செண்டினலிகளுக்கு (செண்டினல் மக்களுக்கு) அவங்க தீவோட பேரு செண்டினல்னும் தெரியாது. அவங்கள நாம செண்டினலிகள்னு அழைக்குறதும் தெரியாது. அவங்களோட வடக்கு செண்டினல் தீவு இந்திய அரசோட ஆட்சிப் பரப்புக்குள்ள இருக்குறதப் பத்தியோ இல்ல, இந்தியாங்குற நாட்டைப் பத்தியோ, இல்ல அரசாங்கத்தப் பத்தியோ, ஜனநாயகத்தை பத்தியோ செண்டினலிகளுக்கு (ஒன்னுமே தெரியாது. ஆனாலும் கூட அவுங்க நம்மளை விட ரொம்ப ஜனநாயகமா தான் வாழ்ந்துக்கிட்டுருக்காங்க. ஆனா அங்க அரசாங்கமே இல்ல. ஏன்னா அங்க தான் தனிச்சொத்துடைமையே இல்லையே. பழங்காலத்துலேருந்து இன்னைக்கு வரைக்கும் பாத்தீங்கன்னா உலகம் முழுக்க ஆனானப்பட்ட அரசுங்குறது தனிசொத்துடைமைய பாதுகாக்குற போலீஸ்காரனா தான் இருந்துருக்கு. ஆனால் செண்டினல் தீவுகள்ல நிலம், இயற்கை வளங்கள் என எதுவாயிருந்தாலும் யாரோட தனிச்சொத்தாவும் இல்லை. செண்டினல் தீவுல உள்ள எல்லாமே அங்க உள்ள எல்லாருக்கும் பொதுவானதா தான் இருக்கு.
அவங்க எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாம பழைய கற்காலத்தோட ஆதிப்
பொதுவுடைமை சமூகமா வாழுறதுக்கு அவங்க தீவோட தனிமைப்பட்ட புவியியல் சூழ்நிலைகள்
தான் காரணமா இருக்கு. வெளியாளுங்க அவங்க தீவுக்கு வந்தா அவங்களோட அம்பு தான்
பேசும். அதுனால தான் அவுங்க தங்களோட நெலத்த, இயற்கை வளங்கள், தனித்தன்மை,
கலாச்சாரம், வாழ்வாதரத்தை இழக்காம வாழமுடிஞ்சிருக்கு. ஏன்னா இந்திய
அரசு வளர்ச்சிபடுத்துறோம், நாகரிகப்படுத்துறோம் என்ற பேருல செஞ்ச வேட்டையில அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்கள்ல இருந்த மத்த
பழங்குடிகளான கிரேட் அந்தமானிஸ்,
ஓங்கேஸ், ஷொம்பென்ஸ்
நிக்கோபரீஸ்; இவங்க எல்லாருமே
தங்களோட நிலங்கள், இயற்கைவளங்கள, தனித்துவமான கலாச்சாரங்கள, வாழ்வாதாரங்கள்
எல்லாத்தையும் இழந்து சீரழிஞ்சு போயிட்டாங்க. அவுங்களும் செண்டினலிகள் மாதிரி விடாப்பிடியான
பிடிவாதத்தோட வெளியுலகத் தொடர்பை மறுத்துருந்தா நம்பிக்கை துரோகம், மோசடிக்கு பலியாகாம
இன்னும் சிறப்பா இருந்துருப்பாங்க.
செண்டினலிகள் மொத்தமே 100லிருந்து 500 பேர் தான் இருக்குறாங்க. 1880ல,
பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி மாரிஸ் விடல் போர்ட்மேன் செண்டினல் தீவுலேருந்து ஒரு தம்பதியையும்,
நாலு குழந்தைகளையும் கடத்தி அந்தமான் தலைநகரான
போர்ட் பிளேயருக்குக் கொண்டுபோயிருக்குறாரு. ஆனா அந்த சூழல்ல இருக்கத் தேவையான
நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாததால அந்த தம்பதி நோய்வாய்ப்பட்டு இறந்துடுச்சு.
அவங்க சாவுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்காத அந்த பிரிட்டிஷ் அதிகாரி கொஞ்ச நாள் கழிச்சு
நாலு குழந்தைகளையும் சில பரிசு பொருட்களோட அவுங்க தீவுலயே கொண்டு போய் விட்டுருக்குறாரு.
அந்த குழந்தைகள் மூலமாவும் செண்டினலிகளுக்கு தொற்று நோய் ஏற்பட்டுருக்கலாம், அதன்
மூலமா கூட அவங்க மக்கள் தொகை கொறைஞ்சு போயிருக்க வாய்ப்பிருக்கு. வெளியாளுங்ககிட்ட
அவங்க அவநம்பிக்கையால அம்பால பேசுறதுக்கு இந்த கசப்பான சம்பவம் கூட காரணமா இருந்துருக்கலாம்.
இல்ல கடற்கொள்ளையர்கள், வேட்டைக்காரர்களால அச்சுறுத்தப்பட்டுருக்கலாம், அவுங்களுக்கு
விரோதமான வேறு கசப்பான சம்பவங்களும் நடந்துருக்கலாம். அது நமக்கு தெரியாம போயிருக்கலாம்.
எப்புடியிருந்தாலும் இந்த காலத்துல ஆயுதம் மூலமா தான் தன்தீர்வு உரிமையை நிலை நாட்ட
முடியும் என்பதுக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டா செண்டினலிகள் வழிகாட்டுறாங்க. இந்திய
அரசு அவுங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்ய பல தடவை முயற்சி செஞ்சுருக்கு. ஆனா செண்டினலிகள்
எதுக்குமே ஏமாந்து மோசம் போகல.
(தொடரும்)
No comments:
Post a Comment