Wednesday, February 28, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (18):

 

நான் நல்லவன் கெடையாது, அரசியல்ல நல்லவனுக்கு வேலை கெடையாதுண்ணு அண்ணாமலை சொல்லிருக்காருல்ல, அது நூத்துக்கு நூறு பச்ச உண்மைங்க… அது அவருக்கு மட்டுமில்ல, அந்த பாஜக-ஆர்.எஸ்.எஸ் சங்க்பரிவார் சங்கிக்கும்பல் மொத்தத்துக்கும், பொருந்தும், எனக்கு தெரிஞ்சு அண்ணாமலை சொன்ன ஒரே ஒரு உண்மை இது தானுங்க, மத்தபடி அவரு வாய தொறந்தாருண்ணா பொய்யும், பசப்பும் தானுங்க. சங்கிகளுக்கு அடி நாக்கிலே விசம் இருந்தாலும் நுனி நாக்குல அமுதமா தான் வரும், நாம தான் ஜாக்கிரதையா இருக்கோணும்.

அது என்ன என்னமோ வட்டியோட திருப்பிக்கொடுப்போம்ணு சொல்லிருக்காரே என்னது அது… அரசியல கந்துவட்டி வாங்குற பிஸினஸ் மாதிரி நெனச்சா, என்ன தான் மறைச்சாலும், பேச்சு அப்படித்தான வரும். அது என்னமோ என் மண், என் மக்கள்னு ஒரு பயணம் போனாறாமே, எது அவரு மண்ணு, யாரு அவுக மக்கள்?, பந்திக்கு முந்தி படைக்கு பிந்திண்ணு ஓடி ஒளிஞ்சு காட்டிக்கொடுத்தாணுகளே, அந்த களவாணிப்பயலுக சாவர்க்கர், கோல்வார்கர் வகையறாவோட சங்க் பரிவார்-ஆர்.எஸ்.எஸ் தோண்டுற பொதைகுழி இருக்கு பாத்தீங்களா, அங்க தான் இருக்கு அவரோட மண்ணு… அதுல அவரு விழுந்துட்டாரு, இப்ப நம்மளையும் விழச்சொல்லுறாரு, நாசமா போச்சு… யாரு தெரியுமா இந்த அண்ணாமலை… சங்க்பரிவார், ஆர்.எஸ்.எஸ் ஆதரவோட குடிமைப்பணிதேர்வுக்கு (சிவில் சர்வீஸ் எக்சாம்) கோச்சிங்க் கொடுக்குற சம்கல்ப் ஃபவுண்டேசன்ல வெசம் குடிச்சு வளந்தவரு தான் இந்த அண்ணாமலை, ஆட்சிய பாஜக புடிச்சாலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எல்லாம் நல்லவங்களா முற்போக்கான சிந்தனையோட வந்தா என்னய்யா பண்றது, நாட்டை நம்ம நெனக்கிற மாதிரி வளைக்கமுடியாதே அப்ப அவணுகளையும் சங்கிகளா மாத்தவேண்டியது தாண்ணு கோச்சிங்குற பேருல விசத்தை விதைக்கிற பணியை சில பத்தாண்டுகளா கனக்கச்சிதமா சம்கல்ப் பண்ணிட்டு வருதுல்ல… அவுக இண்டர்வியூவுக்காக ஸ்பெசலா இந்துத்துவா கோச்சிங்க் கொடுக்குறாகலாம்ல. சம்கல்ப் ஃபவுண்டேசன் ‘ராஷ்டிரிய பாவ்னா’ என்ற பேருல இந்துத்துவ செண்டிமெண்டுகள ஊட்டிவளக்குதாம். குடிமைப்பணிதேர்வுல வெற்றிபெற்றவுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் (சஹ் சர்கார்யவாஹ்) கிருஷ்ண கோபால் சங்கிசேவை பண்ணுங்கப்பாண்ணு விரிவுரை எடுத்தாராம். இவுக நிகழ்ச்சிகள்ல அமித்ஷா உட்பட சங்கி வகையறா எல்லாம் கலந்துக்குறாக. அவுகளோட யூட்யூப் சேனல்ல நம்ம உள்ளூர் சங்கி ஆளுநர் என்.ரவி பேசியிருக்குறார்னா பாத்துக்கங்களேன். சம்கல்ப் ஃபவுண்டேசனுக்கு மீடியா பப்ளிசிடி அதான் ஊடக வெளிச்சம் எல்லாம் புடிக்காதாம். ஏன் உண்மையெல்லாம், அவுகளோட அயோக்கியத்தனம் எல்லாம் அம்பலமாயிடும்ல, அதான்… அதுனால வெளிய தெரியாம வேலைய கமுக்கமா முடிச்சுருவாகலாம். சம்கல்ப் ஃபவுண்டேசனுக்கு இந்தியா முழுக்க கிளைகள் இருக்காம். இந்தியாவுல அரசுபணித்துறை அதிகாரத்துறைய (Bureaucracy) இப்புடித்தான் சங்கிமயம் ஆக்கிருக்காக…

சரி அவுக மக்கள் யாரு தெரியுமா, பிளேடு பக்கிரி, அருவா ஆறுமுகம், கத்தி கஜா, ரவுடி ரவி, குண்டு கோபி, பீடி ரமேஷ், பட்ட பாலாஜி, புல்லட் பாண்டி, கஞ்சா கபாலி, பான் பராக் பாபு, திருட்டு தினேஷ், சவுக்கு சேகர், சங்கிலி சோமு, துப்பாக்கி துரை, போக்கிரி ராஜா இந்த மாதிரி ஆளுக தான், மொள்ளமாரி, முடுச்சவிக்கி, சோமாரி தாதா, ரவுடி கும்பல் தான் இப்ப தமிழ் நாட்டு பாஜகவுல சேர்ந்துருக்காக, இவுக தான் அண்ணாமலையோட மக்கள். சில போலிசும் களவாணிப்பயலுகளும் நல்லா தோஸ்தா இருப்பாகண்ணு சொல்லுவாகலே… அது அண்ணாமலைக்கு அட்டகாசமா பொருந்துதுல்ல… பின்ன பாஜகவுக்கு அடியாளுகள் எல்லாம் வேணாம, அத வெச்சுத்தான அரசியல்ல நல்லா பிசினஸ் பண்ண முடியும். இந்த ஊரு வம்பு பேசுறதெல்லாம் நமக்கு புடிக்காதுப்பா. எனக்கு வேல கெடக்கு நான் வார்றேன்…

(தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...