யம்மு பாட்டி: இன்னைக்கு மதியம் என்ன சாப்புடலாம்னு சொல்லுங்க புள்ளைங்களா…
பிம்பா:
ஏதாச்சும் பண்ணுங்க பாட்டி, எங்களுக்கு வேலை கெடக்கு, பெர்ட் ஃபீடர் பன்னணும்…
மஞ்சா:
தெனமும் பாட்டி தான பிம்பா சமைக்கிறாங்க, இன்னைக்கு நம்ம சும்மா சமைச்சுத் தான்
பாப்போமே
பிம்பா:
சும்மா பாக்குறதுக்கு யாராவது சமைப்பாங்களா… நம்ம சமைச்சு யார் சாப்புடுறது… ஒனக்கு
சுடுதண்ணி கூட வெக்கத் தெரியாது…
மஞ்சா:
பாட்டிக்கிட்ட கேட்டு கேட்டு சமைக்கலாமே…
பெப்போ: ஊம்… என்ன சமைக்கலாம்,
பொங்கல் வெக்கலாமா
குக்கு: ஏன் கூட்டாஞ்சோறும்
ஆக்கலாம்…
மஞ்சா:
பொங்கலுக்கு எத்தனை பேரு கைதூக்குரீங்க… 2 பேரா… கூட்டாஞ்சோறுக்கு எத்தனை பேரு
கைதூக்குரீங்க 3 பேரு… அப்போ கூட்டாஞ்சோறு வெக்கலாம்… என்ன சொல்றிங்க யம்மு பாட்டி…
யம்மு
பாட்டி: சரி தான் அப்போ கூட்டாஞ்சோறு ஆக்குவோம்… நாம அஞ்சு பேரு இருக்கோம், நம்ம எல்லாரும்
அவுங்கவுங்களுக்கு முடிஞ்சதை கொண்டு வருவோம்… நான் அரிசி கொண்டு வர்றேன், மஞ்சா பருப்பு
கொண்டு வருவா… பெப்போ காய்கறி கொண்டுவருவான்… பிம்பா கடுகு, மஞ்சள், தேங்காய், புளி
கொண்டு வருவான்…
பிம்பா:
என்ன எனக்கு மட்டும் இவ்ளோ சொல்ற, குக்குவுக்கு மட்டும் எதுவுமே சொல்லாம ஃப்ரீயா
விட்டுட்ட…
யம்மு
பாட்டி: அவ சின்ன புள்ளை தான பிம்பா… நீ பெரிய பையன் அதான்…
குக்கு:
என்னாலயும் எல்லாமே செய்யமுடியும் பாட்டி…
யம்மு
பாட்டி: சரி குக்கு தண்ணி கொண்டு வரட்டும்
குக்கு:
நான் விறகும் எடுத்துட்டு வர்றேன் பாட்டி
பெப்போ:
வெளில கல்லடுப்புல தான் கூட்டாஞ்சோறு பண்ணப்போறோமா…
மஞ்சா: இல்ல உள்ள கேஸ் அடுப்புலயே
பண்ணலாம்… ஏன்னா அடுப்பு புகையினால சுற்றுச்சூழல் மாசுபடும் இல்லையா…
பிம்பா:
ஆமா இவங்க கேஸ் அடுப்புல சமைச்சுத்தான் காலநிலை மாற்றத்தைத் தடுக்கப்போறாங்களாக்கும்,
ஆளப் பாரு… ஒலகத்துல 77% கார்பன் உமிழ்வுகளுக்கு காரணம் 10% பணக்காரங்க தானாம்… நியூஸ்
படிக்கலையா…
மஞ்சா:
படிச்சேனே… கேஸ் அடுப்பு இல்லைனா விறகடுப்புல
சமைக்கலாம், நம்மகிட்ட தான் கேஸ் அடுப்பு இருக்கே… அப்புறம் ஏன் அவுங்க சீரழிச்சது
பத்தாதுண்ணு நாம வேற சீரழிக்கனும்… மாற்றத்தை கொண்டு வர்றதுக்கு யாருமே சின்னவங்க இல்ல “No one
is too small to make a difference”னு கிரெட்டா அக்கா சொல்லிருக்காங்கள்ள… நம்மாள
முடிஞ்சத பண்ணுவோமே…
குக்கு: ஆமாம் கரெக்ட், சின்னதா
இருந்தாலும், பெருசா இருந்தாலும் புகை, புகை தான, விசம் விசம் தான…
(தொடரும்)

No comments:
Post a Comment