பண்டமாற்று பரிவர்த்தனை. செய்யவேண்டிய பொருள்களின் மதிப்புகளுக்கிடையேயான வித்தியாசமும் அல்லது அவற்றின் விநியோகத்திற்கு/ கொடுக்கல் வாங்கலுக்கு இடையே உள்ள கால தாமதமும், பெரியத்தடையாகவோ, பிரச்சினையாகவோ பழங்குடியின மக்கள் கருதவில்லை. ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளை (deferred payments) ஏற்றுக்கொள்வதன் மூலம் அதை சமாளிக்க முடியும் என்கிறார் பால் எயின்சிக்.
பண்டமாற்றில்
ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் என்றால் என்னன்ன இப்போ பார்ப்போம். உதாரணமாக நீங்க
ஒரு படி அரிசியை உங்க பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து வாங்குறீங்க, ஆனா அதுக்கு ஈடா
கொடுக்குறதுக்கு உங்களிடம் உபரியா பொருள் ஏதும் இல்லை. அதனால அடுத்த வாரம் கொடுக்குறதா
சொல்றீங்க, அவரும் ஒத்துக்குறாரு, வாங்குன பொருளுக்கான மதிப்பை உடனடியாக கொடுக்காம
காலதாமதமா கொடுக்குறது தான் ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் (deferred payments) எனப்படுது.
அல்லது நீங்க வாங்குன அரிசிக்கு பதிலா ஒரு படி பருப்பைக் கொடுக்குறீங்கன்னு வெச்சுக்குவோம்,
அரிசியை விட பருப்பின் மதிப்பு அதிகம் இல்லையா, அதுனால அரிசியை விட பருப்பின் மதிப்பு
எவ்வளவு கூடுதலா இருக்கோ அவ்வளவு மதிப்புள்ள வேறொரு பொருளை ஒங்க பக்கத்துவீட்டுக்காரர்
ஒங்களுக்குக் கொடுக்கனும் அதாவது பருப்புக்கும் அரிசிக்கும் இடையிலான மதிப்பு வித்தியாசத்துக்கு
ஈடான பொருளை ஒங்க பக்கத்துவீட்டுக்காரர் ஒங்களுக்குக் கொடுக்கனும். அப்ப தான் அது சமமான
பரிவர்த்தனையாக இருக்கும். ஆகையால் இந்த பரிமாற்றத்திலும் பகுதியளவு ஒத்திவைக்கப்பட்ட
கொடுப்பனவுகளா (deferred payments) இருக்கு.
ஆஃப்ரிக்க
கிராமங்களில் அறுவடைகளுக்கு இடையிலான காலகட்டத்தில் இரும்புக்கொல்லர்கள் செய்த அனைத்து
சேவைகளுக்கும் அறுவடைக்குப் பிறகே ஊதியம் வழங்கப்பட்டிருக்கு என்கிறார் பால் எயின்சிக்.
இதுவரைக்கும்
முன்வைத்த காரணங்களால பொருளாதார முன்னேற்றத்தின் ஆரம்ப கட்டத்தில் பண்டமாற்று முட்டாள்தனமான
முறையாகக் குறைக்கப்பட்டது என்று கருதுவது
தவறு என்று தோன்றுகிறது. பெரும்பான்மையான சமூகங்களில் தொழில்நுட்ப மற்றும் அறிவார்ந்த
வளர்ச்சியின் மூலம் ஏதாவது ஒரு பண அமைப்புக்கு மாறிய பிறகும் கூட பண்டமாற்று நீண்ட
காலம் நீடித்து இருந்ததற்கு சாத்தியப்பாடுகள் உள்ளன என்கிறார் பால் எயின்சிக்.
பழமையான சமூகங்களில் பண்டமாற்று முறையின் அசௌகரியம்
குறித்து பொருளாதார வல்லுநர்கள் அளிக்கும் விளக்கம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கு.
பண்டமாற்று முறையின் அசௌகரியங்களை உணர்ந்ததன் மூலமாகத்தான் பணம் அவசியமானதாக உருவானது
என்ற பொருளாதாரவியலாளர்களிடையே பொதுவாக, உள்ள அனுமானம் கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்
என்று பரிந்துரைக்கிறார் பால் எயின்சிக்.
பால்
எயின்சிக் நிரூபிப்பது போல்: பண்டமாற்று முறையின் சகிக்க முடியாத அசௌகரியத்துனால சமூகம்
அதை சீர்திருத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அதனால் தான் பணம் தோன்றியது என பல தலைமுறைகளாக
பொருளாதார வல்லுனர்கள் பயன்படுத்தும் எதிர்மறை அணுகுமுறைக்கும், பழைய முறை சகிக்க முடியாததாக மாறுவதற்கு முன்பே,
சீர்திருத்தங்களுக்கான தேவை எழுவதற்கு முன்பே, பரிமாற்ற முறை மேம்படுத்தப்பட்டது. என்பதன்படி
இங்கு பரிந்துரைக்கப்பட்ட நேர்மறையான அணுகுமுறைக்கும் இடையே அத்தியாவசிய வேறுபாடு உள்ளது
என்று க்ளின் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்..
(தொடரும்)
No comments:
Post a Comment