Thursday, December 28, 2023

சூதாடும் காட்டேரி (92):

 

சில சந்தர்ப்பங்களில் பிணையத்தை மீட்கும் உரிமை இழக்கப்படாது:

சரித்ரா பிணையத்துடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வட்டித்தொகையுடன் கடன் தொகையையும் கட்டிவிடவேண்டும் எனவும் தனிப்பட்ட இயங்குடைமை கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கடனில், அவர் இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என யாக்ஞவல்கியா கூறியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிணையம் கொடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும், வட்டித்தொகை அசல் தொகைக்கு சமமாகும் சந்தர்ப்பத்திலும், காலவரையறை முடிவதற்குள் பிணையத்தை மீட்பதற்கான பொது விதிக்கு விலக்காக காலவரையறை முடிந்தபோதும் பிணையமானது சரித்ரா வகையினதாக இருக்கும்போது, மீட்புரிமை குறித்து மேற்கூறிய விதியின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடனளித்தவரின் நற்குணங்களின் மீது முழு நம்பிக்கையுடன் குறைந்த தொகையை கடனாகப் பெறும் கடனாளி உயர்ந்த மதிப்புடைய பொருளை பிணையமாக அளிக்கும் போது அதுவே சரித்ரா பிணையம் ஆகும்  என மிதாக்ஷரா விளக்கம் அளித்துள்ளார். மேற்கூறிய விதி இதற்கு முற்றிலும் முரணான சந்தர்ப்பத்திற்கும் பொருந்தும், அதாவது கடனாளியின் நற்குணங்களின் மீது முழு நம்பிக்கை வைத்து கடனளிப்பவர் பெருந்தொகையை கடனாகக் கொடுக்கும் போதும் மதிப்பு குறைந்த பொருளை பிணையமாக பெறும் சந்தர்ப்பத்திலும் அவ்விதி பொருந்தும். அத்தகைய சந்தர்ப்பத்தில் கடனை நிறைவு செய்ய பிணையமாகக் கொடுத்தப் பொருளையே கடனளித்தவர் வைத்துக்கொள்ளலாம் என கடனாளி கூறமுடியாது. அத்தகைய சந்தர்ப்பத்தில் கடனளித்தவரின் அசல், வட்டிக்கு சாதகமாக அரசர் ஆணையை அறிவிக்கவேண்டும். கடன் தொகையிலிருந்து பிணையத்தின் மதிப்பை கழித்தபின் மீதமுள்ள தொகையையும் கடனாளியிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் இவ்விதி குறிப்பிடுகிறது.

பிணையம் சரித்ரா வகையினதாக இருக்கும் போது பிணையத்தை மீட்கும் உரிமை இழப்பு குறித்த  பொதுவிதியின் மேற்கூறிய விதிவிலக்கு தங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியதை விட பொருந்தாத அளவில் அதிகமாக  பெறுவதை  தவிர்க்கும் விதமான நவீன தத்துவமான அநீதியான செல்வசெழிப்பிலிருந்து எடுக்கப்பட்டதே. கடனாளியை கடன் கொடுத்தவர் சுரண்டாமல் பாதுகாக்கவேண்டும் என்றும், அதே போல் கடன் கொடுத்தவர் கடனாளியால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவேண்டும் என்றும் பண்டைய சட்டமியற்றுபவர்கள் கவனம் செலுத்தியுள்ளதை இந்த விதி விளக்குவதாக ரமா ஜோய்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிணையம் ஒப்படைக்கப்பட்டவரின் மீட்பை அனுமதிக்கவேண்டிய கடமை:

கடனாளி பிணையத்தை மீட்க விரும்பும் போது அதை திருப்பி கொடுக்கவேண்டியது கடன் கொடுத்தவரின் கடமை என யாக்ஞவல்கியா ஸ்மிருதியில் (II-62) குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பிணையத்தைத் திருப்பிக் கொடுக்கத் தவறுவாறெனில் அவர் திருட்டைப் போன்ற குற்றம் இழைத்தவராவார். கடன் கொடுத்தவர் வீட்டில் இல்லாதபோதும் கடனாளி தான் கட்ட வேண்டிய கடன் தொகையை அவர் வீட்டு உறுப்பினரிடம் அடைத்த பின் தானளித்த பிணையத்தை மீட்டுக்கொள்ளலாம். கடன் அடைக்கப்பட்ட பின்பு பிணையம் பெற்றவர் தரப்பிலிருந்து சொத்தை திருப்பிக்கொடுக்க வேண்டிய கடமையை இந்த விதி உருவாக்கியுள்ளது.

 பயனுரிமை நல்கும் பிணையத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முன் மீட்பதற்கு உரிமை இல்லை:

கடனை அடைத்த பின்பு பிணையத்தை மீட்பது குறித்த பொதுவிதிக்கு விலக்கும் பிரஹஸ்பதியால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீடோ, வயலோ அடமானம் வைக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருக்கும் போது, எவ்வளவு காலம் அடமானம் வைக்கப்படும் என்ற குறிப்பிட்ட கால வரம்பும் விளக்கப்பட்டிருக்கும் போது அந்த கால வரம்பிற்கு முன்னர் கடனாளியால் தன்னுடைய பிணையத்தை மீட்கமுடியாது. அந்த காலவரம்பிற்கு முன்னரே கடன் கொடுத்தவரும் கடனாளியை கடனை அடைக்குமாறு நிர்ப்பந்திக்கமுடியாது. இரு தரப்பினரும் அந்த காலவரம்பிற்கு பிறகு தங்கள் விருப்பம் போல் அவற்றை செய்துகொள்ளலாம் அல்லது பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் அந்த கால வரம்பிற்கு முன்னரே செய்துகொள்ளலாம். மேற்கூறிய விதியின் படி கடனை திரும்ப வசூல் செய்வதற்கு பாதுகாப்பாக பெறப்படும் பயனுரிமை நல்கும் பிணையத்தில் கடனாளி தன் பிணையத்தை மீட்பதற்கான உரிமையையும், கடன் கொடுத்தவரின் கடனை அடைக்க கோருவதற்கான உரிமையையும் குறிப்பிட்ட காலவரம்பு முடிந்த பின்பு மட்டுமே செயலுக்குவரும்.

(தொடரும்)

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...