Monday, April 29, 2024

தொழிற்சங்கங்களின் உலகக் கூட்டமைப்பின் (WFTU) 2024 மேதினப் பிரகடனம்:

 


5 கண்டங்களில் 134 நாடுகளில் வாழும், வேலை செய்யும், போராடும் 1050 லடசத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் போர்க்குணமிக்க, வர்க்க சார்புக் குரலான உலக தொழிற்சங்க கூட்டமைப்பு, 1886 சிகாகோ தொழிலாளர்கள் போராட்டத்தின் 138வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இப்போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் நீடித்த மைல்கல்லாகவும், இன்றைய, நாளைய போராட்டங்களுக்கு ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாகவும் அமைந்துள்ளது. உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, அனைவருக்குமான இலவச பொது சுகாதாரம், இலவச பொதுக் கல்வி, கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றுடன் நிலையான வேலைக்கான இடைவிடாத வர்க்கப் போராட்டத்தின் கலங்கரை விளக்கமாகவும் உள்ளது.

இந்த ஆண்டு மே தின நினைவு தினம் ஒரு இரத்தக்களரி ஆண்டின் நினைவு நாளாக வரலாற்றில் இடம்பெறும். ஏனென்றால், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், மூலதனத்தின், அவர்களின் அரசாங்கங்களின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்து, கோரிக்கைகளை எழுப்பும் அதே வேளையில், பாலஸ்தீனத்தில் உள்ள நமது சகாக்கள், இஸ்ரேலால் பலஸ்தீனத்தில் நடத்தப்படும் இனப்படுகொலையில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் பல உடல்களை புதைப்பர். உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள தொழிலாளர்கள் குற்றச் செயல்களுக்கு அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு மே தின நடவடிக்கைகளையும் போராடும் பாலஸ்தீனிய மக்களுடனான ஒருமைப்பாட்டிற்கான ஆர்ப்பாட்டமாகவும், கொலைகார இஸ்ரேலையும், ஏதோ ஒரு வகையில் இனப்படுகொலையை ஆதரிக்கும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளையும் கண்டனம் செய்யும் ஆர்ப்பாட்டமாகவும் மாற்றுவர்.

அதேபோல், ஏகாதிபத்தியங்கள் மற்றும் ஏகபோகங்களின் இலாபங்களுக்காக, மக்களுக்கு எதிராக செய்யப்படும் மற்ற எல்லா குற்றங்களையும் தொழிலாளர்கள் அமைதியாகக் கடப்பதில்லை. இராணுவத் தலையீடுகளால் பூகோளத்தின் பல்வேறு இடங்களில் இரத்தம் சொட்டும்போது சர்வதேச வர்க்கம் சார்ந்த தொழிற்சங்க இயக்கம், ஒழுங்கமைக்கப்பட்டு, தீர்க்கமாக அமைதிக்காகப் போராடுகிறது. ஏகாதிபத்திய திட்டங்களும், இராணுவ மோதல்களும் வேண்டாம் என்று நாங்கள் கூறுகிறோம். அமைதிக்கான போராட்டம் ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது முதன்மையாக நேட்டோ மற்றும் அனைத்து இராணுவக் கூட்டணிகளையும் அகற்றுவதற்கானப் போராட்டம், தலையீடுகள், தடைகள், முற்றுகைகள் மற்றும் பொருளாதாரப் போர்கள் இல்லாமல் அனைத்து மக்களும் தங்கள் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டம். சர்வதேசச் சட்டம் நடைமுறையில் சக்தி வாய்ந்தவர்களின் சட்டமாகவே மாறுகிறது, இந்த இரட்டைதரப்புக் கொள்கைக்கு எதிரான போராட்டம்.

1886 சிகாகோ முன்னோடிகளின் கருத்துக்களும், கோரிக்கைகளும் இன்றும் பொருத்தமானவை. முதலாளித்துவ நெருக்கடி பொதுப்படையாக்கப்பட்டு ஆழமாகியுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வுகள் வியத்தகு அளவில் விரிவடைந்துள்ளன. ஜனநாயக சுதந்திரமும், தொழிற்சங்க உரிமைகளும், உலகம் முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அதிக வாழ்க்கைச் செலவும், பணவீக்கமும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை கொடூரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அமைப்பாவதற்கான உரிமை, கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமை, வேலைநிறுத்தம் செய்வதற்கான புனித உரிமை ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

தனிப்பட்ட ஒப்பந்தங்கள், தனியார்மயமாக்கல், வேலைகளை வெளியில் ஒப்படைத்தல் (outsourcing), தொலைபேசி வழிப் பணிகள் (teleworking) மற்றும் சேவையை குத்தகைக்கு விடுதல் (service leasing) ஆகியவை இந்த கடுமையான நவதாராளவாத தாக்குதலால் எடுக்கப்பட்ட சில வடிவங்கள்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கிய சமூகப் பொறுப்புகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் ஓய்வுபெறும் வயதின் எதேச்சதிகாரமான, தன்னிச்சையான அதிகரிப்பு முறைப்படி தொடர்கிறது.

முதலாளித்துவ நெருக்கடியின் சுமையானது, உழைக்கும் மக்கள் மற்றும் பொதுவாக பலவீனமான மக்கள் அடுக்குகளின் தோள்களில் மீண்டும் ஒருமுறை சுமத்தப்பட முயற்சிக்கப்படுகிறது என்பது வெளிப்படையானது.

முதலாளித்துவத்தின் அடிமட்ட அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களையும், தொழிலாளர் விரோத தாக்குதல்களையும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் செயலற்ற முறையில் ஏற்கவில்லை. அவர்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கான கட்டணத்தை செலுத்த மறுக்கின்றனர். உலகின் அனைத்து மூலைகளிலும் போர்க்குணமிக்க போராட்டங்களுடனும், அணிதிரட்டல்களுடனும், அவர்கள் தங்கள் சமகால தேவைகளை நிறைவு செய்யுமாறுக் கோருகின்றனர். தொழிற்சங்கங்களின் உலகக் கூட்டமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து உறுதியாக இந்தப் போராட்டத்தின் முன்னணியில் உள்ளன.

இந்த ஆண்டு மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில், தொழிற்சங்கங்களின் உலகக் கூட்டமைப்பு மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கொடிகளுக்கு அடுத்ததாக பாலஸ்தீனியக் கொடி பெருமையுடன் அசையும். ஒற்றுமை உணர்வில், சர்வதேசிய உணர்வில், வீர கியூபாவின் மக்களுடனும், கொலைகாரத் தடைகள், தலையீடுகள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு, முற்றுகைகள் மற்றும் பொருளாதாரப் போர்களுக்கு எதிராகப் போராடும் மக்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

2024 மே தினத்தையொட்டி, உலகெங்கிலும் உள்ள வர்க்கம் சார்ந்த, போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களை, தொழிற்சங்கங்களின் உலகக் கூட்டமைப்பு இந்த முழக்கத்தின் கீழ் இந்த ஆண்டு பிரச்சாரத்தையும், செயல்பாடுகளையும் ஏற்பாடு செய்ய அறைகூவல் விடுக்கிறது:

அவர்களின் லாபத்திற்கு எதிராக, நாங்கள் எங்கள் வாழ்விற்காக எழுவோம்!

மேலும் பாரிய, மேலும் போர்குணமிக்க

தொழிலாளர்களின் சமகாலத் தேவைகளுக்காக, சுரண்டலுக்கு எதிராக!

ஜனநாயக மற்றும் தொழிற்சங்க சுதந்திரங்களுக்காக!

பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையுடன், ஏகாதிபத்திய போர்களுக்கும் தலையீடுகளுக்கும் எதிராக!

வர்க்கம் சார்ந்த தொழிற்சங்க இயக்கத்திற்கு, ஒடுக்குமுறை, பாகுபாடு, சுரண்டல் ஆகியவற்றுடன் சமரசம் செய்து கொள்ளாது, எதிர்க்கும் தொழிலாளர்களுக்கு கண்ணியமான பாதை ஒன்றுதான்: போராட்டங்களின் பாதை!

நடந்த போராட்டங்கள் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியைக் காட்டுகின்றன, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான முன்னோக்கின் பாதையை ஒளிரச் செய்கின்றன.

 

 

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...