பொருளியலாளர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் (1835-82) தனது பணம் மற்றும் பரிமாற்றத்தின் பொறிமுறை (1875) என்ற நூலில் பண்டமாற்று முறை குறைபாடுகளுடையது என்பதற்கான இரண்டு எடுத்துக்காட்டுகளுடனே தனது புத்தகத்தைத் தொடங்கியுள்ளார், பொருளாதார அடிப்படையில் பண்டமாற்று முறை சிரமமானது என்று ஒரு கருத்தை நிலைநிறுத்துவதற்கு இதுவே முக்கியக் காரணமாகக் கூறப்படுது.
முதல்
உதாரணமாக, மைல் செலி என்ற
பாரிஸில் உள்ள லிரிக் தியேட்டரின்
ஓபரா பாடகியின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மைல் செலி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சொஸைட்டி தீவில்
இசை கச்சேரி செய்தார். அந்தக் கச்சேரிக்கான டிக்கெட்
கட்டணத்துக்கு 3 பன்றிகள், 23 வான்கோழிகள், 44 கோழிகள், 5,000 தேங்காய்கள் மற்றும் கணிசமான அளவு
வாழைப்பழங்களையும், எலுமிச்சைக்ளையும், ஆரஞ்சுகளையும் பெற்றுள்ளார். இது மொத்தக் பாக்ஸ் ஆபிஸ் கட்டண வசூலில் மூன்றில் ஒரு பகுதியைக் குறிக்கும். கால்நடைகளும்,
காய்கறிகளும் பாரிஸில் சுமார் 4,000 பிராங்குகள் மதிப்புடையதாக இருந்திருக்கும் என்றும் ஆனால் சொசைட்டி
தீவுகளில் அவை அவருக்கு சிறிதளவே
பயனளித்தது என்றும் கூறியுள்ளார்.
அந்த ஓபரா பாடகியால் அதில் ஒரு சிறிய
பகுதியை மட்டுமே உட்கொள்ள முடியும்,
(அவர் உள்ளூர் பழக்கவழக்கத்தில் தேர்ச்சி
பெற்றிருந்தால் பொது விருந்துக்கு எற்பாடு
செய்திருக்கலாம்) ஆனால் அவர்
பன்றிகளுக்கும் கோழிகளுக்குமே அவற்றை இரையாக்கினார். இவ்வாறு. நான்காயிரம்
பிராங்குகள் வீணடிக்கப்பட்டன என்று
க்ளின் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் வோலோவ்ஸ்கி வெளியிட்ட கடிதத்திலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது அன்றிலிருந்து பொருளாதார வல்லுனர்களால் சலிப்படையச்செய்யும் அளவிற்கு இது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்கிறார் பால் எயின்சிக் .
1854-1862
க்கும் இடைப்பட்ட் காலத்தில் உயிரியலாளர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ் மலாய் தீவுக்கூட்டத்திற்கு பயணம் செய்தார்.
அப்போது தான் அவர் தனது புகழ்பெற்ற இயற்கைத் தேர்வின் கோட்பாட்டைத் தோற்றுவித்தார்.
மலாய் தீவுக்கூட்டத்தில் வாலஸ் எதிர்கொண்ட சிரமங்களை இரண்டாவது உதாரணமாக ஜெவோன்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கே பணம் புழக்கத்தில் இல்லாததால் உணவுநேரங்களுக்கு முன்பு கடுமையாக பேரம் பேசவேண்டியிருந்தது.
உணவு விற்பனையாளர்கள்
வாலஸிடம் உள்ள பொருட்களை வாங்க விரும்பவில்லையென்றால்
அவர் இரவு உணவை சாப்பிடாமலே கடந்துசெல்லவேண்டும். இரவு உணவு விற்பவரின் தேவைக்குப் பொருத்தமாக இருக்கும் வாய்ப்புகளை பெருக்க அவர் பொருட்களை
தேர்ந்தெடுத்து வைத்திருக்க
வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மைல்
செலி, ரஸ்ஸல் வாலஸ் ஆகியோரின் விரக்தியை ஏற்படுத்தும்
முட்டாள்தனமான அனுபவங்களை எதிர்கொண்ட பிறகு, பல தலைமுறை பொருளாதார வல்லுனர்களையும்
அவர்களது மாணவர்களையும் போலவே, ஜெவோன்ஸின் வாசகர்களும் பண்டமாற்று முறை குறித்த அவரின்
பேரழிவுகரமான விமர்சனங்களையும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர் என்கிறார்
க்ளின் டேவிஸ். அந்த குறிப்பிட்ட பண்டமாற்று முறைகள், அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின்
பூர்வீக பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தனவே ஒழிய், அவை பாரிஸில் உள்ள
லிரிக் தியேட்டருக்கும் சொசைட்டி தீவுவாசிகளுக்கு
இடையே சர்வதேச வர்த்தகத்தை நடத்துவதற்காக உருவாக்கப்படவில்லை, அல்லது சந்தேகத்திற்கு
இடமின்றி சுவாரஸ்யமான கோட்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் அவை வடிவமைக்கப்படவில்லை.
எந்த வகையிலும் இதுபோன்ற பொருத்தமற்ற உதாரணங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது, இதில் பண்டமாற்றின்
சாதகமற்ற அம்சங்கள் நியாயமற்ற முறையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(தொடரும்)
No comments:
Post a Comment