கோவிட் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து
வருகையில், மறு பக்கம் பாஜக அரசின் மக்கள்
மீதான பலமுனைத் தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கல்வித்துறை,
சுகாதாரம்,
சூழலியல், விவசாயம்,
பொருளாதாரம்
என எதையும் விட்டுவைக்கவில்லை. சமூக
நீதிக்கு முற்றிலும் புறம்பாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்தியுள்ளார்கள்.
கோவிட்19
தாக்கமானது
வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் கூட சுகாதாரத் துறையில் பொதுத்துறை முதலீட்டை அதிகப்படுத்துவதற்கான
விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்
இந்தியாவில் குறைந்தபட்சமாக முகக் கவசங்கள், சுத்திகரிப்புப்
பொருட்கள் கூட மக்களுக்கு கிடைக்காத வகையில், அவற்றை
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளனர். சுகாதாரத்
துறை ஊழியர்களுக்கும் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தக் கட்ட நிதித் தொகுப்பானது,
கோவிட்-19க்குத்
தடுப்பு மருந்து தயாரித்த பின் வழங்கப்படும் என முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி
சுப்ரமணியன் கூறியுள்ளார். நிச்சயமின்மை
இருக்கும் வரை மக்களிடம் பணம் இருந்தாலும் அதை வங்கியில்தான் வைத்திருப்பார்கள் என்றும்,
ஜன்தன்
கணக்கில் அளிக்கப்பட்ட பணமானது செலவளிக்கப்படாமல் சேமிக்கப்பட்டே வருகிறது என்றும்
கூறியுள்ளார். ஜன்தன் கணக்குகளில் அளிக்கப்பட்ட
500 ரூபாயை வைத்து என்ன கோட்டையா கட்ட முடியும்?
மக்கள்
அதை சேமித்து வருகிறார்களாம்! நிதித்
தொகுப்பு என இவர்கள் கூறி வருவது உண்மையில் கடன் திட்டங்களே.
அதுவும்
சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. அவசரக்
கடன் உறுதித் திட்டத்தின் கீழ், பிணையின்றிக் கடன் வழங்க வங்கிகள் மறுப்பதால் தொழில்
நிறுவனங்கள் பாதிப்பு
அடைந்துள்ளன. பாஜக அரசு தன் செயலின்மைக்குக் காரணம் கற்பிக்கவே அடுத்த நிதித்தொகுப்பை
கோவிட்-19 தடுப்பு மருந்துடன் கோர்த்துள்ளது.
கோவிட்
சூழலில் பொதுத் துறை வங்கிகளே அதிகளவில் கடனளிக்கின்றன. அதீத
எச்சரிக்கை உணர்வால் தனியார் வங்கிகள் குறைந்த அளவிலேயே கடன் சேவை அளித்து வருகின்றன.
பெருமளவில்
கடன் பெற்றவை யாவும் உயர் தர மதிப்பீட்டை கொண்ட நிறுவனங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசு நடப்பிலுள்ள பொருளாதாரப்
பிரச்சனைகளுக்குத் தீர்வுகளாக புதிய பிரச்சினைகளை அறிமுகப்படுத்துகிறது.
அப்படித்தான்
தற்சார்பு என்ற மேல்பூச்சுடன் தற்போது நவீன தாராளமய ‘சீர்திருத்த’
சட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் ஏற்றுக் கொள்ளும்
விதத்தில் நவீன தாராளமயச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி எதிர்ப்பு இல்லாமல் ஒப்புதல்
பெற, தற்சார்பு என்ற தேசபக்தி சாயம்
பூசியவாறே அந்நிய முதலீட்டாளர்களை நாட்டின் வளங்களை அபகரிக்குமாறு பாஜக அரசு கூவி அழைப்பது
முன்னுதாரணமற்ற வரலாற்று முரண். ஆனால்
அந்த மேல்சாயம் பெயரளவுக்குக் கூட ஒட்டவில்லை. “தற்சார்பு என்பது கதவுகளை மூடுவது
அல்ல, கதவுகளை மேலும் திறப்பதே”
என்று
தற்சார்புக்குப் புதியதொரு முரணான விளக்கத்தைத் தந்துள்ளார் பியுஷ் கோயல்.
சுதந்திரம்
என்பது அடிமைநிலையே என்று கூறுவதைப் போலத்தான் இருக்கிறது அவரது இந்த விளக்கம்.
பிரதமரும், நிதியமைச்சரும்,
தொழில்துறை
அமைச்சரும் போட்டா போட்டியுடன் அந்நிய முதலீட்டாளர்களுக்குச் சிகப்புக் கம்பள வரவேற்பு
அளித்து வருகிறார்கள். பொருளாதார நடவடிக்கைகள்
பின்தங்கியுள்ள நிலையில் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு எந்தப் புதிய திட்டங்களும்
இல்லை அப்படியிருந்தாலும் அனைத்தையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்
பாஜக அரசின் நிலைப்பாடாக உள்ளது. அரசு
எல்லாத் துறைகளையும் தனியார் நிறுவனங்களுக்கே திறக்க உள்ளது என்று சொல்லி,
நிறுவனங்கள்
தங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார் நிதியமைச்சர்.
நான்கைந்து
வங்கிகளைத் தவிர மற்றப் பொதுத்துறை வங்கிகள் அனைத்தையும் தனியார்மயப்படுத்த அரசு முடிவு
செய்துள்ளது.
இதயத்தையோ நுரையீரலையோ விற்று
மருந்து வாங்கி உடல்நலம் காப்போம் என்பது எப்பேர்ப்பட்ட மோசடியோ அதைப் போன்றதுதான்
பொதுத் துறை வங்கிகளையும் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்திப் பொருளாதாரத்தை
மேம்படுத்துவோம் என்பதும். ஆனால்
அதையும் ஒரு படி தாண்டி இதயத்தை விற்று விசத்தை வாங்கவே முன்னிற்கிறது.
பாஜக
அரசு. இலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட
தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு முறையாக சேவை வழங்க மாட்டா என்பதை கோவிட்-19
தாக்கம்
மீண்டும் தெளிவாக மெய்ப்பித்துள்ளது. இந்தியாவில்
60%க்கு மேல் தனியார் நிறுவனங்களே மருத்துவ சேவை அளித்து வருவதால்தான்
கோவிட் தாக்கத்திற்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணம்
கொண்டவர்கள் மட்டுமே கோவிட்-19இலிருந்து
பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைதான் தொடர்கிறது. இந்தியாவில்
மற்ற மாநிலங்களை காட்டிலும் கோவிட்-19ஐ கேரளா
சிறப்பாகக் கையாண்டு உலக அளவில் பிரபலாமானதற்கு முக்கிய காரணம் அங்கு பேணப்படும் பொதுத்துறை
மருத்துவமனைகளே ஆகும்.
தலைமை வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் விவசாய விளைபொருட்களுக்குக்
குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதைத் திறனற்ற செயல்பாடாகக் கருதுகிறார்.
அவர்
எந்த வர்க்கத்திற்காகச் செயல்படுகிறார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
சுய
லாபத்திற்காகச் செயல்படும் பெருமுதலாளிகளின் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்வதையோ,
கார்ப்பரேட்
வரி குறைப்பையோ, அரசு நிர்வாகிகளுக்கு அளிக்கப்படும்
ஊதிய உயர்வையோ அவர் அவ்வாறு கருதியிருப்பாரா? இதற்குச்
சற்றும் சளைத்தவர் அல்ல முன்னாள் தலைமை வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
அவர்
கேட்கிறார்:
”அரசு
தனியார்மயத்தைப் பற்றிப் பேசிவந்த போதிலும், ஏன்
4-5 மாதங்களில் சந்தை ஏற்றத்தை தனியார் மயப்படுத்தப் பயன்படுத்திக்
கொள்ளாமல் உள்ளது?” ‘ஃபாஸ்ட்
ட்ராக் மோடில்’ அதிவிரைவாகப் பொதுத் துறை நிறுவனங்களைத்
தனியார் மயப்படுத்தச் சொல்கிறார். விவசாயத்
துறையில் அறிமுகப்படுத்தியுள்ள தாராளமயச் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ளார்.
பாஜக அரசு வேளாண்மையைத் தனியார்
பெருநிறுவனங்களின் வேட்டைக்கு விட்டுள்ளது.
மின்சார வரைவுத் திருத்தச் சட்டம்-2020,
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம்-2020,
வேளாண் பொருட்களின் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம்-2020,
விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு
அவசர சட்டம்-2020 எனப்
புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்துமே விவசாயிகள் நலனுக்கும் நுகர்வோர்
நலனுக்கும் முற்றிலும் புறம்பானது.
வழக்கம் போல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் எனக் கூறி ,
,துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, விவசாயப் விளைபொருட்களிலும் எதிர்கால ஒப்பந்தங்களுக்கான சந்தையை ஆரம்பிக்கவுள்ளது
பாஜக அரசு. பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் நிலையிலா இந்தியாவின்
விவசாயிகள் உள்ளனர்?. பருப்பு
வகைகளின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு
அடையவில்லை, நாம் பருப்பு,
பயறு வகைகளை அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். பருப்பு
வகைகளின் விலைவாசியானது ஏற்கெனவே அதிகமாகவுள்ள நிலையில் அவற்றில் ஊக வணிகத்தை ஊக்குவிக்கும் விதத்தில்
இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்துவது அவற்றின் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
இதனால் ஊக வணிகர்களும் இடைத்தரகர்களுமே இலாபமடையவுள்ளனர். விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படவுள்ளனர். இந்தியா
முழுவதும் உர விற்பனை நிறுவனங்கள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே விவசாயிகளிடம் உரம் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை வலுவந்தமாகத் திணிக்க
இதுவா நேரம்?
ஜூன் மாதத்திற்கான தொழில்துறையின் வளர்ச்சி
நிலை:
தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கான
அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி எட்டு முதன்மைத் தொழில்துறைகளின் வளர்ச்சி
வீதம் (-)15.0%
குறுக்கமடைந்துள்ளது, மே
மாதத்தில் இது (-)22.0% வீழ்ச்சியடைந்திருந்தது.
2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில்
எட்டு முதன்மைத் தொழில்துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி (-)24.6%
குறுக்கமடைந்துள்ளது.
தொழில்துறை
உற்பத்திக் குறியீட்டில் (ஐ.ஐ.பி)
இந்த
எட்டு முதன்மைத் துறைகளும் 40.27 சதவீதம்
பங்கு வகிக்கின்றன. ஜூன் மாதத்தில் உர உற்பத்தியைத்
தவிர மற்ற அனைத்து முதன்மைத் தொழில்துறைகளின் வளர்ச்சி வீதமும் எதிர்மறையாக உள்ளது.
நிலக்கரி:
நிலக்கரி உற்பத்தி
2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன்
மாதத்தில் (-)15.5 சதவீதம்
குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல்
முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அதன் உற்பத்தியானது (-)15.0 சதவீதம்
குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய்:
கச்சா எண்ணெய் உற்பத்தி 2019 ஜூன் மாதத்தை விட
2020 ஜூன் மாதத்தில் (-)6.0 சதவீதம்
குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல்
முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அதன் உற்பத்தியானது (-)6.5
சதவீதம்
குறைந்துள்ளது. .
இயற்கை எரிவாயு உற்பத்தி
2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது
2020 ஜூன் மாதத்தில் (-)12.0 சதவீதம்
குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல்
முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அதன் உற்பத்தியானது
(-)16.2 சதவீதம் குறைந்துள்ளது.
பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்களின்
உற்பத்தி 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்
போது 2020 ஜூன் மாதத்தில்
(-)8.9 சதவீதம் குறைந்துள்ளது.
2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அதன்
உற்பத்தியானது (-)18.2 சதவீதம்
குறைந்துள்ளது.
உரங்கள்:
உரங்களின் உற்பத்தி
2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது
2020 ஜூன் மாதத்தில் 4.2 சதவீதம்
அதிகரித்துள்ளது. 2020-21 ஏப்ரல்
முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அதன் உற்பத்தி 2.8
சதவீதம்
அதிகரித்துள்ளது.
எஃகு:
எஃகு உற்பத்தி
2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன்
மாதத்தில் (-)33.8 சதவீதம்
குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல்
முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதன் உற்பத்தியானது (-)51.7
சதவீதம்
குறைந்துள்ளது.
சிமெண்ட்:
சிமெண்ட் உற்பத்தி
2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது
2020 ஜூன் மாதத்தில் (-)6.9 சதவீதம்
குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல்
முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் அதன் உற்பத்தி (-)38.3
சதவீதம்
குறைந்துள்ளது.
மின்சாரம்:
2019ஆம்
ஆண்டு ஜூன் மாதத்தை விட 2020 ஜூன்
மாதத்தில் மின்சார உற்பத்தி (-)11.0 சதவீதம்
குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல்
முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதன் உற்பத்தியானது
(-)16.1 சதவீதம் குறைந்துள்ளது.
பணவீக்க நிலை:
நுகர்வோர் குறியீட்டு அடிப்படையிலான
சில்லறைப் பண வீக்கத்தின் அளவானது ஜூன் மாதத்தில் கிராமப்புறத்தில்
6.20% ஆகவும் நகர்ப்புறத்தில்
5.91% ஆகவும். ஒட்டுமொத்த
அளவில் 6.09%
ஆகவும்
கணக்கிடப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வானது
ஜூன் மாதத்தில் கிராமப் புறத்தில் 8.41% ஆகவும்,.
நகர்புறத்தில் 6.92% ஆகவும்,
ஒட்டுமொத்த
அளவில் 7.87 % ஆகவும்
உள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசியானது
தானியப் பொருட்களில் 6.49%, இறைச்சி,
மீன்
ஆகியவற்றில் 16.22%, முட்டையில்
7.40%, பால் பொருட்களில்
8.44 %, எண்ணெய், கொழுப்பு
ஆகியவற்றில் 12.27%, காய்கறிகளில்
1.86% அதிகரித்துள்ளது.
பழங்களின்
விலைவாசி (-)0.68% குறைந்துள்ளது.
இழப்பு இந்தியாவிற்கே:
தற்பொழுது இந்தியா சீனப் பொருட்களையும்,
தொழில்நுட்பத்தையும்
புறக்கணிப்பதன் மூலம் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
சீனாவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை இன்னும் அதிக விலை கொடுத்தே மற்ற நாடுகளிலிருந்து
வாங்க முடியும். உள்நாட்டிலே அவற்றை உற்பத்தி செய்ய உற்பத்தித் துறையை,
தொழில்நுட்பத்தை
மேம்படுத்த வேண்டும், ஆனால் பாஜக அரசின் அறிவு
மட்டமோ யோகா தொழில் நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்ற நிலையில்தான்
உள்ளது. இந்தியாவால் உலகளவில் பெரிய
யோகா சந்தையை உருவாக்க முடியும் என பிரதமரும், தொழில்துறை அமைச்சரும் கூறி வருகிறார்கள். யோகா என்ற உடற்கலைக்கு இடையில்தான் மோசடியான முறையில் இந்துச் சாயம் பூசப்பட்டது.
யோகாவிற்கு இந்து மதமோ, பாஜகவோ உரிமை கொண்டாட முடியாது.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக
ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இழுபறி நிலையிலேயே
உள்ளது. இதற்காக இந்தியா அமெரிக்காவிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், பாதாம்,
வால்நட்,
ஆப்பிள்
ஆகியவற்றின் மீதான காப்பு வரியைக் குறைத்துள்ளது. மூலதனத்தின்
மதிப்புக் கோட்பாட்டின் படி தொழில்நுட்ப வளர்ச்சியில் வெவ்வேறு நிலைகளில் உள்ள இரு
நாடுகளுக்கிடையே நடக்கும் தடையற்ற வர்த்தகமானது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கே
சாதகமாக அமையும், இழப்படையும் தரப்பாகத்தான்
இந்தியா இருக்க முடியும். டாலர்
உலகப் பணம் என்ற தகைமை பெற்று வல்லரசாக உள்ளது. டாலருக்கு
எதிராக இந்திய ரூபாய் 61 சதவீத
நேரத்தில் மதிப்பிழந்துள்ளது. இந்நிலையில்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது இந்தியாவிற்கு பாதகமாகவே அமையும்.
இந்தியா
வர்த்தகப் பற்றாக்குறையால் சீனாவிடம் இழப்பதைக் காட்டிலும் அமெரிக்காவிடம் மேலும் அதிகமாக
இழக்கவே நேரிடும்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் மற்றும்
சேவைகளுக்கான வரி அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
இன்றைய
நிலை எப்படி உள்ளது எனப் பார்த்தால், மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை
அளிக்கும் நிலையில் மத்திய அரசு இல்லை என்கிறார்
மத்திய
நிதிச் செயலாளர்.
யாரிடம் வரி வாங்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம்
வரிச் சலுகைகள் வழங்கி, சிறு
குறு நிறுவனங்களிடம் வலுவந்தமாக வரிபெறும் விதத்தில், அனைத்தையும்
வரிக் கட்டமைப்புக்குள் கொண்டுவரும் விதமாகவும், மாநிலங்களின்
வரிபெறும் சுயாட்சி உரிமையைப் பறித்து வருவாயனைத்தையும் மையப்படுத்தும் விதமாகவுமே
ஜிஎஸ்டி கொண்டு வந்தார்கள். ஜிஎஸ்டி
வந்தால் விலைவாசி குறையும் என்றார்கள், வரி
வருவாய் அதிகரிக்கும் என்றார்கள். ஆனால்
விலைவாசியும் குறையவில்லை, வரிவருவாயும்
அதிகரிக்கவில்லை. பேராசை பெரு நஷ்டம் என்ற
பழமொழிக்கு நல்ல எடுத்துக்காட்டுதான் ஜி.எஸ்.டி.
ஜூலை மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மாநிலங்களுக்கு இழப்பீடு அளிக்கும் வழிமுறையை
விவாதித்திருக்க வேண்டும், ஆனால் அந்தக் கூட்டமே நடைபெறவில்லை.
காலநிலை மாற்றம்:
காலநிலை மாற்றம் குறித்த ஆக்ஸ்ஃபோர்ட்.
பொருளாதார
ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. புவி
வெப்பமாதலால் தற்போது குளிர்ப் பிரதேசங்களாக உள்ள வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓரளவு
பயனடையலாம் என்றும் ஆனால் உலகின் வெப்பமண்டல, மிதவெப்ப
மண்டலப் பகுதிகள் (உலகின் தென் கோளம்)
வெப்பநிலை
15 பாகை அதிகரிக்குமானால், கடுமையான
அழிவுகளுக்குள்ளாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா
தற்போது கடைபிடிக்கும் கொள்கைகளையே தொடர்ந்தால்
2100க்குள் 90% ஜிடிபியை
இழக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்
காலநிலை மாற்றம் பற்றியோ, சுற்றுச்சூழல் பற்றியோ எந்த அக்கறையும் இல்லாத
பாஜக அரசு ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சுற்றுச்சூழல் நெறிமுறைகளையும் நீர்த்துப் போகச் செய்யும் விதமாக
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான-2020 வரைவு
அறிவிக்கையை வெளியிட்டிருப்பது பெருத்த
வெட்கக்கேடு.
முதலாளித்துவத்தில் பொருளாதார
நெருக்கடிகள் இலாப வீதம் வீழ்ச்சியடைவதால் தூண்டப்படுகின்றன. அதன் விளைவாக சிறு மூலதனங்கள், முதலீடுகள், மதிப்பிழக்கின்றன. சிறு உற்பத்தியாளர்கள், சிறு, குறு நிறுவனங்கள், சிறு வணிகர்களே
மீளாக் கடன் துயரால் பெரும் பொருளாதார அழிவிற்குள்ளாகின்றனர். பழைய தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்களும் அழிவுறுகின்றன. வங்கிகள் நெருக்கடிகளுக்குள்ளாகின்றன. மூலதனங்கள் மதிப்பிழக்கின்றன.
சிறிய மீன்களைப் பெருமுதலைகள் விழுங்குகின்றன. மையப்படுத்துதல் நிகழ்முறை நடந்தேறுகிறது. வேலையின்மை
அதிகரிக்கிறது, கூலி வீழ்ச்சியடைகிறது. மூலதனம் மதிப்பிழப்பதாலும், தொழிலாளர்களின் வேலை நேரத்தை
நீட்டித்து பல்வேறு முறைகளில் உழைப்புச் சுரண்டலைக் கடுமையாக்குவதாலும் இலாப வீதம்
மீண்டும் உயர்த்தப்படுகிறது. மூலதனக் குவிப்பில் முன்னணியில்
உள்ளவர்களால் மட்டுமே மேலும் இலாபகரமாகத் தொழிலை மேற்கொள்ளும் நிலையைப் பெற முடிகிறது.
நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் வீழ்ந்துள்ள நிலையில் இப்படித்தான்
முகேஷ் அம்பானியும் உலகின் ஆறாவது பெரும் பணக்காரராக முன்னேறியுள்ளார். அவரது வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியதுதான் பா.ஜ.க அரசின் தலையாய சாதனையாகவுள்ளது.
இந்தியாவில் பொருளாதாரம் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நலிவடைந்த மக்களுக்கும், சிறு
குறு நிறுவனங்களுக்கும் நிதி உதவி அளிக்க இடமுள்ளதாக சர்வதேசப் பண நிதியத்தின் நிதி
விவகாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். பாஜக
அரசு உதவுவது இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படக் காரணமான அம்பானி-அதானிகளுக்கே.
அவர்களின்
பாதுகாவலனாக இருக்கும் பாஜக அரசு, அவர்களையே
பொருளாதார இரட்சகர்கள் எனப் போற்றிவரும் நிலையில் இந்த ஒட்டுறவுக் கூட்டணியை முறியடிப்பதன்
மூலமே மக்களின் பொருளாதார மீட்சி ஆரம்பமாகும். முடக்கப்பட்ட
நிலையிலும் நாடு முழுவதும் விவசாயிகளும், மக்களும்,
சமூக
ஆர்வலர்களும், போராளிகளும் எதிர்ப்பைத் தெரிவித்துத்
தொடர்ந்துள்ள போராட்டத்தில்தான் அதற்கான நம்பிக்கை ஒளியைக் காண முடிகிறது.
No comments:
Post a Comment