ஆதி காலத்துலயும் பொருட்களா சேமிச்சுருக்காங்க, அதுனால சேமிக்குற வடிவம் தான் வேற, சேமிப்பதற்கான நோக்கம் எல்லாம் ஒன்னு தான்னு தவறா புரிஞ்சுக்கக் கூடாது. அன்றைய சேமிப்பு, இன்றைய சேமிப்பிலிருந்து வடிவத்துல மட்டும் வேறுபடல, நோக்கத்திலும் வேறுபடுது. ஆதிகாலத்துல நேரடி தேவைகளுக்காகத் தான் (ஆபரணத் தேவை உட்பட) பொருட்களை சேமிச்சு வெச்சாங்களே தவிர, அந்த பொருட்கள் மதிப்பை சேமிக்கிது அதுனால சேர்த்துவைக்கனும் என்பதுக்காக என்பதுக்காகவோ இல்ல சொத்து சேர்த்துவைக்கனும் என்பதுக்காகவோ இல்ல. திரும்பவும் சொல்றேன் ஆதிகால சேமிப்பு, நவீன கால சேமிப்பிலிருந்து அதன் வடிவத்தில் மட்டுமல்லாம அதன் சாரத்திலும், அதன் நோக்கத்திலும் முற்றிலுமா வேறுபடுது. மதிப்பை சேமிக்கும் செயல்பாட்டிலிருந்து பணம் எப்படி உருவாகியிருக்கலாம் என்பதைப் பத்தி பால் எயின்சிக் முடிவா என்ன சொல்லிருக்காருன்னு இப்ப கேப்போம்.
5. மதிப்பின் சேமிப்பிலிருந்து பணத்தின்
தோற்றம்:
ஒரு பொருளை மதிப்பின் சேமிப்பகமாகத் தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலைகள், கொடுக்கப்பட்ட
சூழ்நிலைகள்ல, பரிமாற்ற ஊடகமாக அதன் தேர்வுக்கு எதிராக செயல்படக்கூடும். எடுத்துக்காட்டாக,
பல கிழக்கு ஆஃப்ரிக்க சமூகங்களில் கால்நடைகள் முக்கிய மதிப்பு சேமிப்பகங்களாக இருந்துருக்கு.
ஆனால், கால்நடைகள் மிக அதிகமாக மதிப்பிடப்படுவதால், அவற்றின் உரிமையாளர்கள் அவற்றை
பிரிந்து செல்ல முற்றிலும் தயங்குனாங்க. இதன் விளைவாக, இந்த அணுகுமுறை இருந்தபோதிலும்
கால்நடைகள் மதிப்பின் தரஅளவுகோலாக இருந்தாலும், அவை பெரும்பாலும் பரிமாற்ற ஊடகத்தின்
செயல்பாடுகளை போதுமான அளவு நிறைவேற்ற முடியாது, ஏன்னா அவை போதுமான அளவு கட்டில்லாத
புழக்கத்துல இல்லை.
ஒரு பொருள் மதிப்பின் சேமிப்பகமாக இருந்ததிலிருந்து பணப் பயன்பாடு தோன்றிய சந்தர்ப்பங்களில்
கூட, அத்தகைய பயன்பாடு மத பலிகள், அரசியல் கொடுப்பனவுகள், அலங்கார பயன்பாடு, சடங்கு
செயல்பாடுகள் அல்லது மணமகள் பணத்திற்கான அதன் பயன்பாட்டில் இருந்து தோன்றியதா என்பதை
ஆராய வேண்டியது அவசியம். அத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் எதிர்பார்க்கப்பட்ட
அல்லது எதிர்பாராத எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வசதியாக சேமித்து வைப்பதற்கு
ஏற்றதாக இருந்துருக்கு.
இருந்தாலும், மத, அரசியல் அல்லது திருமணத்துக்காக பயன்படுத்தப்பட்ட சில கட்டணம் செலுத்துவதற்கான ஊடகங்கள் சில சந்தர்ப்பங்களில், மதிப்பின் சேமிப்பகமாக செயல்படும் இடைநிலையைக் கடந்து செல்லாமலேயே, பரிமாற்ற ஊடகமாக அல்லது மதிப்பின் தரஅளவுகோலாக அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்துருக்கும் என்றும் கருதமுடியும்.
பணத்தின்
தோற்றம் பற்றிய மதிப்பின் சேமிப்புக் கோட்பாட்டில் குறைபாடுகள்
இருந்தபோதிலும், அது சந்தேகத்திற்கு இடமின்றி
உண்மையின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது, மேலும் பணத்தின் பரிணாம
வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு இது இன்றியமையாதது. பணத்தின்
சுற்றோட்ட செயல்பாடு மதிப்பின் சேமிப்பு செயல்பாட்டைக் குறிக்கிறது என்று ரிஸ்ட் கூறும்போது
அது சரியானதுதான், "இரண்டும் ஒரு பதக்கத்தின் முன்பக்கத்தையும்
பின்பக்கத்தையும் போலவே பிரிக்க முடியாதவை".ணு சொல்றாரு பால் எயின்சிக்.
(தொடரும்)

No comments:
Post a Comment