Sunday, February 20, 2022

வரிப் புகலிடங்கள் ஊழலை எவ்வாறு தூண்டுகின்றன?

 

ஊழலை எளிதாக்குவதில் வரிப் புகலிடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாடுகடந்த நிதியமைப்பின் வளர்ச்சி அதோடு தொடர்புடைய ஊழல் கேடுகளைக் கொண்டுவந்துள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் மோசடி செய்ய விரும்புபவர்களால் உருவாக்கப்பட்ட அதே அமைப்புகள், வழிமுறைகளை ஊழல் நடைமுறைகள் பயன்படுத்துகின்றன.

 

ஊழலை எளிதாக்குவதில். கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், பிற நிதி இடைத்தரகர்களின் பங்கு ஆய்வுகளை அடிக்கடி தவிர்ப்பதே ஆகும். நிதி கமுக்க சட்டங்கள், கொள்கைகள், கமுக்க ஆட்சிப் பிரதேசங்களின் பரந்த வலையமைப்பு ஆகியவை ஊழலைத் தடுக்காமல், மேலும் மோசமாக்குவதில் பங்கு வகுக்கின்றன. மனிதக் கடத்தல், ஊழல் தொடர்புடைய குற்றங்கள் கமுக்கத்தின் மூலமே வளர்ந்த பரவலான மனித அத்துமீறல்களையும், துயரத்தையும் உருவாக்குகிறது. கடத்தல்காரர்களின் இலக்குகளாக பெண்களும் சிறுமிகளும் அதிக விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். பெருநிறுவன சக்தியும்; அரசாங்கங்களும்; வரிக் கொள்கை, கமுக்கச் சட்டங்களின் வடிவமைப்பு, வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தி தேவையான சீர்திருத்தங்களை எதிர்க்கும், அரசுகளுக்கு இடையேயான அமைப்புகளும், ஊழலை நிலைநிறுத்துவதில் உடந்தையாக உள்ளன.

 

நிதிக் கமுக்கம் இல்லாமல் ஊழல் செய்ய முடியாது. நிதிக் கமுக்கத்தின் மையமாக நாடுகடந்த வரிப்புகலிடங்கள் செயல்படுகின்றன.

 

கருப்புப் பணம் பெருமளவில் வெளியேறுவதால் உண்மையில் பாதிக்கப்பட்வை நைஜீரியா, பங்களாதேஷ் போன்ற உலகின் "மிகவும் ஊழல் நிறைந்த" நாடுகளா? அல்லது சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, லக்சம்பர்க், அமெரிக்கா போன்ற அனைத்துக் கொள்ளைகளையும் கையாளும் நாடுகளா?

 

ஊழலின் பாரம்பரிய வரையறைகள் மிகவும் குறுகியவை. உலக வங்கி அல்லது சர்வதேச வெளிப்படைத்தன்மைக்கான நிறுவனங்கள் ஊழலற்ற நாடுகள் மற்றும் தொழில்துறைகளின் குறியீடுகளை உருவாக்கியுள்ளன, அவை பொதுவாக ஏழை ஆப்பிரிக்க நாடுகளை 'மிகவும் ஊழல் நிறைந்தவை' என்று அடையாளம் காட்டுகின்றன, அதே நேரத்தில் மூலதனம் பறக்கவும், பெரும் கொள்ளை, லஞ்சம், வரி ஏய்ப்பு வரி மோசடிகளையும் எளிதாக்குவதில் வரிபுகலிடங்களில் உள்ள நிதி அமைப்பின் பங்கைப் புறக்கணிக்கின்றன. நைஜீரியர்களிடம் உலகின் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளில் ஒன்றாகத் ங்கள் நாடும் உள்ளது என்று கூறுவது அவர்களுக்கு அதிகம் உதவுவதில்லை. அவர்கள் தங்களுடைய பணம் எங்கே போனது என்று தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

 

மில்லியன் டாலர்களை ஒரு சூட்கேஸில் அடைத்து நாடுகடந்து செல்வதெல்லாம் பழையகாலம், நவீன வங்கியில் திருடப்படக்கூடிய தொகைகளுக்கு வரம்பு இல்லை. ஆனால் நிதி கமுக்கம் இல்லாமல் அங்கு ஊழல் செய்யமுடியாது; வரி புகலிடங்களும் கமுக்க ஆட்சிப் பிரதேசங்களும் அவற்றின் மையத்தில் உள்ளன.

 

வரி நீதிக்கான வலையமைப்பு வெளியிடும் நிதி கமுக்கக் குறியீடு இதன் மறுபக்கத்தைக் காட்டுகிறது. இந்த குறியீட்டின் மூலம் அடையாளம் காணப்படும் மிக முக்கியமான கறுப்புப் பண மையங்கள் மிகவும் பாரம்பரியமான குறியீடுகளில் 'சுத்தமானது' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஊழல் என்பது பொதுநலனை ஊக்குவிக்கும் விதிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் அந்த விதிகளின் மீதான நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஊழல் என்பது ஓர் அமைப்பு ரீதியான பிரச்சனை. ஆனால் சர்வதேச வெளிப்படைத் தன்மைக்கான அமைப்பு (Transparency International) ஊழலுக்குத் "தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்" என்றும், உலக வங்கி "தனிப்பட்ட லாபத்திற்காக பொதுப் பதவியை தவறாகப் பயன்படுத்துதல்" என்றும் வரையறை செய்து ஊழல் என்பதன் வரையறையைக் குறுக்கியுள்ளன. இத்தகைய வரையறை அமைப்பு அடிப்படையில் இல்லாமல் தனிநபர்களின் பரிவர்த்தனைகளிலேயே அதிகக் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது. ஊழலால் முழுச் சமூகமும் சிதைந்து விடும். உண்மையில், நாடுகடந்த நடவடிக்கைகளால் உலக நிதி அமைப்பு முழுவதும் சீர்கெட்டுள்ளது.

 

இருப்பினும், இந்த மறுபக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டில், சர்வதேச வெளிப்படைத் தன்மைக்கான அமைப்பு, உலகளாவிய ஊழலைப் பற்றிய முழுச் சித்திரத்தைப் பெற, நிதிக் கமுக்கக் குறியீட்டை அவர்களின் ஊழல் புலனாய்வுக் குறியீட்டுடன் ஒப்பிடுவதற்கு கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

பலர் ஊழலை லஞ்சத்துடன் நெருக்கமாகத் தொடர்புபடுத்துகிறார்கள், ஆனால் அதன் அமைப்புவழித் தன்மை ஊழலை மிகப் பெரிய பிரச்சனையாக்குகிறது. ரேமண்ட் பேக்கர் ”இலஞ்சம் என்பது எல்லைதாண்டிய சட்டவிரோத ஊழல் பாய்ச்சல்களில் வெறும் மூன்று விழுக்காடு மட்டுமேஎன்கிறார். ஊழலின் பாரம்பரிய வரையறைகள் தனியார் துறையைப் புறக்கணிக்கும் அதே வேளையில், பொதுத் துறையில் அதிகக் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கின்றன. சந்தை மோசடி போன்ற சட்டவிரோதமான அல்லது முறைகேடான நிதிச் செயல்பாடுகள் என நாம் அடையாளம் காணும் பெரும்பாலானவை தனியார் துறையில் கமுக்கமாகப் பாதுகாக்கப்படுகிற ஊழல் நடத்தைகளைக் குறிக்கின்றன. பொதுவாக. இந்த ஊழல் ஓட்டங்களை வரவேற்று, எளிதாக்கி, தீவிரமாக ஊக்குவிக்கும் வெளிநாட்டு வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்களின் "நுட்பமான உள்கட்டமைப்பு" ஊழல் பிரச்சனையின் மையப் பகுதியாகும்.

 

ஊழலின் சிறந்த வரையறை:

"ஊழல் என்பது பொதுநலனை மோசடி செய்வது மற்றும் பொதுநலனை ஊக்குவிக்கும் விதிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நேர்மையின் மீதான பொது நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும்."

 

வரி நீதிக்கான வலையமைப்பின் முன்னாள் தலைவர் ஜான் கிறிஸ்டென்சன், கிரீஸின் ஊழல் கதையை Grace’s corruption storyஎன்ற பெயரில் அம்பலப்படுத்திய  காணொளி நாடுகடந்த வரிப் புகலிடங்கள் ஊழலை எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்பதை விளக்குகிறது: https://youtu.be/autlpiy2kE8

 

ஜிம்பாப்வே பத்திரிக்கையாளர் ஸ்டான்லி குவெண்டா அல் ஜசீரா பத்திரிகைக்காக மேற்கொண்ட “ஆப்பிரிக்காவை எப்படிக் கொள்ளையடிப்பது”-“How to Rob Africa” என்ற விசாரணையை நீங்கள் பார்க்க வேண்டும்: https://youtu.be/VVN3N3mWa2E

Sunday, February 13, 2022

‘ஜிடிபி’-யின் குறைபாடுகள்

 

பாஜக அரசு இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆக்குவோம் என சவால் விட்டது. அதை நிறைவேற்றவில்லை என்பது வேறு விசயம். பெரும்பாலான நாடுகளில் ஜிடிபியை அதிகரிப்பதே பொருளாதார வளர்ச்சியின் இலக்காகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியும், சமூக முன்னேற்றமும், மக்களின் வாழ்க்கைத்தரமும் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அவற்றைஜிடிபி’-மொத்த உள் நாட்டுப் பொருளாக்கமதிப்பு எனும் போதாக்குறையான ஒற்றை அளவுகோலைக் கொண்டு மட்டுமே அளவிட முடியாது. ‘ஜிடிபிமிகவும்  மிகைப்படுத்தப்படும் ஒரு பொருளாதார அளவுகோல். ‘ஜிடிபியின் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சியாகவும், அதுவே சமூக முன்னேற்றத்தையும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் ஏற்படுத்தும் என்பது போல் ஒரு  முதன்மையான முழுமுதலான குறியீடாகக் கருதப்படுகிறது. ஜிடிபியை அதிகரிப்பதற்கு அளிக்கப்படும் முன்னுரிமை பொருளாதார சமமின்மையைக் குறைப்பதற்கு கொடுக்கப்படுவதில்லை. நாட்டின் ஜிடிபிக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும், திட்டங்களையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் கடுமையாக பாதிக்கிறது.

 ஜிடிபிஎன்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவை மட்டுமே குறிப்பிடுகிறது. அந்தஜிடிபியில் எத்தனை விழுக்காடு உழைக்கும் மக்களை சென்றடைந்தது என்பதைஜிடிபிவளர்ச்சி விகிதம் தெரிவிப்பதில்லை. ‘ஜிடிபிவளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியை பிரதிபலிப்பதில்லை.

முதலாளித்துவ உற்பத்திமுறையால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், வறுமையையும் நேர்த்தியாக மறைக்கவே இத்தகையப் போக்கு உதவுகிறது. நாட்டில் வேலையின்மை அதிகரிப்பதையோ, தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதியம் குறைவதையோஜிடிபிவெளிக்காட்டுவதில்லை.ஒரு நாட்டின்ஜிடிபிமதிப்பு, வளர்ச்சி அதிகமாக இருக்கலாம், ஆனால் ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் பசி, பட்டினி இல்லாமல் மூன்று வேலை உணவு கிடைக்கிறதா, அதற்கான வருவாய் கிடைக்கிறதா, வருவாய் தரும் வேலை கிடைக்கிறதா என்பதைஜிடிபிமதிப்பை மட்டுமே வைத்து கூற முடியாது.

ஒரு நாட்டின்ஜிடிபிமதிப்பு அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேவைகளின் அளவையே குறிப்பிடுகிறது. ஆனால் ஆக்கப்பூர்வமான பொருட்கள் சேவைகள் உருவாக்கப்பட்டதா, இல்லை அழிவுபூர்வமான பொருட்கள் உருவாக்கப்பட்டதா என்பதைஜிடிபிவளர்ச்சியால் வேறுபடுத்திக் காட்ட இயலாது, ஒரு நாட்டில் அதிகமாக போர்த் தளவாடங்களே உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும் அது வளர்ச்சியாகத் தான் மதிப்பிடப்படும். ஒரு நாட்டின் காடுகள், கனிம வளங்கள், இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தி அழித்தாலும் அதுவும்ஜிடிபிவளர்ச்சியாகத் தான் மதிப்பிடப்படும். ஆகவேஜிடிபிவளர்ச்சி என்பது நீடித்த/வளங்குன்றா வளர்ச்சியைக் குறிப்பிடும் அளவுகோல் அல்ல.

ஒரு நாட்டின் தேசிய வருவாய் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதையும்ஜிடிபிஅளவுகோல் மூலம் தெரிந்து கொள்ளமுடியாது. ‘’, ‘என இரு நாடுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ‘நாட்டில் முதல் 10 விழுக்காட்டினர் அந்நாட்டின் 90 விழுக்காடு வருவாயை பெறுகின்றனர், மீதமுள்ள 90 விழுக்காட்டினர் வெறும் 10 விழுக்காடு வருவாயையே பெறுகின்றனர். ‘நாட்டில் முதல் 30 விழுக்காட்டினர் 40 விழுக்காடு வருவாயை பெறுகின்றனர், மீதமுள்ள 70 விழுக்காட்டினர் 60 விழுக்காடு வருவாயை பெறுகின்றனர். ஆனபோதும் இரு நாடுகளும் ஒரேஜிடிபிமதிப்பையேக் கொண்டுள்ளன.’நாட்டுடன் ஒப்பிடும் போதுநாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைவாக உள்ளது. ஆனால் இந்த வேறுபாட்டைஜிடிபிஅளவுகோலால் வெளிக்காட்ட முடியாது.

ஒரு நாட்டின் நுகர்வு வருவாயிலிருந்து செய்யப்பட்டதா இல்லை கடன் அட்டையிலிருந்து செய்யப்பட்டதா என்பதையும்ஜிடிபியால் வேறுபடுத்திக் காட்டமுடியாது.

சந்தையில் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை மட்டுமேஜிடிபிமதிப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது. இயற்கை வளங்களை அழிப்பதால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், காலநிலை மாற்றத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவைஜிடிபிமதிப்பீட்டில் புறக்கணிக்கப்படுகிறது.

ஜிடிபிமதிப்பில் ஒரு நாட்டின் நிலை மூலதன நுகர்வு/தேய்மான மதிப்பு நீக்கப்படாமல் இருப்பதால், அதிக தேய்மான மதிப்பைக் கொண்ட பொருளாதாரங்களின் அளவு மிகைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பண்ட மாற்றப் பரிவர்த்தனைகள்முழுவதும்ஜிடிபிகணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை.பதிவு செய்யப்படாத தொழிலகங்களைக் கொண்ட அமைப்புசாராத் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதும் முறையாக அளவிடப்பட்டுஜிடிபிகணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. வீடுகளில் நடைபெறும் உற்பத்தி செயல்பாடுகள்ஜிடிபிகணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. குறிப்பாக பெரும்பாலான பெண்களின் பொருளாதார நடவடிக்கைகள் மதிப்பிடப்பட்டிஜிடிபிகணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. ‘பெண்களின் வேலைஎனக் கருதப்படும் உணவு சமைத்தல், வீட்டுப் பராமரிப்பு வேலைகள், குழந்தைகள், முதியோர்களை பராமரிக்கும் பணிகள் போன்ற ஊதியமற்ற வேலைகள், தன்னார்வப் பணிகளின் மதிப்புஜிடிபியில் சேர்க்கப்படுவதில்லை.

 

கள்ளச் சந்தை நடவடிக்கைகள், சட்ட விரோதமான பரிவர்த்தனைகளும்ஜிடிபிகணக்கீட்டில் வருவதில்லை.

ஜிடிபி’-க்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பொருளாதார சமமின்மையை அதிகரித்து சமூக நீதியை புறக்கணிப்பதற்கும், ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தை என்றென்றும் நிலை நிறுத்துவதற்குமே உதவுகிறது.

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...