Monday, May 3, 2021
Corona-Current state weapon of the BJP government:
Globally, more than 15 crore people have been infected by
Covid epidemic. More than 31 lakh people have died of the disease. The United
States recorded the highest number of corona infections and India recorded the
second highest number of Covid infections. More than 1.9 crore people in India
have been affected by coronavirus so far, of which more than 2.1 lakh have
died. The Covid vaccine, which has been available since January 6, has so far
been fully administered to only 1.7 percent of the population. In 2021-22
budget, Rs 35,000 crore was allocated for covid vaccine, after which no
additional funds were allocated to curb the alarmingly rising corona cases, and
whether the allocated Rs 35,000 crore was used properly remains a question to
be answered.
India has emerged as the country with the highest incidence
of Covid infections. More than 4 lakh Covid cases are recorded every day. When
other countries like China, Pakistan, Britain extended their support in Covid
crisis, the BJP government is using corona as a weapon of state repression.
People in many states are dying en masse due to lack of adequate medical
service.
It is a basic duty of a welfare state to provide Covid-19
vaccine free of cost to all its citizens. India’s Health Budget Is 4th Lowest
In The World and India ranks 155th out of 158 countries in terms of public
health spending says Oxfam report, at the same time India is the third largest
military spender in the world, after the United States and China according to
the Stockholm International Peace Research Institute (CIPRI), India's military
spending was $ 72.9 billion (54 trillion rupees) for the year 2020. If the BJP
government is able to spend Rs 54 lakh crore on defence, but not willing to
provide even a vaccine free of cost to the people, then it is obvious what an
anti-people government it is.
Due to the poor planning and negligence of the BJP
government, the 2nd wave of Covid-19 is surging uncontrollably at an alarming
rate. Covid vaccination for those over 18 years of age was not yet begin in
many states as per the announcement due to shortage of vaccines. The BJP
Government has not taken steps to increase the production of Covid vaccines and
has not regulated the pricing of Covid vaccines, leaving the pharmaceutical
companies to take advantage and reap profit out of this Covid crisis. The big
pharma companies continue enjoying their oligopoly and there is a sharp
differences in the pricing of Covid vaccines. Companies have been selling
vaccines to the central government at low prices and to state governments at
high prices. Serum India offers Covid vaccine for Rs 200 to the central
government, Rs 400 to state governments and Rs 600 for private hospitals. Bharat Biotech has sold
vaccines for Rs 600 to state governments and Rs 1,200 to private hospitals.
when state governments are struggling with financial crisis the BJP government
has not even given the least assistance of providing Covid vaccine free.
According to the Ministry of Statistics and Programme
Implementation (MoSPI) project database as of January 2018, 345 projects have
incurred a cost overrun of Rs 2.19 lakh crore and 354 projects have time
overrun of 45 months. The reasons behind these overruns are lack of
forward-planning, identification of risk factors and poor collaboration amongst
stakeholders.
Modi says government has no business to be in business and
has been pursuing a policy of minimum govenment and maximum governance to push
privatisation of public sector enterprises. The target for disinvestment for
this fiscal is set at Rs 1.75 lakh crore. Four to five PSBs including Bank of
Maharashtra and Indian Overseas Bank
have been suggested by the Niti Aayog for privatization.The Department
of Investment, and Public asset Management is currently considering a plan to
promote the monetization and privatization of assets in the states as well.
Foreign direct investment limit in the insurance sector has
already been upped from 49 percent to 74 percent. A bill to raise the foreign
direct investment (FDI) limit in the pension sector from 49 per cent to 74 per
cent will be tabled in the next session of Parliament. It has been reported
that the new amendment bill would separate the National Pension System from the
Pension Fund Regulation and Development Authority and may bring it under the
purview of company law. Even the pension sector has not left untouched by
neoliberalism and is lurking to expropriate the social security of the elderly.
Montek Singh Ahluwalia, former deputy chairman of the
project committee, said government's infrastructure push through PPP mode may
not be viable amid the epidemic. Lot of growth recorded for GDP comes from the
formal sector, corporate revenue and profits has increased due to cost-cutting
measures. This also includes cutting down on contractual labour, which meant a
slowdown in revenue growth and the consequent impact on the informal economy.
Ahluwalia also expressed concern that The current method of measuring GDP assume
the growth in the informal sector to be same as
it is in the formal sector India’s growth for the current fiscal could
be overestimated if divergent trends in the formal and informal sector of the
economy have not been taken into account, he added.
The unorganized sector has been hit hardest by the
pandemic. There is more inequality prevailing in the availability of credit
service and large number of MSMES are struggling to survive.The price of raw
materials is increasing uncontrollably. But at the same time the market values
of big companies are rising and reaping profits.
Even in the United States- The bulwark of capitalism, the
Biden administration is trying to raise taxes on large corporations. U.S.
Treasury Secretary Janet Yellen has called for the implementation of a global
minimum corporate tax to prevent large corporations from profit-shifting to
avoid taxes.
The Adani Group has grown to become the third largest
Indian company with a market capitalization of more than $ 100 billion. Mukesh
Ambani, the richest man in Asia, has amassed $ 3,500 billion wealth during the
Corona general lockdown period alone. Adani, the second richest man in Asia,
has a net worth of $ 5.05 billion. According to Forbes magazine, Adani's
property value has increased fivefold in 2020 alone. The number of rich people
in India has increased from 102 last year to 140 this year. But under the BJP
regime, a mercenary of big corporations, Even a talk of raising corporate taxes
and income taxes is off the table. On the contrary, the BJP government, which
has not taken a single step to alleviate the suffering of the masses has
increased their tax burden further and the indirect tax revenue growth of 12
per cent in fiscal 2021 reflects that. Goods and Services Tax (GST) revenue in
April 2021 increased to Rs 1.41 lakh crore, an increase of 14 per cent over the
previous year.
Economist and Nobel laureate, Angus Deaton says A wealth
tax is a bad way to pay off pandemic debts and probably would become permanent
if introduced,. But he is leading the UK's expert panel on how to reduce
inequality! Economists like him who claim to be researching on reducing
economic inequalities are actually paving the way for raising inequality.
Aren’t they the guardians of inequality?
The unemployment rate in rural and urban areas has
increased further and no new schemes to increase employment have implemented.
According to CMIE, the unemployment rate has increased to 7.97 all over India
and 9.78 per cent in urban areas. The number of middle class people in India
has declined by more than 3.2 crore in the last one year and the number of
people living below the poverty line has risen by 60 per cent.
The second wave of Covid is more likely to bring a further
negative impact on the economy and on the livelihoods of the people, as a large
number of people have been already affected by job losses and wage losses. The
economy, which has yet to recover from the impact of the first wave of Covid,
is at risk of further delays as the second wave continues to hit.
Inflation:
Consumer price inflation rose to 5.52 percent in February,
while food inflation rose to 4.94 percent. Prices of vegetables fell by 4.83
per cent. Pulses became dearer by 13.25 per cent. The price of eggs has gone up
by 10.60 per cent. Oil and fat prices rose 24.92 percent. Fish and meat prices
rose by 15.09 per cent. Inflation in Tamil Nadu has risen to 7.70 per cent.
Industrial growth in January:
According to the Index of Industrial Production released by
the Ministry of Statistics, the production in primary sectors declined by 3.6
percent. Production in the mining sector declined by 5.5 percent. Production in
the manufacturing sector reduced by 3.7 percent. Electricity generation
increased by 0.1 percent.
In the use-based classification, Production of primary
goods declined by 5.1 per cent. Production of capital goods decreased by 4.2
per cent. production of non-durable consumer goods declined by 3.8 per cent.
Production of infrastructure goods declined by 4.7 per cent and production of
intermediate goods also declined by 5.6 per cent. Production of durable goods
increased by 6.3 percent.
Industrial growth in March:
The combined output index of eight key industries released
by India's Department of Industry and internal Trade promotion rose to 6.8 per
cent in March. There was sharp decline in the industrial production in last March
because of the general lockdown to control the corona pandemic, Due to low
base, This 6.8 per cent increase does not indicate real growth. Coal production
is declined by 21.9 percent compared to March last year. Crude oil production
fell by 3.1 percent, petroleum refined products fell by 0.7 percent and
fertilizer production declined by 5 percent. Natural gas production increased
by 12.3 per cent, steel production increased by 23 per cent, cement production
showed an increase of 32.53 per cent and electricity generation increased by
21.6 per cent.
Globally there is a huge disparity in the availability of
corona vaccine among the countries. According to the World Health Organization,
only 0.3 percent of people in the low-income countries are vaccinated against
corona. Developed countries appropriated almost 82 percent of corona vaccines
and were responsible for not making it available to everyone worldwide.
The G20 members have approved for allocation of $ 650
billion special drawing rights to help poor countries fight the economic
fallout. But as most of the allocated special drawing rights goes to the
developed countries, the poorer countries will not benefit unless SDRs are
reallocated to them.
It is because of the capitalist dictatorship all over the world, the pandemic has exacerbated socio-economic inequalities between countries worldwide and socio-economic inequalities within countries. The corona virus is being used as a weapon of state repression to exacerbate capitalist inequalities. Because the ‘justice’ of capitalism is such that;
டாலருக்கு வந்த வாழ்வு(12):
மக்களுக்கான பணம்:
உலகின் முதன்மையான உலகப் பணம் என்றத் தகு நிலையை அமெரிக்க டாலர் இழந்து அதற்கு
மாற்றாக ரென்மின்பி வளர்ச்சி பெறுவதாகக் கொள்வோம், அப்போது சர்வதேச அளவில் பொருளாதார நிதிச் சிக்கல்கள் மட்டுப்படுவதற்கான
வாய்ப்புகள் ஏற்படலாம் ஆனால் அதனால் மட்டுமே அனைத்து பொருளாதார பிரச்சனைகள் சரியாகுவதற்கான
வாய்ப்புகள் ஏற்படுமா என்றால் இல்லை. இது வெறும் பணம் என்ற சுற்றோட்ட
ஊடகத்தால் உருவான பிரச்சினை
மட்டுமல்ல. சுற்றோட்ட ஊடகத்தை மாற்றுவதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ
பொருளாதாரத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற இயலாது. சுற்றோட்டத் துறையைத் தாண்டி சமூகத்தின் பொருளாக்கத்திற்கும், மதிப்பாக்கத்திற்கும் அடிப்படையாக அமைந்த உற்பத்தி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன்
மூலமே பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும்.
இன்றுள்ள முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் பணத்தால் பண்டங்களின் உண்மையான மதிப்பை
வெளிப்படுத்தும் வெளிப்படையான கருவியாக செயல்பட முடியுமா? பணம் வெளிப்படையான ஒரு சுற்றோட்ட
ஊடகமாக சரக்குகளின் உண்மையான மதிப்பை வெளிக்காட்டுகிறதா என்றால் இல்லை. அதற்கு மாறாக உழைப்புச் சுரண்டலை, மறைக்கும் திரையாகவே
பணம் செயல்படுகிறது, அதிகார ஏற்றத்தாழ்வுகளின் மூலம் சமமற்ற பரிவர்த்தனையை
ஊக்குவிக்கும் கருவியாகவே பணம் செயல்படுகிறது. இல்லாதவர்களை பணம்
சென்றடைவதற்கான வாய்ப்புகள் இல்லை, செல்வந்தர்களிடமே பணம் மேலும்,
மேலும் குவிகிறது. மக்களின் தேவைகளை, நுகர்வை நிறைவு செய்ய வேண்டிய பணம், அவர்களின் பணப் புழக்கத்தை
அதிகரிக்க செய்ய வேண்டிய பணம், அதை அவர்கள் அடைவதற்கு தடை போடுகிறது.
உயிரற்ற பண்டங்களின் விலை மதிப்பு மேலும் மேலும் ஏற்றம் பெருகையில், உயிருள்ள உழைப்புச் சக்தியின் விலை
மதிப்பு மேலும் மேலும் வீழ்ச்சியடைந்தும், உழைப்பு விலை போகாமலும்
உள்ளது. முதலாளித்துவ சந்தை அமைப்பில் பணமானது பெரும்பாலான மக்களின்
அத்தியாவசிய தேவைகளை பெறுவதிலிருந்து தடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கருவியாக
செயல்படுகிறது.
பணம் என்றால் என்ன. பணம் என்பது இயற்கையாக பிறந்த ஒன்றல்ல. சமூகத் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆதிகாலத்தில் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையின் மூலமே பரிவர்த்தனை
செய்யப்பட்டது.பணத்தின் புதிரையும், பணத்தின் உள்ளார்ந்த மதிப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார் மார்க்ஸ், ஆதி புராதாண சமூகங்களிடையே தொடர்ந்து நடந்த புறபரிவர்த்தனைகளின் விளைவாகவே பணம் உருவானது. அதாவது வெவ்வேறு
சமூக இனங்கள் தங்கள் சமூகங்களுக்கு வெளியே தொடர்ந்து மேற்கொண்ட புறபரிவர்த்தனைகளின் விளைவாகவே பணம் தோன்றியது.
முதலாளித்துவம் பிறப்பதற்கு முன்பே பணம் பிறந்துவிட்டது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பின்
தோற்றத்திற்கு முன்பு பணம் என்பது சமூகத்தில் ஒரு சிறிய, குறுகிய பாத்திரத்தையே கொண்டிருந்தது. முதலாளித்துவம் தோன்றும் வரை சமூக மறுவுற்பத்தி பெரும்பாலும் வர்த்தகம், பணத்துடன் தொடர்பற்றதாகவே இருந்துள்ளது. புராதன வணிகர்களான ஃபீனிசியன்கள், கார்த்தஜீனியர்களின் நடவடிக்கைகளும், வர்த்தகமும், அன்றாட சமூக பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகி புறத்தே அமைந்திருந்ததாக
மார்க்ஸ்.குறிப்பிடுகிறார்.
முதலாளித்துவத்திற்கு முற்பட்ட சமூக அமைப்புகளில் சமூக மறுவுற்பத்தியை பணம் என்ற
கருவி இல்லாமலே செய்ய முடிந்தது.ஆனால் முதலாளித்துவ அமைப்பில் பணமே நடுநாயகம் பெற்றுள்ளது.முதலாளித்துவ அமைப்பு
முறையில் இன்று தண்ணீர், காற்று, கரியமில வாயு என அனைத்துமே பணப் பரிவர்த்தனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது.
பணம் என்பது சரக்கு/சேவைகளின்
மதிப்பை அளவிடும் கணக்கீட்டு அலகாக செயல்படுகிறது. பரிவர்த்தனைக்கான
சுற்றோட்ட ஊடகமாக பணம் செயல்படுகிறது. பணம் செல்வத்தை சேமிக்கும்
ஊடகமாகவும், கடனை செலுத்துவதற்கான கருவியாகவும்
(means of payment) செயல்படுகிறது.
ஒவ்வொரு சரக்கும் இரண்டு விதமான மதிப்புகளை கொண்டுள்ளது, ஒன்று பயன் மதிப்பு, மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு.சரக்கின் பயன் மதிப்பு என்பது மனிதத் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் சரக்கை நுகர்வதன் மூலம் அல்லது பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் பெறும் பயன்பாட்டு மதிப்பைக் குறிக்கிறது. சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு என்பது அதன் சந்தை விலையைக் குறிக்கிறது. சரக்கை
உருவாக்கத் தேவையான சராசரி உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படும் மதிப்பே சரக்கின் சந்தை
விலையை தீர்மானிக்கும் அடிப்படைக் காரணியாக அமைந்துள்ளது. முதலாளித்துவத்தில் தொழிலாளரின்
உழைப்புச் சக்தியும் சரக்காக்கப்பட்டுள்ளது. உழைப்புச் சக்தி
என்பது உழைப்பில் ஈடுபடுவதற்கு தேவையான ஆற்றல். அதாவது ஒரு தொழிலாளி
அடுத்த நாள் உழைப்பில் ஈடுபடுவதற்காக நுகர வேண்டிய குறைந்த பட்ச உணவு, பிற அத்தியாவசியப் பொருட்கள்/சேவைகளின் மதிப்பைக் குறிப்பிடுகிறது.
தொழிலாளர் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக உழைப்பில்
ஈடுபடுவதாலேயே உபரி மதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உபரி மதிப்பிலிருந்தே முதலாளிக்கான
லாபம் பெறப்படுகிறது. தொழிலாளரின் ஊதியமற்ற உழைப்பின் மூலமே உபரி
மதிப்பும், லாபமும் பெறப்படுகிறது. முதலாளிக்கும்,
தொழிலாளிக்கும் இடையிலான சமமற்ற பரிவர்த்தனையை மூடி மறைத்து சமமான பரிவர்த்தனை
போல் வெளிக்காட்டும் பண வடிவமாக. கூலி/சம்பளம்
உள்ளது. இது உண்மையிலே சமமான பரிவர்த்தனையாக இருக்குமானால் உபரி
மதிப்பு, லாபம் பெறுவதற்கான அடிப்படையே அங்கு இல்லாது போகிறது.
ஒரு சரக்கின் பயன் மதிப்பும், பரிவர்த்தனை மதிப்பும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. ஒரு சரக்கு ஒரே நேரத்தில் பயன் மதிப்பாகவும், பரிவர்த்தனை மதிப்பை வெளிப்படுத்தும்
ஊடகமாகவும் செயல்பட முடிவதில்லை. இந்த முரண்பாடுகளின் விளைவாகவே, பரிவர்த்தனை மதிப்பின் வடிவம், பயன் மதிப்பிலிருந்து தனியாக பிரிந்து இறுதியாக பண வடிவை பெற்றது. பணம் அதன் பரிணாம வளர்ச்சி நிலையில் பல்வேறு வடிவங்களை பெற்று
பொருளாதார வளர்ச்சி நிலையின் அடையாளமாகவும் உள்ளது. கால்நடை, துணி, உப்பு, தோல், உலோகம் என பல்வேறு பொருட்கள் பணமாக செயல்பட்டுள்ளன. பணம் இது வரை எண்ணிலடங்கா வடிவங்களை பெற்றுள்ளது. இன்று வடிவிழந்த மின் பணமாகவும் வடிவெடுத்துள்ளது. உலக அளவில் தங்கமும், வெள்ளியும் சர்வதேச
பணமாகவும், செல்வத்தை சேமிப்பதற்கான ஊடகமாகவும்
பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
ஆரம்பத்தில் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோக நாணயங்கள் அவற்றின் அளவு மதிப்பிற்கு நிகரான மதிப்பிற்கே
சுற்றோட்டத்தில் விடப்பட்டன. ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங்க் என்பது ஒரு பவுண்ட் எடை கொண்ட ஸ்டெர்லிங் வெள்ளி
நாணயங்களின் மதிப்பையே குறித்தது. ஆனால் உலோக நாணயங்கள் சுற்றோட்டத்தில் பரிவர்த்தனைக்காக செயல்படும் போது தேய்மானம் அடைவதால் அதன் மதிப்பில் மாறுபாடுகளை ஏற்படுத்தியது. தேய்மானத்தால் ஏற்படும் மதிப்பிழப்பைத் தவிர்ப்பதற்காக, உலோக நாணயங்களின் அளவு மதிப்பிற்கு இணையாக
அல்லாமல் மதிப்பை அடையாளப்படுத்தும் ஊடகமாக உருவாக்கப்பட்டன. இந்த அடையாளப் பணமே ‘ஃபியட்’ பணம் என அழைக்கப்படுகிறது.பின்னர் பணம் காகித வடிவையும் பெற்றது.
நாடுகளுக்கிடையிலான தேசிய நாணயங்களின் வேறுபாடுகளை கடக்கும் விதமாக தங்கம் உலக நாணயமாக செயல்பட்டு வந்தது. உலக அளவில் தேசிய நாணயங்களின் மதிப்பு தங்கத் தரத்தால் நிர்ணயிக்கப்பட்டது. தங்கம், உழைப்பின் விளைபொருளாக உள்ளார்ந்த மதிப்பை கொண்ட சரக்காகவும் இருந்ததால் தங்கத் தரத்தைச் சார்ந்த பணமும் சரக்குப் பணமாக(Commodity money) இருந்தது.1914ல் நிதி நெருக்கடியின் போது ஸ்டெர்லிங்க்
தங்கத்தரத்திலிருந்து வெளியேறியது. பின்னர் தங்கத்தரத்துடன் அமெரிக்க
டாலர் உலகப் பணமானது.ஆனால் நிக்சன் அரசு தங்கத்தரத்திலிருந்து வெளியேறிய பின் உலக அளவில் அனைத்து நாணயங்களும் தங்கத் தரத்திலிருந்து வெளியேறி டாலர் அடிப்படையிலான மதிப்புமுறைக்கு மாறின.தங்கத் தரத்துடன் இணைந்திருந்த போது தங்க இருப்புகளின் அளவே, பண நோட்டுகளின் அளவையும், மதிப்பையும் ஒழுங்குமுறைக்குட்படுத்தும் கருவியாகவும் செயல்பட்டது. ஆனால் தங்கத் தரத்தில் இருந்து வெளியேறிய பிறகு இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாதல் வரம்பில்லாமல் பண நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கும் பணவீக்கம் அதிகமாவதற்கும் காரணமாகியது.
ஒரு சரக்கு பரிவர்த்தனையானது ஒரே நேரத்தில் வணிகருக்கு விற்றலாகவும், நுகர்வோருக்கு வாங்குதலாகவும் உள்ளது.ஆனால் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் உடனுக்குடன் பணம் செலுத்தப்படுவதில்லை. உதாரணமாக தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களை முதலாளிகள் தங்களுக்குள்ளும், வர்த்தகர்களுடனும் கடன் சார்ந்த பரிவர்த்தனையில் ஈடுபடுத்துகிறார்கள். அதாவது சரக்கை வாங்குபவர் சரக்குக்கான பணத்தை உடனே செலுத்தாமல் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் பணம் அளிப்பதாக வாக்குறுதியை அளிக்கிறார், இவ்வாறே வர்த்தகக் கடன்(commercial credit) எனப்படும் செயல்முறை ஏற்பட்டது. சரக்கின் உற்பத்திக்கும், விற்றலுக்கும் இடையிலான கால இடைவெளியை குறைக்கவும், பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் வர்த்தகக் கடன் அமைப்பு அவசியமாகியது. இதுவே
கடன் அமைப்பின் அடிப்படையை உருவாக்கியதுடன் வங்கிக் கடனாகவும் வளர்ச்சி பெற்றது. வர்த்தகக் கடன் பொருட்களின் விற்பனையை எளிதாக்கி, மூலதனப் புரள்வையும்
துரிதப்படுத்துகிறது, ஆனால் எந்தக் கடன் அமைப்பு முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததோ, அதே கடனமைப்பு தான் நிதி நெருக்கடிகள் ஏற்படவும் காரணமாகிறது. பெருகிய வணிகக் கடனும், வங்கிக் கடனும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையை தீவிரப்படுத்தியுள்ளது. கடன்
அமைப்பு ஒருவருக்கொருவர் நேரடி உறவு இல்லாத கடன் கடப்பாடுகளைக் கொண்ட முதலாளிகளின்
சங்கிலியை உருவாக்குகிறது. இந்த கடன் சங்கிலியில் ஒருவர் கடன் செலுத்த தவறும் போது,
கடன் செலுத்தாமை தொடர் வினையாவதற்கும், ஒரு நிறுவனத்தின்
திவால் நிலையால் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கும் காரணமாகிறது.பணம்
தங்கத் தரத்துடன் இணைந்திருந்த போது அதுவே கடனின் அளவை கட்டுப்படுத்தும் கருவியாக செயல்பட்டது. தங்கத் தரம், நாணயப் பரிவர்த்தனை விகிதங்களில் நிலைத்தன்மையையும், விலைகளில் நிலைத்தன்மையையும் உறுதி செய்தது.தங்கத்தரம் நீக்கப்பட்ட
பிறகு வரைமுறையில்லா அளவிற்கு கடன் பெருகவும், அடிக்கடி நிதி நெருக்கடி ஏற்படவும் அதுவே காரணமாகியுள்ளது.
தங்கத்தரம் நீக்கப்பட்ட பிறகு பணம் பிரதானமாக கடன் பண வடிவை பெற்றது (credit money). வங்கிகளில் கடன் அடிப்படையில் பணம் உருவாக்கப்படுவதால் கடன் பணம்
என அழைக்கப்படுகிறது. அதிகாரம் பெற்ற தேசிய அரசின் மத்திய வங்கியால் அச்சிடப்படுவதால் இது அரசால் ஒப்புறுதியளிக்கப்பட்ட பணமாகவும் உள்ளது. அரசின் மத்திய மத்திய
வங்கிகள் தங்கள் இருப்புக்களை விட அதிக அளவில் கடன்களை வழங்குவதன் மூலம் கடன்
பணத்தை உருவாக்க முடியும். தங்கத் தரம் நீக்கப்பட்ட பின் கடன் பணத்தின் அளவு கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு பெருகியுள்ளது.
முதலாளித்துவ மூலதனத் திரட்டலின் நிகழ்முறை சார்ந்து பணத்தின் மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுகிறது. கடன் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து அதன் அளவு மாறுபடுகிறது. பணத்தின் மதிப்பு சரக்கின் அளவிற்கும், பணத்தின் அளவிற்கும் இடையிலான விகிதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
முதலாளித்துவத்தில் கடன் அமைப்பு முறையின் வளர்ச்சியுடன் பொருளாதார வளர்ச்சியும், விரிவாக்கமும் ஏற்பட்டுள்ளது.
பணத்தின் மற்ற பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கடன் செலுத்துவதற்கான ஊடகமாக செயல்படுவதே பணத்தின் பிரதான பணியாக மாறியுள்ளது..
சர்வதேச பணமாக செயல்பட்ட தங்கம், வெள்ளி வெறும் சேமிப்பு ஊடகமாக சுருங்கியது.
முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் செல்வ சேமிப்பு ஊடக வடிவத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று செல்வம் பண வடிவில் மட்டும் சேமிக்கப்படுவதில்லை வ்ங்கியில் வைப்புகளாகவும், நிதிப்பத்திரங்கள், வருவிப்புகள், கடன் பத்திரங்கள்,கருவூலப்பத்திரங்கள், பங்கு சான்றிதழ் என பல வடிவங்களில் சேமிக்கப்படுகிறது.
சரக்கு என்பது இயற்கையாக பிறக்கவில்லை.
உலகில்
எந்தப்
பொருளும்
விலைக்
குறியீட்டுடன்
பிறப்பதில்லை. ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் பொருட்களும், சேவைகளும் சரக்குகளாக மாற்றப்படவில்லை, விற்கப்படவில்லை. அனைத்து இயற்கை வளங்களும் பொதுவாக அதாவது பொதுவுடைமையாக, அனைவரின் உடைமையாக இருந்தது. முன்முதலாளித்துவ சமூகத்திலும் உற்பத்தியானது பெரும்பாலும் நுகர்வுக்காகவே செய்யப்பட்டது, சரக்குற்பத்தி ஒரு சிறும அளவிலே செய்யப்பட்டது. உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ அமைப்பில் பெருமளவில் உற்பத்தி சாதனங்கள் தனியுடைமையாக்கப்பட்டன. உற்பத்தியானது நுகர்வுக்காக மட்டுமல்லாமல் பெருமளவில் சரக்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்காகவே செய்யப்பட்டது.ஒரு பொருளாதார அமைப்பில் சரக்கு உற்பத்தி செய்யப்படும்
வரை பணத்திற்கான தேவையும் தொடரும். சரக்கு பரிவர்த்தனையில் ஈடுபடும் ஒரு பொருளாதார அமைப்பிலே பணம் தோன்றியதால், சரக்கு பரிவர்த்தனை தொடரும் வரை பணத்தின் இருப்பும் தொடரும்.
ஆகவே முதலாளித்துவ அமைப்பு மாறிய பின்னும் பணத்தின் செயல்பாடு தொடரும். முதலாளித்துவத்தில் பணம் தனியுடைமையை
பாதுகாக்கும் கருவியாகவே செயல்படுகிறது. உழைப்பும், இயற்கை வளங்களும் சரக்காக்கப்படும் இன்றைய நிலைமை மாற்றியமைப்பதன்
மூலமும், சமூகப் பொருளாதார அமைப்பை முழுமையாக ஜனநாயகப்படுத்துவதன் மூலம் மக்களுக்கான ஊடகமாக பணத்தால் செயல்படமுடியும்.
முதலாளித்துவம் வீழ்ச்சி பெற்று சோசலிச அமைப்பு ஏற்பட்டால் பணத்திற்கான தேவை நீடிக்குமா, பணம் என்ற ஊடகம் இல்லாமல் சமூக மறுவுற்பத்தியை மேற்கொள்ள முடியுமா.முதலாளித்துவத்திலிருந்து பொதுவுடைமை சமூகத்தை நோக்கிய வளர்ச்சி பாதையில் ஏற்படும் இடைக்காலம் சோசலிசம் என அறியப்படுகிறது. இந்த இடைக்காலத்தில் பணத்தின் இருப்பு தொடரும். என்ற போதும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும், அதன் சமூகப் பணிகள் குறையும். பணப் பரிவர்த்தனைகளுக்கான
வெளி சுருங்கும் என்பதே நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விதத்தில் சோவியத் ரஷ்யாவின் ரூபிளும், கியூபாவின் பெசோவும், அமெரிக்க டாலரிலிருந்து மாறுபட்டது. முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சோவியத் ரூபிளோ, கியூப பெசோவோ பங்குச் சந்தைகளில் ஊக முதலீடுகளாகவோ, பிற நாடுகளின் வளங்களை சுரண்டும் அந்நிய முதலீடுகளாகவோ செய்யப்படவில்லை. கியூபா போன்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சோவியத் ரஷ்யா குறைந்த வட்டியில் நிதியுதவி அளித்தது. அதை இன்றைய அந்நிய முதலீட்டு வடிவங்களோடு ஒப்பிட முடியாது.
. உலகின் ஒரு சில நாடுகளில் சோசலிச அமைப்பு ஏற்படும் நிலையானது உலகெங்கிலும் சோஷலிச அமைப்பு ஏற்படும் நிலையிலிருந்து வேறுபட்டது.முந்தைய நிலையில் உள்நாட்டுத் தேவைகளுக்கான பரிவர்த்தனை வடிவில் மாற்றம் ஏற்பட்டாலும், சர்வதேச பரிவர்த்தனைகளுக்காக பணத்திற்கான தேவை தொடரவே செய்யும். உலகெங்கிலும் உற்பத்தி சாதனங்கள், சொத்துக்களை பொதுவுடைமையாகக் கொண்ட
வளர்ச்சியடைந்த ஒரு சோசலிச சமூகம் உருவாகும் போது பொருட்களும் சேவைகளும் சமூகத் தேவையின்
அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அவற்றை லாப நோக்கை அடிப்படையாகக் கொண்ட
விற்பனை சரக்குகளாக உருவாக்குவதற்கான தேவையில்லை. ஆனபோதும் பொருட்களின்
மதிப்பின் வெளிப்படையான ஊடகமாகவும், சமமான பரிவர்த்தனைக்கான
சுற்றோட்ட ஊடகமாகவும், பணத்தை செயல்படுத்த முடியும். இல்லையெனில் மதிப்புக்
கோட்பாட்டின் அடிப்படையில் மனித உழைப்பே பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைவதால்,
பொருளாதார கணக்கீட்டு அலகாக உழைப்பு நேரத்தை பயன்படுத்த முடியும். உழைப்பு நேரத்தைக்
குறிக்கும் உழைப்புச் சீட்டையே பொருட்கள்/சேவைகளின் மதிப்பீட்டு அலகாகவும் பணமாகவும் பயன்படுத்த முடியும்.
பொதுசொத்துரிமை கொண்ட ஒரு வளர்ச்சியடைந்த சோசலிச சமூகத்தில் ஒவ்வொருவரும்
தங்களின் நலனுக்காவும், அனைவரது நல்வாழ்வுக்காகவும் தனது பங்களிப்பாக
அளித்த உழைப்புக்கு நிகரான மதிப்பிற்கு நுகர்வு பொருட்களையும், சேவைகளையும் பொது சமூகத்திடத்திருந்து பெற முடியும். இந்த சமுதாயத்தில் சரக்குகளை உற்பத்தி செய்வதற்கான அவசியம் ஏற்படாது.
முதலாளித்துவம் எப்படி சமூக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக்
குறிக்கிறதோ, அதே போல் பணத்தின் இருப்பும் சமூக வரலாற்றில் ஒரு
குறிப்பிட்ட காலத்தை மட்டுமே குறிக்கும். வரலாற்று அடிப்படையில்
பணம் என்ற சமூக ஒப்பந்தத்திற்கு, சமூக ஊடகத்திற்கான இடம் என்றென்றும்
நிரந்தரமானதல்ல. அறிவியல் அடிப்படையிலான சமூகவளர்ச்சியைக் கற்பனாவாதம்
என ஒருபோதும் புறந்தள்ள முடியாது.
முதலாளித்துவ அமைப்பில் தனியுடைமை அமைப்பை மாற்றாமல் உழைப்புச் சீட்டின் மூலம்
பணத்தை இல்லாமல் செய்து விடலாம் என்றும் அதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கமுடியும்
என்றும் பிரௌதான் ஒரு கருத்தை முன்வைத்தார். பிரௌதானின் கருத்து தவறு என்றும் வெறும் சுற்றோட்ட ஊடகத்தை மாற்றுவதன்
மூலம் மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யமுடியாது என்றும், முதலாளித்துவ தனியுடைமை அமைப்பை முற்றிலும் மாற்றுவதன் மூலமே உழைப்புச் சுரண்டலை நீக்கமுடியும்
என்றும் விளக்கமளித்தார்
மார்க்ஸ்.
ராபர்ட் ஓவன், கூட்டுறவு அடிப்படையிலான தொழிற்சாலைகளிலும், விவசாய அமைப்புகளிலும் உழைப்பு-சீட்டை அடிப்படையிலான பரிவர்த்தனையை செயல்படுத்த வேண்டும் என்று முதலில் முன்மொழிந்தார்.
ராபர்ட் ஓவன் ஸ்காட்லாந்தின் லானர்க் நிர்வாக அமைப்பிற்கு 1821ல் அளித்த
அறிக்கையில், பண விநியோகத்திலான ஏற்ற இறக்கங்களையும், நியாயமற்ற ஊதியங்களையும் தவிர்ப்பதற்காக, வேலை நேரங்களைக்
குறிக்கும் உழைப்பு சீட்டுகள் பரிமாற்ற ஊடகத்தின் சிறந்த வடிவமாக இருக்கும் என்ற
பரிந்துரையை முன்வைத்தார். ஆன போதும் உழைப்புச் சீட்டுகளை முதலில் நடைமுறைப்படுத்தியவர்
அமெரிக்காவை சேர்ந்த அராஜகவாதி ஜோஷியா வாரன்ஸ் அவர்களே.1827ல் அமெரிக்காவில் சின்சினாட்டி கால பண்டசாலையை(Cincinnati Time Store) ஜோஷியா வாரன்ஸ்
உருவாக்கினார். அதில் உழைப்பு நேரச்சீட்டுகளின் மூலம் பரிவர்த்தனை
செய்யப்பட்டது. கொள்முதல் விலையில், 4 முதல் 7
விழுக்காடு வரையான கூடுதல்
கட்டணத்துடன் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால்
தொழிலாளர்கள் மலிவு விலையில் பொருட்களை வாங்க முடிந்தது. ஒரு
நாளில் செய்யப்பட வேண்டிய விற்பனையை சில மணி நேரங்களிலேயே செய்யமுடிந்தது. சின்சினாட்டி கால பண்டசாலை 1827 முதல் 1830
வரை மூன்றாண்டுகள்
வெற்றிகரமாக செயல்பட்டது.
ஜோஷியா வாரன்ஸ் ஒரு சோதனைத் திட்டமாகவே
இந்த காலப் பண்டகசாலையை செயல்படுத்தினார். ஒரு புதிய சமூகத்தை அமைக்க முனைந்ததால் இந்தக் காலப் பண்டக சாலை 1830ல் மூடப்பட்டது.
.தேசிய சமான உழைப்பு பரிமாற்றம் என்ற கால வங்கி ராபர்ட்
ஓவனால் 1832ல் லண்டலில் ஏற்படுத்தப்பட்டது.
அங்கு தொழிலாளர்கள் தாங்கள் தயாரித்தப் பொருட்களை அளித்து அதற்கு நிகரான
உழைப்பு நேரத்தைக் கொண்ட உழைப்பு சீட்டுகளை பெற்று அதன் மூலமாக தங்களுக்குத் தேவையான
நுகர்வுப்பொருட்களை வாங்கினர்.ஆரம்பத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட
இந்த காலப் பண்டக சாலைக்கு தெற்கு லண்டனிலும், பர்மிங்க்ஹாமிலும் கிளைகள் திறக்கப்பட்டன.ஆனால் பொருட்களை உருவாக்கத் தேவையான உழைப்பு நேரம் குறித்தும், மதிப்பீடு குறித்தும் சச்சரவுகள் ஏற்பட்டதால் எல்லா கிளைகளும் 1834ல் மூடப்பட்டது.
ராபர்ட் ஓவனின் உழைப்பு சீட்டிற்கு மார்க்ஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஓவனின் உழைப்புச் சீட்டு ஒரு சினிமா
டிக்கெட் போன்றது. அது சமூகமயமாக்கப்பட்ட உழைப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் சரக்குற்பத்தியாக்க
முறைக்கு முற்றிலும் மாறானது என்று மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதலாளித்துவ அமைப்புக்குள்ளிருந்தே பணத்தின் சுரண்டல் வடிவைக் கடப்பதற்கான
முயற்சிகள் உலகின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு, சிறு அளவிலேனும் மக்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றால் ஆச்சரியமாக உள்ளதா!
ஆம் உண்மை தான் காலப் பணம், இணை நாணயம்,
துணை நாணயம், என பல்வேறு வடிவங்களில் பணத்தைக்
கடந்து பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் மனித உறவுகளை மேம்படுத்தவும் தொடர் முயற்சிகள்
செய்யப்படுகின்றன.
கால வங்கி என்பது உழைப்பு நேரத்தை கணக்கீட்டு அலகாகக் கொண்டு ஒருவருக்கொருவர்
பல்வேறு சேவைகளை மாற்றுவதற்கான ஒரு அமைப்பாகும். இது மதிப்பின் உழைப்புக் கோட்பாட்டின்
அடிப்படையில் சோசலிச சிந்தனையாளர்களின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பு நேர
அலகுகள் காலவங்கியில் ஒரு நபரின் கணக்கில் வரவு வைக்கப்படலாம். அதன் மூலம் கால வங்கியின் பிற உறுப்பினர்களிடமிருந்து
சேவைகளை பெற முடியும்.
ஜப்பானில் ஃபுரேய் கிப்பு என்ற மாற்று பண அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் முதியவர்களை கவனித்து
கொள்ளும் பணிக்கு நேர அலகு அடிப்படையில் ஃபுரேய் கிப்பு என்ற சேவை நாணயம் அளிக்கப்படும்.
அதை அவர்கள் தங்களுக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
அது பணவீக்க அபாயத்திலிருந்து காப்பு பெற்றது.
1983ல் மைக்கேல் லிண்டனால் உருவாக்கப்பட்ட ‘லெட்ஸ்’
என்ற உள்ளூர் பரிவர்த்தனை, வர்த்தக அமைப்பின்
(LETS-Local exchange trading system) மூலம் உள்ளூர் அளவில் பணம் கடந்த
பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ‘லெட்ஸ்’ ஒரு துணை
நாணயத்தைப் போல செயல்படுகிறது, ‘லெட்ஸ்’ கனடாவில் ஆரம்பித்து உலகெங்கும் பல்வேறு சமூகங்களால்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘லெட்ஸ்’ மூலம் உள்ளூர் அளவில் சமூக வலையமைப்பை ஏற்படுத்துவதன்
மூலம் மக்கள் பணம் இல்லாமலே (சமயங்களில் குறைந்த அளவு பணத்துடன்)
பொருட்களையும், சேவைகளையும் பரிமாறிக்கொள்ள முடியும். லெட்ஸ்
ஒரு நேரவங்கியாக செயல்படுகிறது.
பணத்திற்கு பதிலாக நேர அடிப்படையில்
பரிவர்த்தனையோ, பரிமாற்றமோ கணக்கிடப்படுகிறது. நீங்கள் லெட்ஸ் வலையமைப்பின் பயனாளராக குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு சேவையை
செய்தால் அதற்கு இணையான மதிப்பு உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் அதைக் கொண்டு லெட்ஸ் சமூகத்திடமிருந்து உங்களுக்குத் தேவைப்படும் பொருட்களையோ,
சேவைகளையோ வாங்க முடியும். லெட்ஸ் கணக்கின் வரவுகளை பயன்படுத்தி அந்த சமூகத்துக்கு
வெளியே எதையும் வாங்க முடியாது.
உதாரணமாக நம்மூர் என்ற லெட்ஸ் சமூகம் இருப்பதாகக் கருதுவோம்.
அந்த சமூகத்தில் மலர் என்பவருக்கு வேலை அதிகமானதால் காலை உணவு தயாரிக்க முடியவில்லை. அவர் காலை உணவுக்கான கோரிக்கையை
லெட்ஸ் சமூகத்திற்கான தளத்தில் பதிவு செய்கிறார். அதற்கு நிலா
என்பவர் முன்வந்து மலருக்கு காலை உணவு தருவதாக ஒப்புக்கொள்கிறார். மலரின் கணக்கிலிருந்து பிடிக்கப்பட்ட ‘பணம்’ நிலாவின் கணக்குக்கு வரவு வைக்கப்படும். ஒரு நாள் நிலா
வேலை நிமித்தமாக வெளியே செல்வதால் தன் குழந்தையை பராமரிக்கும் சேவை வேண்டும் என்ற கோரிக்கையை
நம்மூர் சமூகத்தின் தளத்தில் பதிவு செய்கிறார். மலர் குழந்தையை
தானே பார்த்துக் கொள்வதாக விருப்பம் தெரிவிக்கலாம். இதை மலர்
தான் செய்ய வேண்டும் என்றில்லை. அந்த சமூகத்தில் உள்ள யார் வேண்டுமானாலும்
அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளலாம். அன்பு என்பவருக்கு உடல்நிலை சரியில்லை.
அவர் மருத்துவ சேவைக்கானக் கோரிக்கையை நம்மூர் சமூகத்தின் தளத்தில் பதிவு
செய்கிறார். அச்சமூகத்திலுள்ள மருத்துவரால் அந்தச் சேவையை வழங்க
முடியும். இவ்வாறு உணவு, உடை, போக்குவரத்து, மருத்துவ சேவை, பொழுதுபோக்கு என பலவிதமான சேவைகளையும், பொருட்களையும் பணம் இல்லாமல் பரிமாறி கொள்வதற்கான தளமாக செயல்படுத்தமுடியும்.
சமூகத்தில் நல்ல உழைப்புத் திறனும், அறிவும் பெற்றிருந்தும் பலர் வேலையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் வாங்கும் சக்தியற்றவர்களாகி பணச் சமூகம் அவர்களைப் புறக்கணிக்கிறது. அவர்களின் பிரச்சனைகளைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறையாகவும், சமூகத் தொடர்பையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கான மாற்று வழியையும் ‘லெட்ஸ்’ அளிக்கிறது. இதன் மூலம் தேர்ச்சி மிகுந்த மூளை உழைப்புக்கும், உடல் உழைப்புக்கும் இடையிலான இடைவெளியும், பாலின அடிப்படையில் காணப்படும் ஊதிய வேறுபாடுகளையும் களைய முடியும். ‘லெட்ஸ்’ அமைப்பை பயன்படுத்தி ஆயிரம் பயனாளர்களை கொண்ட வலையமைப்பையே ஏற்படுத்த முடியும் என்பது தான் இதில் உள்ள குறைபாடு. இதைக் காட்டிலும் பரந்து பட்ட பெரிய வலையமைப்பை உருவாக்க கட்டச் சங்கிலி தொழில் நுட்பம் (Block chain technology) பயன்படும் என்று கருதப்படுகிறது. பிட் காயின் எனப்படும் கிரிப்டோ நாணயம் ஊகவர்த்தகத்திற்காகவே பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு அடிப்படையான கட்டச்சங்கிலி தொழில் நுட்பத்தில் தகவல்கள் பரவலாக்கப்பட்ட முறையில் பகிரப்படுவதால் பரிவர்த்தனை குறித்த தகவல்களை மறைப்பதோ, அழிப்பதோ சாத்தியமற்றது.ஆதலால் தான் கட்டச்சங்கிலி தொழில் நுட்பம் மக்களுக்கான பரவலாக்கப்பட்ட ஜனநாயக அடிப்படையிலான நிர்வாக அமைப்பை வழங்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக அமெரிக்க சமூகப் போராளியும், எழுத்தாளருமான டேவிட் பொல்லியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று ‘லெட்ஸ்’ போல் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேத்யூ ஸ்லேட்டர் என்பவரால் நிறுவப்பட்ட கம்யூனிட்டி
ஃபோர்ஜ் என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு துணை நாணயங்களுக்கான கருவிகளை வடிவமைத்து, விநியோகிக்கும்
சேவையை அளித்து வருகிறது. உலகெங்கும் 600க்கும்
மேற்பட்ட சமூகங்களுக்கு, துணை நாணயங்களை நிறுவுவதற்கும்
நிர்வகிப்பதற்கும் ஒரு பரிமாற்றத் தளத்தை வழங்கியுள்ளது. ஆனால்
‘லெட்ஸ்’ போன்ற காலவங்கிக்கான மென்பொருள்களில்
ஒன்றிரண்டு மட்டுமே ஆங்கிலத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவை மேற்கத்தைய நாடுகளின் தேவைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை.இந்திய சூழலுக்கு ஏற்ப இவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதும் தமிழ்,
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அவற்றைக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்.
‘லெட்ஸ்’ போன்ற காலவங்கிக்கான மென்பொருளை
நமது மொழிகளில் நம் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில்
இலவசமாக வழங்கப்படவேண்டும், துணை நாணயங்களை ஊக்குவிப்பதன்
மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தமுடியும். சிறிய
அளவிலேனும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.
நவீன தாராளமய சந்தைகளின் கட்டளைகளுக்கு அடிபணியாமல் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகளும் கூட்டுறவு அடிப்படையிலான
சேவைகளும்
இல்லாமல் போகவில்லை உலகெங்கும் ஆங்காங்கே செயல்படுத்தப்பட்டுத் தான் வருகின்றன. சமூக நீதியின் அடிப்படையில் கடன் வழங்கும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தாலி, ஸ்பெயினில் பாங்கா பாப்புலேர்
எத்திகா. 2001ல் நிறுவப்பட்ட நெறிசார்,மாற்று வங்கிகள், நிதி
நிறுவனங்களின் ஐரோப்பிய கூட்டமைப்பானது (FEBEA),
13 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த
528,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை அளித்து வருகிறது. 35,000 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்வீடனின் ஜாக்(JAK) வங்கி, ஐம்பது ஆண்டுகளாக வட்டி இல்லாத கடன்களை அளித்து
வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஸ்டார்-போக்கெட் கூட்டமைப்பும் வட்டி இல்லாத கடனை
அளித்து வருகிறது.
.உலகின் மிகப்பெரும்
தகவல் சேவையைத்
தரும் விக்கிபீடியா
தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் கலைக்களஞ்சிய
வணிகத்திற்கும், விளம்பரத் துறைக்கும் ஆண்டு தோறும் 3
பில்லியன் டாலர் வருவாய்
இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அறிவை பொதுமயமாக்கும் இத்தகைய முயற்சிகள் சமூக
முன்னேற்றத்தில் முக்கியமானப் பங்கு வகிக்கின்றன.
பொருளாதாரம்,
சந்தைகள், பணம் மீதான மக்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டை
மீட்டெடுக்க வேண்டும். அப்பொழுது தான் பணம் ஜனநாயகமான மக்களுக்கான ஊடகமாக செயல்பட முடியும்.ஒட்டுமொத்த உலகமும் நவீன தாராளமய சந்தைக்கு அடிபணிந்துவிடவில்லை. இணை
நாணயங்கள், நேர வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் ஆங்காங்கே
சிறும அளவிலேனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மை தான். ஆனால் இது தொடக்கம்
மட்டுமே அன்றி முடிவல்ல. ஆங்காங்கே சிறிய அளவில் செய்யப்படும்
இம்முயற்சிகளை ஒருங்கிணைத்து சமூக மாற்றத்திற்கான பேராற்றலாக வளர்த்தெடுக்க வேண்டிய
பெரும் சமூகப்பணி நம் அனைவரின் முன் உள்ளது.
(முற்றும்)
பொம்மைகளின் புரட்சி (123)
காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே தாத்...
-
நேபாளத்தில் தன்னெழுச்சியாக ஒரு புரட்சி வெடித்துள்ளதாக ஆர்ப்பரிப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது. 2023லும், 2025லும் நேபாளம் முடியாட்சிக்குத் திரு...
-
நம்ம எல்லாருக்குமே நூறு வயசு வரைக்கும் வாழனும்குற ஆசை இருக்கும். அப்புடி ஆசைப்படுறதுல எந்த தப்பும் இல்லையே, வாழுறதுக்காகத் தான் பொறந்துருக...
-
ஆசான் மருதமுத்துவைப் பத்தி எழுதிய பிறகு எனது இன்னொரு ஆசானைப் பற்றி எழுதாமல் விட மனம் கேட்கவில்லை. நமது தியாகு தோழர் தான் அந்த இன்னொரு ஆசான...