பண்டங்கள் பல காரணங்களுக்காக விருப்பமான பண்டமாற்றுப் பொருட்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன - சில அவற்றை வசதியாகவும் எளிதாகவும் சேமித்து வைக்கமுடியும் என்பதற்காகவும், சில அதிக மதிப்பு அடர்த்தியுடன் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியவையாய் இருந்தன என்பதற்காகவும், சில அவை விரைவில் கெடாமல் நீண்ட நாள் நீடித்திருந்தன என்பதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த பண்புகளை விருப்பமான பண்டம் எவ்வளவு அதிகமாகக் கொண்டுள்ளதோ, அந்த அளவுக்கு பண்டமாற்றில் விருப்பமான பரிவர்த்தனை பொருளாக இருந்திருக்கும் என்கிறார் க்ளின் டேவிஸ்.
ஆனால்
தர்க்க அடிப்படையில் இது சரியான வாதம் என்ற போதிலும் எல்லா சமூகங்களும் ஒரே மாதிரி
தேர்வு செய்யவில்லை. மேற்குறிப்பிட்ட பண்புகள் எதையும் பெற்றிருக்காத போதிலும், சில
பொருட்கள் சில சமூகங்களில் எந்தப் பயனுள்ளக் காரணமும் இல்லாமலே விருப்பமானப் பொருட்களாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்றுள்ள நவீன மனிதர்களைப் போல் பகுத்தறிவு அடிப்படையில்
எதையும் அலசி ஆராய்ந்து தேர்வுசெய்பவர்களாக ஆதிமனிதர்கள் இல்லை என்பதால் சில சமயங்களில்
அவர்கள் தங்கள் மனம் போனபோக்கிலும் தேர்வுகளை செய்திருக்கலாம்.
வசதியான இடங்களில் நிறுவப்பட்ட சந்தைகள் அமைக்கப்பட்டடது பண்டமாற்று முறையில் மிகவும் முன்னோக்கிய மதிப்புமிக்க வளர்ச்சி படியாக இருக்கலாம். பெரும்பாலும் இத்தகைய சந்தைகள் பணம் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நிறுவப்பட்டிருந்தன, ஆனால் பணம் அதிக பயன்பாட்டிற்கு வந்தபின் அவை நிச்சயமாக வலுப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. பல சந்தர்ப்பங்களில் பணம் வர்த்தகம் தவிர வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாகவே இருந்து வந்தது. காலப்போக்கில் பணம் பண்டமாற்று செய்வதை விட கணிசமான நன்மைகளை அளிப்பதாக இருந்தது, மேலும் படிப்படியாக பெரும்பங்கு வகிக்கத் தொடங்கியது, அதே நேரத்தில் பண்டமாற்றின் பயன்பாடும் அதற்கேற்ப குறைந்துவிட்டது, இறுதியில் பொதுவாக பண அமைப்பு சிதைவுறும் நேரங்களில் சிறப்பு சூழ்நிலைகளில் பண அமைப்பை விட வலுவான பண்டமாற்று மீண்டும் வெளிப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகள் அவ்வப்போது உருவாவது இன்றுவரை தொடர்கின்றன என்கிறார் க்ளின் டேவிஸ்.
பண்டமாற்று
முறையை கையாண்ட ஆதிசமூகங்கள் எவ்வாறு பணமுறைக்கு மாறின என்ன வரிசைக்கிரமத்தில் அவை
நடந்திருக்கும் என்பது இயல்பாகவே தோன்றும் கேள்வி இதற்கு க்ளின் டேவிஸ் சொல்கிறார்:
சில சந்தர்ப்பங்களில் சமூகங்கள் பண்டமாற்று
முறையிலிருந்து
நவீன
பணத்திற்கு
நேரடியாக
சென்றதாகத்
தோன்றுகிறது.
இருப்பினும்,
பெரும்பாலான
நிகழ்வுகளில்
தர்க்கரீதியான
வரிசை
(பண்டமாற்று,
பண்டமாற்றுடன்
ஆதிப்
பணம்,
ஆதிப்
பணம்,
ஆதிப்
பணத்துடன்
நவீன பணம், பின்னர் கிட்டத்தட்ட
முழுக்கமுழுக்க
நவீன பணம்) என்பது உண்மையான பாதையாக
இருந்திருக்கும்
ஆனால்
அவ்வப்போது
முந்தைய
அமைப்புகளுக்கு
தலைகீழாகவும்
மாறியுள்ளது என மிகச்சிறப்பாக
விளக்கமளித்துள்ளார்.
அதாவது
பண்டமாற்றிலிருந்து பணத்திற்கு மாறியதற்கான தர்க்கரீதியான வரிசைக்கிரமம் பின்வருமாறு:
பண்டமாற்று -à பண்டமாற்றுடன்
ஆதிப்
பணம்
-à ஆதிப்
பணம்
-à ஆதிப்
பணத்துடன்
நவீன பணம் -à
பின்னர்
கிட்டத்தட்ட
முழுக்கமுழுக்க
நவீன பணம்.
(தொடரும்)
No comments:
Post a Comment