பிணையங்களை மீட்பதற்கான நிபந்தனைகள்:
யாக்ஞவல்கியாவின்
விதி இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது; வட்டியை முறையாகக் கட்டிக்கொண்டிருக்கும் போது
கடனாளியின் நலன்களை பாதுகாப்பதையும், வட்டித்தொகை அசல் தொகைக்கு சமமாகும் போது பிணையத்தை
மீட்கப்படுவதை தவிர்ப்பதன் மூலம் கடன் கொடுத்தவரின் நலன்களையும் பாதுகாப்பதயும் நோக்கங்களாகக்
கொண்டுள்ளது.
1. பிணையம்
கிரிட்டகாலா வகையாக இருக்கும் போது மீட்பு:
பிணையம்
ஒரு கால வரைமுறையுடன் கொடுக்கப்பட்டிருக்கும் போது கடனாளி அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்
கடனை அடைக்கவேண்டும். அவர் கடனை அடைக்கத் தவறுவாறெனில் கடனளித்தவர் பிணையமாகக் கொடுக்கப்பட்ட
சொத்தின் உரிமையாளராகிவிடுவார்.
2. பிணையம்
பயனுரிமை நல்கும் வகையாக இருக்கும் போது மீட்பு:
யாக்ஞவல்கியாவின்
விதியின் படி ஒரு பயனுரிமை நல்கும் பிணையம் ஒரு போதும் இல்லாமல் போகாது. ஆகையால் கடனாளி
தன் விருப்பம் போல் அசல் தொகையில் கட்டவேண்டிய நிலுவைத்தொகையை கட்டிவிட்டு எப்போது
வேண்டுமானாலும் பிணையமாகக் கொடுத்த சொத்தை மீட்டுக் கொள்ளலாம். சப்ரோதாயா போக்யவதி
வகை பிணையம் தானாகவே மீட்கப்படக்கூடியது, ஏனெனில் இந்த வகைப் பிணையத்தில் கிடைக்கும்
லாபத்தில் ஒரு பகுதியை அசலாகவும், மற்றொரு பகுதியை வட்டியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது
என்பதால் அசல் தொகை முழுவதும் கட்டப்பட்டவுடனே தானாகவே பிணையம் மீட்கப்படக்கூடியதாகிவிடும்.
வருடா வருடம் கடனின் அளவு குறைந்துகொண்டே செல்வதால் இத்தகைய பிணையம் ஷயாவதி (மதிப்பில்
குறையும் பிணையம்) எனப்படுகிறது. பிரஹஸ்பதியும் தானாகவே மீட்கப்படக்கூடிய இந்த பிணையம்
குறித்துக் கூறியுள்ளார். ஆனால் அபிரதய போக்யாவில் பிணையத்திலிருந்து கிடைக்கும் லாபம்
வட்டியாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் கடனாளி அசல்தொகையைக் கட்டிவிட்டு பிணையமாகக்
கொடுத்த அல்லது அடகுவைத்த சொத்தை மீட்கவேண்டும். இத்தகைய பிணையத்தை மீட்பதற்கு காலவரையறை
ஏதும் இல்லை என யாக்ஞவல்கியா கூறியுள்ளார். ஒரு முறை அடமானம் வைத்தால் அது எப்போதுமே
அடமானமாகவே இருக்கும் என்ற தத்துவம் பயனுரிமை நல்கு பிணையத்தில் பொதிந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் பிணையத்தை
மீட்கும் உரிமை இழக்கப்படாது:
சரிதா
பிணையத்துடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வட்டித்தொகையுடன் கடன் தொகையையும்
கட்டிவிடவேண்டும் எனவும் தனிப்பட்ட இயங்குடைமை கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒப்பந்தம்
செய்யப்பட்ட கடனில், அவர் இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என யாக்ஞவல்கியா கூறியுள்ளார்.
ஒரு
குறிப்பிட்ட காலத்திற்கு பிணையம் கொடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும், வட்டித்தொகை
அசல் தொகைக்கு சமமாகும் சந்தர்ப்பத்திலும், காலவரையறை முடிவதற்குள் பிணையத்தை மீட்பதற்கான
பொது விதிக்கு விலக்காக காலவரையறை முடிந்தபோதும் பிணையமானது சரிதா வகையினதாக இருக்கும்போது
மீட்புரிமை குறித்து மேற்கூறிய விதியின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(தொடரும்)
No comments:
Post a Comment