Tuesday, May 23, 2023

பணவீக்கம்:

 


இந்தியாவின் சில்லறை பணவீக்கம் எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு  ஏப்ரல் மாதத்தில் 4.70% உயர்ந்துள்ளது; பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் பணவீக்கம் 4.85 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் பணவீக்கம் 4.68 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. 2022 ஏப்ரலில் பணவீக்கம் 7.79  விழுக்காடாக உயர்ந்திருந்தது. 2023 ஏப்ரலில் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 3.84% உயர்ந்துள்ளது. தானியங்களின் விலைவாசி 13.67% உயர்ந்துள்ளது. முட்டையின் விலைவாசி 3.10% உயர்ந்துள்ளது, மீன், இறைச்சியின் விலைவாசி 1.23% குறைந்துள்ளது, எண்ணெய்,கொழுப்புகளின் விலைவாசி 12.33% குறைந்துள்ளது. பால் பொருட்களின் விலைவாசி 8.85% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.09% உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 6.50% குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 5.28% உயர்ந்துள்ளது. வாசனைப் பொருட்களின் விலைவாசி 17.43% உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.61% உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களிலே அதிக அளவாக உத்தரகாண்டில் பணவீக்கம் 6.04% உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 0.92 விழுக்காடு குறைந்துள்ளது. 2022 ஏப்ரல் 15.38 விழுக்காடாக உயர்ந்திருந்தது. ஏப்ரலில் எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 0.93% குறைந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 2.42% உயர்ந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் விலைவாசி 1.60% உயர்ந்துள்ளது. அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், ஆயத்த ஆடை, உணவு அல்லாத பொருட்கள், வேதிப் பொருட்கள், ரப்பர் மற்றும் நெகிழிப் பொருட்கள், காகித பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்ததால் பணவீக்கம் குறைந்துள்ளது.

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...