க்ஸ் பெரிதும் ஈர்க்கப்பட்டாராம், 1880-1881 காலகட்டத்துல
மார்க்ஸ் தன்னோட குறிப்பேடுகள்ல மார்கனின் பண்டைய சமூகத்தை சுருக்கமான குறிப்புகளா
எடுத்துவெச்சுருந்தார், பின்னாடி கார்ல்மார்க்ஸின் இனவியல் குறிப்பேடுகளாக அது வெளியிடப்பட்டுச்சு.
மார்கனின் கண்டுபிடிப்புகளோட முழு முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமா அதைப்பத்தி
எழுதனும்னு தான் மார்க்ஸ் நெனச்சிருந்தார், ஆனால் மூலதனம் எழுதும் பணியே அவரை முழு
நேரமும் ஆக்கிரமிச்சிச்சுடுச்சு, உடல்நலக்குறைவும் ஏற்பட்டுச்சு, அதுனால தான் நெனைச்சதை
செய்யமுடியாமலே 1883ல் அவர் இறந்ததுனால, அவர் விட்டுச்சென்ற பணி உயிர் தோழர் எங்கெல்ஸால
திறம்பட செஞ்சு முடிக்கப்பட்டுச்சு. மார்க்ஸ் இறந்த ஒரு வருசத்துக்குள்ள 1884ல “குடும்பம்,
தனிச் சொத்து மற்றும் அரசின் தோற்றம்” என்ற அந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க புத்தகம்
எங்கெல்ஸால வெளியிடப்பட்டுச்சு.
(தொடரும்)
No comments:
Post a Comment