கோயம்புத்தூர்ல பெரிய பெரிய ஆளுக எல்லாம் பாஜகவுல சேரப்போராகண்ணு பெருசா வெளம்பரம் கொடுத்தாகளே, அப்புறம் ஏன் அத ஒத்திவெச்சுட்டாக… வேற என்ன பண்றது, அட அங்க ஒரு கழுத கூட வரலங்குறேன்… கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல, பேராசை பெரு நஷ்டமாயிடுச்சு… அப்புறம் அண்ணாமலை பயணத்தோட நிறைவு விழாவுக்கு மோடி வந்தாராமுல்ல, எங்கப்பன் குதுருக்குள்ள இல்லண்ணு சொல்லுற மாதிரி நாங்க கட்சிகள பிரிக்கிறதுல்லைன்னு சொல்லிருக்காருல்ல மோடி. இந்த விளக்கம் தேவையா, நீங்க கட்சில எப்புடி ஆளு சேக்குறீகங்குற லட்சணத்த பாத்துத் தான் ஊரே சிரிக்குதே… இவய்ங்க வெளில பாக்க தான் சாமியார் மாதிரி இருப்பாய்ங்க, ஆனா செயலுல அக்மார்க் தாதா வகையறா தான், அதுல அந்த தாவூத் தம்பி கூட இவுக பக்கத்துல நிக்கமுடியாதுல்ல. பாஜக எப்புடி ஆளு சேர்க்குறாக, அதுவும் குறிப்பா எதிர்க்கட்சிகள ரணகளம் பண்ணி அங்க உள்ள ஆளுகள எப்படி வெலைக்கு வாங்குறாக. எல்லாம் அமலாக்கத்துறைய வெச்சுத்தான், அமலாக்கத்துறை எதுக்கு இருக்கு யார் ஊழல் குற்றம் செஞ்சாலும் நடுநிலைத்தன்மையோட அவுகள விசாரிச்சு நடவடிக்கை எடுத்து ஊழலைத் தடுக்குறதுக்காக இருக்கு. ஆனா அத பாஜக தன்னோட எதிரிகள அழிக்குறதுக்கான ஆயுதமா தவறாதான பயன்படுத்துது. அவுகளுக்கு பாஜக ஒடைச்சா மண் குடம், காங்கிரஸ் ஒடைச்சா பொன் குடம்… அவுக எதிர்கட்சிண்ணா கடுகு போன இடம் ஆராய்வாக, ஆனா பாஜகவுல பூசணிக்காய் போன இடம் தெரியாது. இது தான் அவுகளோட நடுநிலைத்தன்மைங்கோ…
எதிர்க்கட்சி
ஆளுகள, ஏய் இந்தாடா பாஜகவுல சேர்ந்துடு இல்லண்ணா என்ன பண்ணுவோம் தெரியுமுல்ல, நீ ஊழல்
குற்றம் பண்ணுனியோ, பண்ணலையோ அத பத்தி எங்களுக்கு கவல இல்ல, ஒன் மேல ரெய்டு விடுவோம், அதுனால ஒழுங்கு மருவாதையா
பாஜகவுல சேர்ந்துடு, இல்லன்னா மானம் மரியாத கெட்டுரும், சந்தி சிரிக்கவெச்சுடுவோம்,
இப்புடித்தான் எல்லாரையும் மெரட்டி, பயமுருத்தி பாஜகவுல சேக்குறாக. காவல் துறையிலேருந்து
போதை தடுப்பு ஆணையம் வரை எல்லா அரசு அதிகார அமைப்புகளையும் எதிர் கட்சிகள குதுரை பேரத்துல
வாங்குறதுக்கான புரோக்கரா பயன்படுத்துறாக. பதவி ஆசை காட்டியும் ஆளு சேக்குறாக, கோட்டையப் புடிக்க வீட்டையே வித்த கதையா நம்பிக்கைத்துரோகம்
பண்ணி பாஜகவுக்கு போற பலபேர் அய்யோ பாவம் கடைசில ஏமாறத்தான் போறாக… இந்த மாதிரி பல
திணுசா வித விதமா எல்லாமே தவறான விதத்துல தான் ஆளுகள சேக்குறாக…
சரி
அது என்ன, மோடிக்கும் பாஜகவுக்கும் தமிழ்நாட்டு மேலயும், தமிழ் மக்கள் மேலயும் ஏன்
திடீர்னு இம்பூட்டு அக்கறை பொத்துக்குட்டு வருது, மனுசனுக்கு எது கெடக்கலையோ அது மேல
தான நெனப்பெல்லாம் இருக்கும், அது மாதிரித்தான் இதுவும், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவ
சீண்டக்கூட மாட்டீங்குறாக, அத நெனச்சு நெனச்சு, பாஜகவுக்கு ரொம்ப வெளமா வருது, எப்புடியாச்சும்,
தமிழ்நாட்டுல தடம்பபதிக்கணும், எடம் புடிக்கணும்னு தவிக்குறாக. அவுக நல்லவுக இல்லைனு
தான் அவுக வாயாலே சொல்லிட்டாக, இப்புடிப்பட்டவுக ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவாக ஆட்டையத்தான்
போடுவுகா… ஏற்கெனவே போட்டது பத்தாதா தம்பியளா… தமிழ்நாட்டு மக்கள் புயல், வெள்ளம் வந்து
கஷ்டப்படும்போதெல்லாம் இந்த மோடி அய்யா சல்லிக்காசு கூட குடுக்கல, ஆனா சவார்க்கார்,
கோல்வால்கர் நினைவு தினத்துல உருகி உருகி அழுது கண்ணீர் வடிக்கிறாரு, காந்திய கொன்ன
கோட்சேவுக்கு கொடி புடிக்குறாரு, …. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான், பாஜகவோட
இந்த புது ஒன்சைட் மோகம் எல்லாம் தமிழ்நாட்டுல ஒரு சீட்டு கெடைக்கிற வரைக்கும் தான்…
கெடச்சுச்சுண்ணா பாஜகவோட போலி அக்கறையெல்லாம் காத்தோட காத்தா பறந்துரும்ல… அது இந்த
சென்மத்துல நடக்கப்போறதுல்ல... தமிழ் நாட்டு மக்கள் பச்ச தண்ணி மாதிரி, தாமரை இலையில
தண்ணி என்னெக்குமே ஒட்டாதுடோய்…
அய்யா
மோடி, நீங்க துவாரகா தரிசணம் பண்றேண்ணு கடலுக்குள்ள என்ன தான் தலைகீழா நின்னு பல்டி
அடிச்சு, ஸ்டண்ட் அடிச்சாலும் இந்த தடவ ஒண்ணுமே நடக்காதுங்கோ, மக்கள் ரொம்ப தெளிவா
இருக்காக, இந்த முறை ஒங்க ஆகாசத்தாமரை பூக்காது, அதுனால ஒரு நல்ல ஆசுரமா பாத்து சேருறதுக்கு
அட்வான்ஸா புக் பண்ணிடுங்கோ.
(தொடரும்)