குக்கு பம்பம் பூங்காவுல ரிங் ரிங், பவ் வவ், சில் சிலா, ட்விங்க்
ட்விங்க் எல்லாரோடயும் விளையாடிக்கிட்டுருந்தா, திடீரெனப் பார்த்தா இடி இடிக்கிற சத்தம்,
மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது, குக்கு கண்ணு முழிச்சுட்டா, அப்போ இவ்ளோ நேரமும் நாம
கனவுல தான் பம்பம் பூங்காவுல எல்லாரோடயும் விளையாடிக்கிட்டு இருந்தோமானு அப்ப தான்
அவளுக்குப் புரிஞ்சுது. இன்னிக்கு நெஜமாவே பம்பம் பூங்காவுக்குப் போய் விளையாடலாம்னு
நெனச்சுக்கிட்டு இருந்தா. ஆனா அங்கப் போனாலும் கூட அவளால பூங்காவுக்குள்ள போகமுடியாதே…
இருந்தாலும் என்ன அவ பம்பம் பூங்காவோட கதை பேசலாமே. மழை விடுறதுக்காக காத்துக்கிட்டு
இருந்த குக்கு … அப்படியே மறுபடியும் தூங்கிட்டா…
……..ஹை குக்குவுக்கு திரும்பவும் ஒரு ஜோரான கனவு வந்துச்சே…
ஒரு பெரிய கரடிபொம்மை குக்குவை அதோட வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப்
போகுது. அங்கே ஒரு அம்மா கரடியும், குட்டிக்கரடியும் இருக்காங்க… கரடிங்க குக்குவுக்கு
சாப்பிட வகை வகையா திண்பண்டங்கள், பழங்கள் கொடுத்து உபசரிச்சாங்க, குக்குவும், குட்டிக்
கரடியும் திண்பண்டங்கள சாப்பிட்டாங்க… குக்கு கரடிக்குட்டியை கொஞ்சினா, பதிலுக்கு கரடிக்குட்டியும்
குக்குவை கொஞ்சி விளையாடக் கூப்பிட்டுச்சு, இரண்டுபேரும் கண்ணாமூச்சி விளையாண்டாங்க,
அப்புறம் குட்டிக்கரணம் அடிச்சாங்க… அதுக்கப்புறம் குக்கு, குட்டிக்கரடி, அம்மா கரடி,
அப்பா கரடி நாலு பேரும் கையைக் கோர்த்துக்குட்டு வட்டமா நின்னு சுத்தி சுத்தி ஆடுனாங்க…
குக்கு ரொம்ப ஜாலியா இருந்தா…
குக்கு உன்னைய எங்களுக்கு ரொம்ப புடிச்சுருக்கு. நீ இங்கே இருவேன்,
உன்னைய எங்க மகளா வளர்க்குறோம்… நாங்க ஒன்னைய நல்லா பாத்துப்போம், செல்லமா வெச்சுக்குவோம்…
நீ இங்கே இரு… நாங்க வெளில போகும் போது மிஷா குட்டி தனியா தான் இருக்கான். நீ இருந்தா
அவனுக்கு துணையா இருக்கும்… நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா விளையாடிக்கிட்டு
இருக்கலாம்னு அம்மா கரடியும், அப்பா கரடியும் குக்குகிட்ட சொன்னாங்க.
குக்கு பூரிச்சுப் போயிட்டா… கரடிம்மா… கரடிப்பா… நீங்க ரெண்டுபேரும்
சொல்றபடியே நான் உங்களுக்கு மகளா உங்ககூடவே இருக்கேன். மிஷாவுக்கு துணையா இருந்து விளையாடுவேன்.
இனிமே நாங்க ரெண்டு பேரும் ரெட்டைப்புள்ளைங்க மாதிரி, அதனால இனிமேல் அவன் தனியா இருக்கானேனு
நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லைனு குக்கு சொன்னா.
கரடிம்மாவும், கரடிப்பாவும் குக்குகிட்ட வீட்டை ஒப்படைச்சுட்டு
வெளில உலாவப் போனாங்க… கரடிக்குட்டி மிஷாவுக்குக் குக்கு கதை சொன்னா. மிஷா ஆவலோட மெய்மறந்து
கேட்டுக்கிட்டுருந்துச்சு… மிஷா குக்குவுக்கு எப்படி மரம் ஏறுறதுன்னு கத்துக்குடுத்துச்சு.
மிஷா கூட இருக்கறதால குக்குவுக்கு நேரம் போனதே தெரியல…
கரடிம்மாவும், கரடிப்பாவும் வீடு வந்து சேர்ந்தாங்க… ரெண்டு
கிண்ணத்துல தேனடையையும், பலாச்சுளைகளையும் வெச்சு குக்கு, மிஷா ரெண்டு பேரையும் சாப்பிட
சொன்னாங்க…
ஐ… ரொம்ப தித்திப்பா, மணமா ருசியா இருக்கேனு ரெண்டு பேரும் தேனுல
நெனச்சு பலாச்சுளைகளை சப்புக்கொட்டி சுவைச்சு சாப்பிட்டாங்க.
(தொடரும்)
No comments:
Post a Comment