S80/S20:
அதிக வருமானம் பெறும் முதல் 20% பணக்காரர்கள் மற்றும் குறைந்த
வருமானம் பெறும் கடை நிலை 20% ஏழைகளின் சராசரி வருமானத்தின் விகிதமாகும்.
P90/P10 :
அதிக வருமானம் பெறும்
முதல் 10% பணக்காரர்களின் வருமானத்தை குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 10% ஏழை மக்களின்
வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதமாகும்.
S80/20:
அதிக வருவாய் பெறும் முதல் 20% மக்களின் வருமானத்தை குறைந்த
வருமானம் பெறும் கடை நிலை 20% ஏழை மக்களின் வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும்
விகிதம்.
P90/P50:
அதிக வருவாய் பெறும் முதல் 10% மக்களின் வருமானத்தை குறைந்த
வருமானம் பெறும் கடை நிலை 50% மக்களின் வருமானத்தால்
வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.
P50/P10:
குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 50% மக்களின் வருமானத்தை அதிக
வருவாய் கொண்ட முதல் 10% மக்களின் வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.
20/20 விகிதம்:
மக்கள்தொகையில் அதிக
வருமானம் பெறும் முதல் 20% மக்கள் பெறும் வருமானத்தை,
குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 20% மக்கள்தொகையின் வருமானத்தால் வகுத்து பெறப்படும்
விகிதமாகும். அதாவது 20% பணக்காரர்கள் 20% ஏழைகளை விட எத்தனை மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள்
என்பதைக் குறிப்பிடுகிறது. மக்கள்தொகையில் உள்ள சமத்துவமின்மையின் உண்மையான தாக்கத்தை
இது அதிகமாக வெளிப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தில்
மனித மேம்பாட்டுக் குறிகாட்டிகளுக்கு இந்த விகிதம் பயன்படுத்தப்படுகிறது.
உலக சமத்துவமின்மை
அறிக்கை பொருளாதார சமத்துவமின்மையை மதிப்பிட T10/B50, T1/B50, T0.1/B50 ஆகிய விகிதங்களை
பயன்படுத்துகிறது.
T10/B50: அதிக
வருமானம் பெறும் முதல் பத்து சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும்
50 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.
T1/B50:
அதிக வருமானம்
பெறும் முதல் ஒரு சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும் 50 சதவீதத்தினரின்
மொத்த வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.
T0.1/B50:
அதிக வருமானம்
பெறும் முதல் 0.1 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும் 50 சதவீதத்தினரின்
மொத்த வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.
இத்தகைய விகிதாச்சாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தொகையில்,
விநியோகத்தின் எந்தப் பகுதியானது சமத்துவமின்மையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதை அறியப் பயன்படுகிறது.
ஹூவர் குறியீடு:
ஹூவர் குறியீடு சரியான சமத்துவ நிலையை அடைய மறுபகிர்வு செய்யப்பட
வேண்டிய மொத்த வருமானத்தின் விகிதத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு முற்றிலும் சமத்துவமான
சமூகத்தில், சமமான விநியோகத்தை அடைய எந்த வளங்களும் மறுபகிர்வு செய்யப்பட வேண்டியதில்லை
என்பதால் அப்பொழுது ஹூவர் குறியீடு 0. அனைத்து வருமானத்தையும் ஒரே குடும்பமே பெறுமானால்
அச்சமூகத்தில் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 100% சமத்துவத்தை அடைவதற்காக மறுபகிர்வு
செய்யப்பட வேண்டும் அப்பொழுது ஹூவர் குறியீட்டின் மதிப்பு 1ஆக இருக்கும். ஹூவர் குறியீட்டின்
மதிப்பு 0விற்கும் மற்றும் 1 க்கும்(0% மற்றும் 100%) இடையே இருக்கும், இதில் 0 முழுமையான
சமத்துவத்தையும் 1 (100%) அதிகபட்ச சமத்துவமின்மையையும் குறிக்கிறது.
கால்ட் மதிப்பு:
ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியத்திற்கும்
அந்த நிறுவனத்தின் சராசரித் தொழிலாளியின் ஊதியத்திற்கும் உள்ள விகிதமாகும். ஒரு நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரிக்கு அதன் சராசரி பணியாளரை விட பல மடங்கு அதிகமாக ஊதியம் பெறும்
போது கால்ட் மதிப்பு அதிகமாக இருக்கும்.
மாறுபாட்டுக் கெழு (coefficient of variation):
மாறுபாட்டுக் கெழு என்பது வருமானங்களின் மாறுபாட்டின் வர்க்க
மூலத்தை சராசரி வருமானத்தால் வகுக்கும்போது கிடைக்கிறது.
ஊதிய பங்கு:
ஊதியப் பங்கு என்பது ஊழியர்களின் மொத்த வருமானத்துக்கும், மொத்த
உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமாகும்.
ஊழியர்களின் மொத்த வருமானத்தை தேசிய வருமானத்தால் வகுக்கும்போது கிடைக்கும்
விகிதமாகும்.
No comments:
Post a Comment