சமூக அந்தஸ்தை பெறுவதற்கான ஆசையே ஆதிமனுசனை வழி நடத்துனதாகவும், சமூக அந்தஸ்தைக் கொடுக்கக்கூடியப் பொருட்களே ஆதிப்பணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பொருளாதார அறிஞர் கெர்லோஃப் ஒரு கோட்பாட்டை முன்வெச்சாரு. இதை விமர்சிச்ச பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் ஆரம்பத்துல உருவான எல்லா பணமும் “வர்க்கப் பணம்” தான் என்று கெர்லஃப் வாதிட்டதாக ஒரு துணைக் கோட்பாட்டையும் உருவாக்கியிருக்காரு. சில சமூகங்கள்ல உயர் வகுப்பினருக்கு ஒரு பணமும், கீழ் வகுப்பினருக்கு ஒரு பணமும் பயன்பாட்டுல இருந்துருக்குறது உண்மை தான். இந்த சமூகங்களில் பணத்தின் வர்க்கத் தன்மை வெளிப்படையாகவே தெரியுது. ஆனா மத்த சமூகங்கள்ல பணத்தின் வர்க்கத் தன்மை வெளிப்படையாக தெரியாததால பணத்துக்கு வர்க்கத் தன்மை இல்லைணு அர்த்தமா. இதுலேருந்து என்ன தெரியுது? எல்லாருக்கும் பொதுவான ஒரு நடுநிலை ஊடகமா தான் பணத்தை பால் எயின்சிக் பார்க்குறாருண்ணு தெரியுது. ஆனா இது உண்மையா? இல்லவே இல்லை. வர்க்கமே இல்லாத தொன்மையான சமூகத்துக்குள்ள பணத்துக்கு எந்த வேலையும் கெடையாது. வர்க்கமில்லா சமூகத்துக்குள்ள நடந்ததெல்லாம் பரிசுப் பரிமாற்றங்கள் தான். பணத்தை பெத்தெடுத்ததே வர்க்க சமூகம் தாங்க. முதலாளித்துவ சமூகம் தான் பணத்தை சுரண்டல் ஊடகமாக வளர்த்தெடுத்துச்சு. வர்க்க சமூகத்தின் நடுநிலையில்லாத பரிவர்த்தனை ஊடகம் தாங்க பணம். தனியுடைமை சமூகத்தின் பரிவர்த்தனை ஊடகம் தாங்க பணம். வர்க்க சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்துல வெளித் தோற்றங்கள் எப்போதுமே ஏமாத்துற தோற்றப் பிறழ்ச்சிகள் தான். வெளித்தோற்றங்கள் உண்மையை சொல்ற கண்ணாடிகளா இருந்தா சமூக விஞ்ஞானிகளுக்கு வேலை ரொம்ப சுலபமா இருந்துருக்குமே. தெரிஞ்சோ, தெரியாமலோ எல்லா முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் இங்க தான் தப்பு பண்ணுறாங்க. பால் எயின்சிக்கும் அதுல விதிவிலக்கு இல்ல. கெர்லோஃபின் கோட்பாடு மேல பால் எயின்சிக் வெச்ச விமர்சனத்தை இப்ப பாப்போம்.
11. தகுநிலை
அடையாளச் செயல்பாடு மூலம் பணத்தின் தோற்றம்:
“சமூக முக்கியத்துவத்தை
அடையுறதுக்கான லட்சியம் பணப் பொருள்களின் தேர்வை பாதிக்கக்கூடிய மத்த எல்லா காரணிகளையும்
மறைச்சுடும் என்ற அனுமானத்திலிருந்து தொடங்கிய, கெர்லோஃப் இந்த மத்த காரணிகளை தனது
முன்கூட்டிய முடிவின் கண்ணாடி மூலமா தான் பார்க்குறாரு. உதாரணமாக, அவரைப் பொறுத்தவரை,
ஆதிப் பணத்தை மத நோக்கங்களுக்காக - பலியீடுகள், மரண விருந்துகள் போன்றவற்றுக்கு – பயன்படுத்துவது
என்பது, ஆதிகால மனிதன் சமூக கௌரவத்தை அடையவும், அந்த நோக்கத்துக்காக அதிக அளவு பணப்
பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் சமூகத்தின் மத்தஉறுப்பினர்களை விட சிறப்பாக செயல்படவும்
கொண்டிருந்த லட்சியத்திலிருந்து பெறப்பட்டது.
தூண்டுதலாக
இருக்கக்கூடிய பல்வேறு நோக்கங்களுக்கு இடையில எல்லைக்கோட்டை வரையறுப்பது நிச்சயமாக
கடினம் தான். பல சந்தர்ப்பங்கள்ல ஜெர்லோஃப்பின் கோட்பாடு பொருந்தக்கூடியதாக இருக்கலாம்,
ஆனால் அது எப்போதுமே அவசியமா பொருந்தக்கூடியது என்று கருதுவதற்கு எந்த நியாயமும் இல்லை.
பல சந்தர்ப்பங்கள்ல கௌரவத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை நிச்சயமாக ஒரு கீழ்நிலைப் பங்கைக்
கொண்டிருந்திருக்கனும். ஆதி மனுசன் தன்னால் முடிந்த அளவுக்கு வரம்புகளுக்குட்பட்டு
தனது தெய்வத்திற்கு தாராளமான பலியீடுகளைச் செய்வது சமூக லட்சியத்தின் காரணமாக இல்ல,
மாறாக தெய்வத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுக்கு உண்மையிலேயே பயந்து, நல்லெண்ணத்தைப்
பெறுவதற்காக அவரை சமாதானப்படுத்த ஆர்வமாக இருந்ததுனால தான்.
இறப்பு விழாக்களில்
பணப் பொருட்களை விநியோகிப்பதில் தாராள மனப்பான்மை பல சந்தர்ப்பங்கள்ல சமூக லட்சியத்தால்
தூண்டப்படலாம், ஆனால் அது நிச்சயமாக பல பழமையான இனங்களின் தன்மையில் ஆழமாக வேரூன்றிய
மூதாதையர் வழிபாடே அதுக்கு ரொம்ப பெரிய அளவில் காரணமா இருந்துருக்கு.
இதேபோல, பல
மனைவிகளுக்கு மணமகள் செல்வத்தை செலுத்துவதற்காக பணப் பொருட்களைக் குவிக்கும் விருப்பத்தை,
அவர்களின் உடைமை ஒரு பணக்கார கணவருக்கு வழங்கும் சமூக கௌரவத்தின் அடிப்படையில் விளக்க
முடியும் என்றாலும், சமூகத்தின் சக உறுப்பினர்களை விட மேலானவராகக் காட்டும் விருப்பத்தை
விட மனித இயல்பில் ஆழமாக வேரூன்றிய தூண்டுதலை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு
தெளிவான மாற்று விளக்கம் நிச்சயமாக இருக்கு.
பணத்தின் தோற்றத்தை
சமூக லட்சியங்களுக்குக் காரணம் காட்டும் கெர்லோஃபின் ஒருதலைப்பட்ச கோட்பாட்டிலிருந்து,
சமமாக ஒருதலைப்பட்சமான பிடிவாதமான துணைக் கோட்பாடுகள் இரண்டு உருவாகுது. கௌரவத்தின்
ரொம்ப முக்கியமான செல்வாக்கின் காரணமாக, அதை அடையுறதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பணப்
பொருட்கள் அவசியமாக அலங்காரங்களாக இருந்தன, எனவே ஆபரணங்களின் பணப் பயன்பாடு எப்போதும்
அவசியமான பொருட்களுக்கு முன்னதாகவே இருந்தது என்று அவர் கூறுகிறார். அதே காரணத்திற்காக,
பணம் எப்போதும் உயர் சமூக வகுப்புகளின் பிரத்தியேக பயன்பாட்டிற்காகவே உருவானது என்றும்,
ஆரம்பத்தில் அனைத்துப் பணமும் "வர்க்கப் பணமாக" உருவானது என்றும் அவர் வாதிடுகிறார்.
பழமையான பணத்தின்
அலங்கார தோற்றம் பற்றிய கேள்வி ஏற்கனவே பாத்துட்டோம். பணத்திற்காக அலங்காரப் பொருட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருந்திருக்கனும், ஆனால் பல நிகழ்வுகளில் இது
வெளிப்படையாக இல்லை. நிச்சயமாக கால்நடைகள் நாணயத்தின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாகும்.
இருப்பினும் கால்நடைகள் அலங்காரத்தை விட பயனுள்ளதாக இருக்கும். அதோட வர்க்கப் பணத்தின்
இருப்பை ஒரு சிறுபான்மை நிகழ்வுகளில் மட்டுமே கண்டறிய முடியும், அவற்றில் பெரும்பாலானவற்றில்
ஒரே சமூகத்தில் சமூக தரவரிசை அந்தஸ்து அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட பிற வகையான பணமும்
இருந்தது. உயர் வகுப்பு கிளிஞ்சல்களின் பணப் பயன்பாடு சாதாரண பழங்குடியினரால் பயன்படுத்தப்படும்
சாதாரண கிளிஞ்சல்களுக்கு முன்னதாக இருந்தது என்று கருதுவதற்கு எந்த குறிப்பிட்ட காரணமும்
இல்லை.”
(தொடரும்)
No comments:
Post a Comment