ஆதிப் பண அமைப்புகளில் உள்ள பொருட்களில் ஆதிவாசி மனங்களை
ஈர்க்கும் கனமான அல்லது எடையுள்ளப் பொருட்களைக் கண்டறிந்துள்ளோம், பணப் பயன்பாட்டிற்காகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய ஆபரணங்களும் உள்ளன. ஏனெனில் அவை வைத்திருப்பவர்கள் அதிக
எண்ணிக்கையில் அவற்றை கொண்டு செல்வதற்கு ஏற்றதாக உள்ளன. அன்றாட வாழ்வில் நடைமுறைப்
பயன்பாட்டிற்கான பொருட்களையும் நாம் காண்கிறோம், ஆனபோதும் அபத்தமான மற்றும் பயனற்ற
பொருள்களும் உள்ளன. ஆதிப் பணத்தில் அன்றாட பயன்பாட்டில் உள்ள முக்கிய பொருட்கள் உள்ளன.
ஏனென்றால் அவர்கள் அவற்றை நாளுக்கு நாள் கையாளுவதால் அவற்றில் வெளிப்படுத்தப்பட்ட மதிப்புகளின்
பொருளை புரிந்து கொள்ளமுடியும் என்பதால் சம்பந்தப்பட்ட சமூகங்கள் அவற்றைத் தேர்ந்தெடுக்கின்றன.
மறுபுறம், மதிப்புகளை அளக்கப் பயன்படும் கற்பனையான பண அலகுகளையும் சந்திக்கிறோம். அவற்றிற்கு
திடமான இருப்பு இல்லை என்றாலும. சில சமூகங்கள் அவற்றை பயன்படுத்துகின்றன. பொதுவாக பயன்படுத்தப்படும
பாத்திரங்கள், அல்லது கருவிகள், அல்லது ஆயுதங்கள் ஆகிய பொருட்களைப் சில சமூகங்கள் பணமாகப்
பயன்படுத்துகின்றன. சில சமூகங்கள் மர்மம் சூழ்ந்த பொருட்களை பணமாகப் பயன்படுத்துகின்றன.
சில பணங்கள் கீழே குனிந்து பொறுக்குவது போல பெரிய அளவில் எளிதில் கிடைக்கலாம், மற்றவை
மிகவும் அரிதானவை, அவற்றை சேகரிப்பதற்கு அல்லது உற்பத்தி செய்வதற்கு பெரும் முயற்சி
தேவைப்படுகிறது. பண நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு மத்தியில் மூலப்பொருட்கள்
அல்லது தோராயமாக செய்து முடிக்கப்பட்ட கச்சா
பொருட்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுணுக்கத்துடன் செய்து முடிக்கப்பட்ட பொருட்களும்
பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை உற்பத்தி செய்ய பெரும் கவனமும், திறனும் தேவைப்படுகிறது.
ஆதிப் பணத்தில் சில அருவருப்பூட்டும் பொருள்களும் அடங்கும். அழகும் கலை நயமும் மிக்க
சில படைப்புகளும் உள்ளன. சில ஆதிப்பணங்களின் தேர்வுகளும், பயன்பாடும் ஆழ்மனத்தின் நகைச்சுவையைக்
குறிக்கின்றன; மற்றவை துன்பியலையும், மிருகத்தனத்தையும்
குறிப்பவையாக உள்ளன.
பயனாளர்களின்
மதிப்பு குறித்த வளர்ச்சியடையாத உணர்வுக்கு ஏற்ப தோராயமாக மட்டுமே மதிப்புகளை அளவிடும்
சில பணங்கள் உள்ளன. மிகவும் துல்லியமான தரத்துடன் கூடிய பல நாணயங்களும் இருந்தன. மதிப்புமிக்கது
என்பதால் பல பொருட்கள் நாணயங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன; மற்றவை முற்றிலும் பயனற்றவை,
அவை பயன்படுத்தப்பட்ட பணப் பயன்பாட்டிலிருந்து மட்டுமே மதிப்பைப் பெறுகின்றன. பெருமளவில்
சீரான ஒத்த தன்மையுடைய அலகுகளைக் கொண்ட சில பணங்களும் இருந்துள்ளன. அவை ஒரு கையிலிருந்து
கைக்கு மாறும் போது எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்
அவை பேச்சுவார்த்தை மூலம் கை மாறுகின்றன. எடைபோட வேண்டிய அல்லது அளவிடவேண்டிய மற்ற
பணங்களும் உள்ளன. அவை கட்டணமாக பயன்படுத்தப்படும் போது அவற்றின் தரம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
மதிப்பீடு செய்யப்பட வேண்டும் அல்லது சோதிக்கப்பட வேண்டும்
நவீன
பொருளாதார நிபுணர் இன்றியமையாததாகக் கருதும் பணவியல் அம்சங்களை ஆதிப் பணம் எந்த அளவிற்கு
கொண்டுள்ளது என்பது அறுதி வரம்புகளுக்குள் மாறுபடும் என்கிறார் பால் எயின்சிக்.
(தொடரும்)