பத்ம விருது வாங்கலையோ பத்மவிருது…
பாஜக: நமஷ்காரம் ஓய், ஹிந்து பக்தரே நோக்கு ஹிந்துஸ்தானத்தின்
ஒஸ்தியான பத்மவிருது கெடைச்சுடுத்து ஓய்
ஆசாமி: ஓ அப்டியா எதுக்காக விருதெல்லாம் கொடுக்குறிங்க,
என்னைய விலைக்கு வாங்குறதுக்கா?
பாஜக: இதையெல்லாம் வேற சொல்லனுமா ஓய், வர்த்தகம்,
தொழில்துறையில நீங்க செஞ்ச சேவைக்குத்தான்
ஆசாமி: சேவையா… நான் கொள்ளையில்ல அடிச்சேன்
பாஜக: கொள்ளையடிக்கிறதும் சேவை தானோல்லியோ, அதுக்கான
தெறமையையும் ஸ்கில்லையும் நீங்கள் வளர்த்துருக்கேளோல்லியோ…
கொள்ளை என்பதும்
சேவை அல்லவா
கொள்ளையடிப்பவர்
தியாகி அல்லவா
கொள்ளை என்றால்
வளர்ச்சி அல்லவா
கொள்ளையடிப்பவர்
தேசபக்தர் அல்லவா
ஆசாமி: ஒங்க பாட்டையெல்லாம் கேக்க எனக்கு நேரம்
இல்ல. நான் சும்மா சின்னக் கொள்ளைக்காரன் தாங்க தம்மாத்துண்டு, ஒங்களவுக்கெல்லாம் பெரிய
கொள்ளைக்காரன் கெடையாது, ஒங்களவுக்கு கொள்ளையடிக்க எனக்கு ஸ்கில்லும் கெடையாது. விருதெல்லாம்
வேணாங்க பேஜாரா போயிடும்… அப்பொறம் என் ஹவாலா எல்லாம் திவாலா ஆயிடும்
பாஜக: அஷடாட்டாம் பேசாதேள்
ஆசாமி: இந்த பப்ளிசிட்டி எல்லாம் நமக்கு புடிக்காது,
வெளிய தெரியாம கொள்ளையடிக்கனும் அதான் நம்ம பாலிசி, நாளைக்கு நம்ம பேரு அடிபட்டுச்சுன்னா
அப்பொறம் ஃப்ரீயா பிஸினஸ் சாரி கொள்ளையடிக்கமுடியாது
ஆசாமி: நீங்க வெளிய தெரியாம நன்னா கொள்ளையடிக்கிறதுல
தேர்ந்தவா அதான் தேர்வாகி இருக்கேள். நீங்க பயப்படுற வகையில ஒன்னும் நடக்காது அதுக்கு
நாங்க கேரண்டி. ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்கோ, கௌதம் அதானியை எடுத்துக்கோங்க, ஒலக
அளவுல அதானி குற்றவாளியாக பிரபலமடைஞ்சுருக்கா, அமெரிக்க நீதித்துறையே அவா மேல வழக்கு
தொடுத்துருக்கா… ஆனா கூட அவா சகட்டு மேனிக்கு கட்டில்லாம கொள்ளையை அடிக்குறதுக்கு நாங்க
பாதுகாப்பு தந்துருக்கோமோல்லியோ, அதனால பப்ளிசிட்டி பத்தி பயப்படாதேள்.
பாஜக: நமஷ்கார் ராமபக்தரே நோக்கு ஹிந்துஸ்தானின்
ஒஸ்தியான விருதை மோடி கொடுக்கப்போறா
ஆசாமி2: ஆமா என்ன விசயம்… ஒங்களுக்கு எவ்வளவு கமிசன்
போட்டாலும் லஞ்சம் கொடுத்தாலும் எதுவுமே பத்தாதே…
பாஜக: கரெக்டா புரிஞ்சுண்டேளே, இதோ பாருங்கோ நீர்
தோப்பனார் சொத்தை நன்னா கெட்டியா புடுச்சுண்டேள்… நான் ஒழைக்கிறேன், ஒழைக்கிறேன்னு
சொல்லிண்டே ஆடாம, அசையாம ஒரே எடத்துல ஒக்காந்துண்டே சொத்தை நன்னா ஹிமாலயா அளவுக்கு
வளத்துருக்கேள், 24 மணி நேரத்துல தொழிலாளர்கள்கிட்ட 48 மணி நேரவேலை வாங்கிருக்கேள்,
ஒரு வாரத்துல நாலு வார வேலை வாங்கிருக்கேள்…தொழிலாளர்களை நன்னா சுரண்டுறேள், அதான்
சொல்றாளே இந்த உழைப்புச் சுரண்டலை நெக்ஸ்டு லெவலுக்கு எடுத்துண்டு போயி புதிய இலக்கணத்தையே
வகுத்துருக்கேள்… சாதுச்சுட்டேள் போங்கோ…
பாஜக: நமஷ்கார் வேற்றவரே, கலையை நன்னா கொலை செஞ்சேளோல்லியோ,
அதான் விருதே கெடைச்சுடுத்து...
ஆசாமி3: வேணாங்க, ஒங்க டோக்கன் அரசியலுக்கெல்லாம்
என்னால முடியாதுங்க, எனக்கு டையலாக்கே பேச வறாது, நடிக்க வறாது, ஆடவறாது ஏதோ வெள்ளைத்தோலை
வெச்சு வண்டிய ஓட்டுறேன், அதையும் காலி பண்ணிடாதிங்க, இன்னைக்கு விருது வாங்குனா நாளைக்கு
அதுக்காகவே ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்கவேண்டியிருக்கும், ஒழைக்கவேண்டியிருக்கும் ரொம்ப
ஸ்ட்ரெயின் ஆயிடும், பிரெஷர் வந்துடும்… ஈஸி மனி பண்ண முடியாதுங்க…
பாஜக: பொய் சொல்றேள், இந்த லோகத்துல எங்கவா “ஆரியர்”
மட்டும் தான் வெள்ளையானவா, ஒஸ்தியானவா, மத்தவா எப்புடி வெள்ளையா இருக்கமுடியும், இருக்கவும்கூடாது.
எங்கவாளுக்கு நீர் வேணாம் ஓய், ஒங்க ரசிகர்கள் இருக்காளே அவா தான் வேணாம், ஓட்டு வங்கிய
விருத்தி பண்ணனும்…
பாஜக: நமஷ்கார் ஹனும பக்தரே நோக்கு ஹிந்துஸ்தானின்
ஒஸ்தியான பத்ம விருது கெடைச்சுடுத்து…
ஆசாமி4: அதை அடகு வெச்சா எவ்வளவு தேரும், வித்தா
எவ்வளவு தேரும்
பாஜக: அடகுக்கோ, விற்பனைக்கோ அது செல்லாது பக்தரே,
ஆனாலும் நோக்கு மருவாதையும், கௌரதையும் கிடைக்கும்
ஆசாமி: ஒன் ஆட்சில விருது வாங்குனா வெளில தலை காட்டமுடியாது,
எனக்கு உள்ள மருவாதையும் போயிரும். அடத்தூ எச்செ ஃபோன வைடா…
No comments:
Post a Comment