பின்னாளில் விற்பனை முன்னாளின் அடகுக்குட்பட்டது:
ஒரு
நபர் சொத்தை பிணையமாக கொடுத்துவிட்டு அதன்பிறகு அதை விற்பாரெனில், பின்னர் செய்த விற்பனையை
விட முன்னர் செய்த பரிவர்த்தனையே (பிணையம்) உகந்ததாக நிற்கும், சொத்து விற்பனையானது
முன்னர் சொத்தை பிணையமாக பெற்றவரின் உரிமைகளுக்குட்பட்டதாக இருக்கும்.
இந்த
விதி பிணையம், பரிசு, விற்பனை போன்ற பரிவர்த்தனைகளின் போது ஏற்கெனவே பரிவர்த்தனை செய்ததற்கான
சான்று இருக்குமானால் பிந்தைய பரிவர்த்தனையை விட முந்தைய பரிவர்த்தனையே மேம்பட்டதாகக்
இருக்கும் என்று யாக்ஞவல்கியாவால் இயற்றப்பட்ட பொது விதியுடன் ஒத்துப்போவதாக உள்ளது.
பிணையங்களை மீட்பதற்கான நிபந்தனைகள்:
கடனாளியால்
கடனளித்தவருக்கு பிணையம் ஒருமுறை கொடுக்கப்பட்டுவிட்டால் அந்த பிணையம் இதற்கு முன்
கூறிய வகைகளில் எந்த வகையாக இருந்தாலும் கடனாளி கடனை முழுமையாக அடைத்தபின்பே சொத்தை
பெறமுடியும் அல்லது பிணையத்தை மீட்கமுடியும். ஆனால் பிணையம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
மட்டுமே கொடுக்கப்பட்டிருக்குமானால் அந்த சந்தர்ப்பத்தில், கூடுதலான நிபந்தனையாக அந்த
காலகட்டத்திற்குள் கடனாளி முழுக்கடனையும் அடைத்துவிட வேண்டும். இல்லையெனில் கடனாளி
அந்த சொத்தை இழந்துவிடுவார், கடனளித்தவர் அந்த சொத்தின் உரிமையாளராகி விடுவார்.
அசல்
தொகை இருமடங்காக ஆவதற்குள் பிணையம் மீட்கப்படாமல் இருக்குமானால் பிணையம் இல்லாமல் போய்விடும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கொடுக்கப்பட்ட பிணையம் அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தபின்
இல்லாமல் போய்விடும். ஆனால் பயன் உரிமை அளிக்கும் பிணையம் ஒருபோதும் இல்லாமல் போகாது
என்ற விதியை யாக்ஞவல்கியா இயற்றியுள்ளார்.
யாக்ஞவல்கியாவால்
இயற்றப்பட்ட இந்த விதி மூன்று சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தும். 1. வரைமுறையற்ற காலகட்டத்திற்கு
கொடுக்கப்பட்ட பிணையம் அல்லது அக்ரிதகால பிணையத்தின் மீதான மீட்புரிமை. 2. குறிப்பிட்ட
காலவரையறை இல்லாத சாதாரண பிணையம் (கோப்யா) 3. சேரும் வட்டித்தொகை அசல்தொகைக்கு சமமாகும்
சந்தர்ப்பம். இந்த மூன்றாம் வகை, த்வைகுன்யா அல்லது தம்துபட் விதியிலிருந்து வருவதாக
உள்ளது. கடன் சார்ந்த விதிகளில் உள்ள அந்த விதியின் படி திரட்டப்படும் வட்டி அசல் தொகைக்கு
சமமாகும் போது வட்டி சேருவது நின்றுவிடும், அந்தக் கடன் உடனடியாக அடைக்கப்படவேண்டும்.
யாக்ஞவல்கியாவின் மேற்கூறப்பட்ட விதியிலிருந்து கடனாளி மீட்புரிமையை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமெனில்
அவர் முறையாக தொடர்ந்து வட்டியை கட்டவேண்டும் என்பது தெரிய வருகிறது. கடனாளி வட்டியை
முறையாக தொடர்ந்து கட்டியிருப்பாரெனில் எந்த காலவரைமுறையும் இல்லாது கடனாளி பிணையப்பொருளை
மீட்பதற்கான தன் உரிமையை இழக்கமாட்டார். வட்டி ஒரு போதும் அசல் தொகைக்கு சமமாக ஆகாது,
கடனை அடைப்பதற்கான நேரமும் வராது என்பதால் இந்த விதியின் செயல்பாட்டால் கடனாளி தன்
சொத்தை இழக்கமாட்டார் .
(தொடரும்)
(தொடரும்)
No comments:
Post a Comment