இருபது வருசத்துக்கு முன்னாடி இருந்தது வேற, இப்ப இருக்குறது வேற, உலக நடப்பே மாறிருச்சு, நான் தேர்தல பத்தி சொல்றேன்... முன்னாடி பெரும்பாலான நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்த பயன்படுத்துனாக... இப்ப அது மேல யாருக்குமே நம்பிக்கை இல்ல, அத எளிதா ஹேக் பண்ணலாம், தேர்தல் முடிவுகள மாத்தலாம்ணு அமெரிக்க தொழில் நுட்ப அறிஞர்கள் உள்பட நெறையபேர் வெளக்கியிருக்காக.. இப்ப ஈவிஎம் எந்திரம் எல்லாம் ஒலகளவுல பெரும்பாலும் காலாவதி ஆயிடுச்சு, outdated model ஆயிடுச்சு, ஆனா இந்தியாவுல மட்டும் ஏன் இந்த இவிஎம்மை புடிச்சு இப்புடி தொங்கிக்கிட்டு இருக்காக... ராமாயணம், மஹாபாரதத்தை விட்டே இன்னும் எழுந்துரிக்காத பழமையில ஊறுன பண்டித கும்பல் அதுனால தான் இங்க மாற்றம் கொண்டு வருறதுக்கே ரொம்ப கஷ்டப்படவேண்டிக்கெடக்கு... அது மட்டுமா காரணம், அதுவே மாற்றம் அவுகளுக்கு ஆதாயம் தந்துச்சுண்ணா ஒத்துக்குவாக, அப்புடித்தான 100% அந்நிய முதலீடுகளுக்கும், 100% தனியார்மயத்துக்கும் ஒத்துக்குட்டாக... அவுகளுக்கு தோதா தேர்தல் முடிவுகள கொண்டு வரலாம்னு தான் இந்த இவிஎம்மை விட மாட்டீங்கிறாக... ஒலகம் முழுக்க பெரும்பாலும் இந்த முதலாளித்துவ ஜனநாயகம் தான் நடைமுறையில இருக்கு... அப்புடி இருந்தும் கூட அங்க உள்ள அரசுகள் எல்லாம் மக்கள் பேச்சை மதிச்சு, ஈவிஎம்மை கைவிட்டுட்டு வாக்குச்சீட்டுமுறைக்கு திரும்பியிருக்குறாக... ஆனா இந்தியாவுல தான் அது, அதான் அந்த முதலாளித்துவ ஜனநாயகம் ஒழுசல்லயும் ஒழுசலா இருக்கு இங்க மக்கள் பேச்ச யாரு மதிக்கிறா, இப்புடி இருந்தா இந்தியாவை எலக்ட்ரோல் ஆட்டோக்கிரசிண்ணு சொல்லாம பிண்ண என்னண்ணு சொல்லுவாக... இந்தியாவுல இவிஎம் எந்திரங்கள் எங்க உற்பத்தியாகுது... இங்க கிட்டத்துல தான்... பெங்களூருல இருக்குற பெல் நிறுவனத்துலயும், ஹைதரபாத்ல உள்ள எலெக்ட்ரானிகஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட்-இ.சி.ஐ.எல் இந்த் நிறுவனங்கள்ல தான் தயாரிக்கப்படுது... இந்த நிறுவனங்கள்ல பாஜக ஆளுக தான் இயக்குநர்களாக இருக்காக... வெளங்கிடும், அப்ப போடுற ஓட்டெல்லாம் அழுகிப்போன தாமரைக்குத்தான போகும்... அடுத்தத கேளுங்க, பெல் நிறுவனம் பாதுகாப்புத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு, இ.சி.ஐ.எல் அணு ஆற்றல் துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு... மொத்தத்துல ரெண்டுமே தேர்தல் ஆணையத்தோட கட்டுப்பாட்டுல இல்ல. ரெண்டு நிறுவனமும் முழுக்க முழுக்க மத்திய அரசோட கட்டுப்பாட்டுல தான் வெச்சுருக்காக... இந்த ரெண்டு நிறுவனம் மட்டும் இல்ல, எந்தெந்த வாக்கு எந்திரங்களை எந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பணும்கிறது மொதக்கொண்டு தேர்தல் சம்மந்தப்பட்ட எல்லா முடிவெடுக்கும் அதிகாரமும் மத்திய அரசுகிட்ட தான் இருக்கு, தேர்தலுக்கு முந்தைய பாதுகாப்பு நடவடிக்கைகள்ல தேர்தல் ஆணையர்கள் யாரும் கலந்துக்குறதுல்ல பெல் நிறுவனத்துல உள்ள எஞ்சினியர்கள் தான் கலந்துக்குறாக... தேர்தல் ஆணையம் சுதந்திரமாக சுயேச்சையாக செயல்படும்ணு சொல்றதெல்லாம் ஏட்டுல தான் இருக்கு… நெஜத்துல அவுக பாவம் சும்மா வெறும் ரப்பர் ஸ்டாம்புதான், டம்மிப்பீஸா தலையாட்டி பொம்மைகளா தான் இருக்காக...
இவிஎம்
எந்திரங்கள்ல எம்1,எம்2,எம்3 அப்டீண்ணு மூணு வகை இருக்கு. முதல் தலைமுறை எம்1 எந்திரங்கள்
2006 வரை உற்பத்தி செய்யப்பட்டுருக்கு. எம்1 எந்திரங்கள்ல விவிபேட் பொருத்தமுடியாததால
இனிமேலு அத உற்பத்தி செய்யவேண்டாமுண்ணு முடிவு செஞ்சுருக்காகலாம். இரண்டாம் தலைமுறை
எம்2 எந்திரங்கள் 2006க்கு பெறகு 2012 வரை உற்பத்தி செய்யப்பட்டுருக்கு. மூன்றாவது
தலைமுறை எம்3 எந்திரங்கள் 2013க்கு பெறகு உற்பத்தி செய்யப்பட்டுருக்கு. எம்1,எம்2,எம்3
இந்த மூணுவகை எந்திரங்களுமே ஒரு முறை தான் புரோக்ராம் எழுத முடியும்ணு (one time
programmable-OTP) சொல்லுறாக, அதாவது அதுல உள்ள புரோக்ராம அப்புறம் மாத்தமுடியாது,...
இந்த எந்திரங்களுக்கு தேவையான சிப்புகள், மைக்ரோ கண்ட்ரோலர்கள் எல்லாம் இந்தியாவுல
தயாரிக்கப்படல அமெரிக்காவுல உள்ள என்.எக்ஸ்.பி என்குற நிறுவனத்திலேருந்து தான் இறக்குமதி
செய்யப்படுது. அந்த அமெரிக்க நிறுவனம் என்ன தெரியுமா சொல்லுது இந்த சிப்கள்ல உள்ள புரோக்ராம்கள
மாத்தலாம் rewritable SRAM, FLASH AND EEPROM. வகை மெமரி தான் இதுல இருக்குண்ணு சொல்லுது,
அப்டீண்ணா இந்த எந்திரங்கள் தேர்தல் ஆணையம் சொல்ற மாதிரி ஒன் டைம் ப்ரோக்ராமபிள் கெடையாது.
அதுல உள்ள புரோக்ராமை இஷ்டத்துக்கு மாத்தலாம்.
இவிஎம்
எந்திரத்துள்ள உள்ள “Source code”ஐ மாத்துணா, தேர்தல் முடிவுகளையும் மாத்தமுடியும்.
ஆனா தேர்தல் ஆணையத்துக்கே அந்த “Source code” பத்தி எதுவும் தெரியாது. தகவல் பெறும்
உரிமை சட்டம் மூலமா இவிஎம் எந்திரத்துள்ள உள்ள “Source code”ஐ யாரு தணிக்கை பண்ணுறாகண்ணு
கேட்டதுக்கு “TEC”-technical evaluation committee”ல தணிக்கை பண்ணுறதா தேர்தல் ஆணையம்
சொல்லிருக்காக, சரிண்ணு “TEC”-technical
evaluation committee”கிட்ட அத பத்தி கேட்டா தணிக்கை நாங்க பண்ணுறதுல்ல ‘MEITY-Ministry
of electronics and information technology’யோட auditing cell STQC-
(standardization testing quality certification) தான் தணிக்கை செய்யுறாகண்ணு சொல்லிருக்காக,
STQC-ஐ கேட்ட இல்ல தணிக்கை நாங்க பண்ணுறது இல்ல, தேர்தல் ஆணையம் தான் பண்ணுதுண்ணு திருப்பி
சுத்திவுட்டுருக்காக... மொத்தத்துல Source code”ஐ யாருமே தணிக்கை செய்யுறதில்லைங்குறது
தான் உண்மை. தணிக்கை செய்யாம எப்புடி அதுல மால்வேர், எதுவும் இல்லாம சரியா இருக்கா
இல்லையாங்கிறத சரிபார்க்கமுடியும்...
இவிஎம்
பயன்படுத்துன எல்லா நாடுகள்லயும் அதுக்கான மென்பொருளை பொதுவாக சரிபார்க்கக்கூடியதா
தான் இருந்துச்சு... இந்தியாவுல தான் அத பெரிய பூடகமா ரகசியமா பூட்டி வெச்சுருக்காக...
இப்புடி வெளிப்படைத்தன்மை இல்லாம எல்லாமே மர்மமா இருந்தா யாரு தான் அத நம்பி அதுல ஓட்டுப்போட
முடியும்.
சமீபத்துல
இந்த இவிஎம் எந்திரத்துல உள்ள “Source code”ஐ பொது தணிக்கை செய்யனும்ணு ஒரு பொது நல
வழக்கு உச்ச நீதிமன்றத்துல போட்டாக... அத உச்ச நீதிமன்றம் தள்ளுபடி பண்ணிறிச்சு, உள்மையிலே
உச்ச நீதிமன்றம் ஒரு ஜனநாயகக் காவலனாக இருந்துருந்தா என்ன பண்ணிருக்கனும், அந்த எந்திரத்துல
உள்ள “Source code”ஐ பொதுத்தணிக்கை செய்ய உத்தரவிட்டுருக்கணும், ஆனா அயோக்யத்தனம் பண்ணிருச்சு...
இவுக எல்லாத்தையுமே ரகசியமா வெச்சுக்கட்டும், நமக்கு வேணாம் இந்த மின்னணு வாக்குப்பதிவு
எந்திரம், அது லாயக்குபடாது, ஒன்னுக்கும் ஒதவாத இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள
வாங்க பத்தாயிரம் கோடி ரூபா செலவு பண்ணுறீகலே... அத அந்த நூறு நாள் வேலைதிட்ட நிதிக்கு
குடுத்தாலும் பிரயோஜனமா இருக்கும்... இவிஎம் எல்லாம் எங்களுக்கு ஒத்துவராதுப்பா, திருப்பி
வாக்குச்சீட்டு முறையையே கொண்டாங்க... அப்புடி மக்கள் நாங்க சொல்லுறத நீங்க கேக்குறதுல்லைனு
ராங்கி பண்ணீகண்ணா இந்தியா ஒரு ஜனநாயக நாடு இல்ல, இங்க மன்னராட்சி தான் நடக்குது மோடி
தான் நிரந்தர மன்னர்னு அறிவிச்சுடுங்க... அப்புறம் ஜனநாயகத்த எப்புடி வரவைக்கணுமோ அப்புடி நாங்க வரவெச்சுக்காட்டுறோம்... என்ன புரிஞ்சுதா...
(தொடரும்)
No comments:
Post a Comment