அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:
தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா
ஹினா
சுபேரி: சகோதரி ஷான்சா,
தயவுசெய்து உங்கள் கேள்வியை கேளுங்கள்.
ஷான்சா: நன்றி சகோதரி. எனது கேள்வி சகோதரர் அனில்
விளாடிற்கானது, இங்கு வந்ததற்கு நன்றி. உங்கள் அனைவருடனும் அமைதி நிலவட்டும். எனது
கேள்வி என்னவென்றால், இந்து மதத்தில் உள்ள சாதி அமைப்பு, அது மிகவும் உண்மையானது என்பதும்
அது மத நிலைப்பாட்டில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது
என்ற விழிப்புணர்வும் நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இப்போது ஹிந்துத்துவா இயக்கம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை நீங்கள் உண்மையில் எப்படி
பார்க்கிறீர்கள்? உங்களின் முயற்சிகள் அதற்கான முயற்சிகளில் ஒன்று என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதை
நான் அறிவேன், உங்களுக்குத் தெரிந்த முஸ்லீம் அமைப்புகளுடன் ஒத்துழைத்து செயல்படுவதோடு,
அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான
கல்வியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் உண்மையில் நீங்கள்
வேறு என்ன பார்க்கிறீர்கள், ஏனென்றால் அது மதத்திற்குள்ளும், மனப்போக்குகளுக்குள்ளும்
ஆழமாகப் பதிந்துள்ளது, மேலும் இந்த வகையான கோட்பாட்டின் வளார்ச்சியைக் கட்டுப்படுத்த
நாம் உண்மையில் எப்படி செயல்படவேண்டும் என்று சொல்லுங்கள்.
அனில்: ஆம், இது மிகவும் கடினமான கேள்வி. குழு
உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவரும் பதிலைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள்
என்று நினைக்கிறேன். ஆனால், சிறுபான்மையினர் அனைவரும் ஒன்றிணைந்து, அனைவரையும் ஒருங்கிணைத்து,
ஒத்த எண்ணம் கொண்ட ஹிந்துக்களிடம் இருந்தும் உதவி பெறாதவரை, இந்தப் பிரச்சினை ஓயப்போவதில்லை.
தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் அழிந்து வருகிறது. இந்தியாவின் அமைப்பில் கூடுதலாக
வாக்கு பெற்றவரே ஆட்சி செய்யமுடியும். சுமார் 35 சதவீத வாக்குகள் உங்களுக்கு பெரும்பான்மையான
இடங்களைப் பெற்றுத் தரும், மேலும் தீவிர வலதுசாரி சக்திகளை நீங்கள் ஈர்த்து அந்த
35 சதவீதத்தைப் பெறலாம், பின்னர் அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி ஆட்சி செய்யலாம்.
அதனால் இந்தியா அழிவின் பாதையில் செல்கிறது,
அதே நேரத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்த விதத்தைப் பார்த்தால், கருமேகங்களில் வெள்ளித்திரையும்
உள்ளது என்றும் சொல்லமுடியும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்த விதம், சி.ஏ.ஏ-எதிர்ப்பு
போராட்டங்கள் விழிப்புணர்வுக்கான அறைகூவலாக உள்ளது. உலகமெங்கும் காணப்பட்ட பெரும் எதிர்ப்பின்
காரணமாக அந்தச் சட்டங்கள் இயற்றப்படவில்லை, அது ஒரு எதேச்சதிகார அரசாங்கமாக இருந்தபோதும்,
அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் வழியில், எதையும் அவர்கள் பெறுவது எளிதானது அல்ல
என்பதை அவர்கள் அறிவார்கள். ஆம், தொடரவேண்டும். மக்களே நாம் ஒன்றுபட வேண்டும். நாம்,
நம்மில் நிறைய பேர் பலவிதமான மதம், ஜாதி, பாலினம், மதம் என்று பிரிந்திருந்தாலும்,
பொது நலனுக்காக நாம் ஒன்றுபட வேண்டும். அந்த கூட்டணிகளை உருவாக்க வேண்டும்.
(தொடரும்)