Thursday, December 31, 2020

Farmers sowing the seeds revolution:

 


People in India have been devastated by wage cuts, job losses and rising prices. There is a steep rise in the prices of metals and construction materials. Foundries are protesting and demanding the government to take steps to control the price of raw materials. But VHP is planning to raise  funds from people, who are already hit by dual crisis of recession and covid, to build a grant temple for a Rama, a nonentity unborn in Ayodhya. Why don’t they raise it from foreign funds.

 

According to ILO, wages in India have fallen by 3.6% for organized workers and 22.6 percent for unorganized workers. So far the BJP government has provided only 0.75 per cent fiscal stimulus, the fiscal packages given after the first stimulus in no way can be called fiscal stimulus , but just monetary/credit schemes. Finance Ministry deceitfully propagating that as it has given a judicious mix of 10 per cent fiscal stimulus economy is recovering so fast. The so called wealth creators are not at all willing to give any kind of stimulus to the depressed economy, who themselves have given economic stimulus to foreign countries. In 2020 alone, Indian companies have invested about $ 13 billion in foreign countries.

In 2020, the dollar depreciated by more than 6 per cent and dollar index is faltering in 90s. In December alone foreign inflows of 64,940 Crores Rs invested in to Indian markets come. Yet, the Indian rupee continues to depreciate against the dollar and remains the weakest currency in Asia. While other Asian currencies have appreciated, the Indian rupee has been prevented from appreciating by the RBI's open market operations. The RBI continues to buy more than $ 10,000 billion US dollar in 2020 alone, which is around 4 percent of GDP. This is said to keep up the export competitiveness of India from falling. But Exports make up only a small part of India's total economic activities. The value of exports has further declined in this year due to Covid attack. It is foolish to argue that exports can stimulate economic growth when international trade is itself in downtrend. As crude oil prices have risen, the RBI's measures devalued rupee and have pushed up India's import bill and trade deficit. The government would have been able to provide additional fiscal stimulus if the RBI had monetized the budget deficit in other words if RBI had lent money directly to the central government, instead of doing the reckless job of buying US dollars. Assuming If the fiscal stimulus were not given to the big business as usual instead jobs and handouts were given to people to raise their purchasing power, the demand could have been restored to an extent which could have an multiplier effect in stimulating the economy. The trade deficit and inflation could also have been controlled to certain extent. It is not possible for RBI to monetize the deficit arbitrarily without the request of the central government. But the BJP government trapped in a neo liberal box thinking neither has knowledge nor courage to think and take an alternative trajectory. so the path to welfare is blocked.

Without imposing restrictions to reduce India's trade deficit, Finance Minister has announced that there will be no restrictions on the import of raw materials and intermediate products. BJP’s so called policy of self-reliance in economy is reeling under the feet.

Who has been helped by RBI's open market operations and the 4 per cent bank REPO? It only helps big companies listed on the stock exchanges. A stock market bubble burst is in the offing. Large companies are raising a large amount of capital through initial public offering in the stock market. The price of their shares is many times higher than their intrinsic value. Small companies are struggling to raise capital. The price of their shares has fallen below their intrinsic value. Investors see recession as an opportunity to profiteer by buying shares at a lower price. They only buy and accumulate shares in large companies as they consider it safe to bet. The market capitalization of family-owned corporations and businesses rose by 31 per cent increased to 115 trillion Rs. Adani's green stocks alone are upped by 565 percent. The combined market capitalization of all private sector companies in the stock market has increased by 24.4 per cent this year to over Rs 142.4 lakh crore. The wealth of the richest people in India has increased by 33 per cent to $ 364 billion this year.

Mukesh Ambani, who sees his own growth as India's growth, says that the digital Indianization of BJP govt. will rise per capita income. Needless to say whose per capita income will rise. Contravening the environmental norms reliance Group is going to implement gas extraction project on the east coast of India. In 2021, the government is planning to auction at least 300 more mining blocks. The Supreme Court has not even nominally acknowledged the primacy of environmental norms. Supreme Court's recent judgment that national highway projects do not require environmental clearance and the Salem-Chennai eight-lane road project can be continued is highly reprehensible. Needless to say, this will only hatch up tying of new projects with national highway projects to avoid environmental clearance. In October, the centre’s allocation of tax revenue to the states dropped by one-fifth. Currently, allocations to central sector schemes are also reduced by 9 percent. The BJP government’s opportunistic policies enabled the big corporations to reap at an exorbitant interest rates what they given as electoral funds to parties and can continue to feed the BJP parasite how else will it flourish.

 

Nitin Gadkari said that the government will help to increase MSMEs contribution to GDP from 30 per cent to 40 per cent and plans to create another 5 crore jobs from small and medium enterprises. But the reality is small businesses are struggling to get credit. In India in order to get loan MSMEs have to follow the same BASEL norms as it was for large corporations. It is only the large corporations with high market base are able to get cheap loan, MSMEs given its small market base has to pay a higher interest for getting loan. This inhibits MSMEs growth potential and in no way this can be justified.  Credit service has become inaccessible to Small businesses and has been severely affected by Basel norms. India’s Associations of 740 MSME enterprises with its 20 Lakh members have demanded for the suspension of BASEL rules in the banking sector.

But as if none of this is known, Central Bank Governor ShaktiKanda Das’s mere vocal advocacy of saying that banks should focus more on cash-flow based lending rather than relying on collateral doesn’t help them actually.

After regaining power in 2019, the BJP government planned to mobilize large sums of money by privatizing public sector enterprises, as a part of which it set a target of divesting Rs 2.1 lakh crore this fiscal. This year the divestment of public sector companies is not as fast as the government intended to do. The BJP government has so far raised Rs 42,871.94 crore by privatizing public sector shares this year. Anil Agarwal is planning to buy public sector shares for $ 10 billion and eagerly Waiting for their market value to plummet. Anil Agarwal, responsible for polluted air , a surge in cancer cases and respiratory diseases in Tuticorin and accountable for the killing of 13 people involved in the Sterlite protest, now cloaked as a ‘philanthrophist’  says that the profits of the business should help the most important people in the community and that nothing is more important than safeguarding the healthy future of our women and children!

The performance and value of public sector companies are not given due importance and the government is pushing only to increase their market price. The more they try the less they succeed.It has been stated that the continuous sale of shares by the government is the main reason for the under performance of the PSU in Stock exchanges. The BSE index of PSUs fell 18 per cent even in the frenzied market climate. It is the niggardliness of the BJP govt and the profit-driven private medical institutions, responsible for the large number of casualties and deaths caused by Covid-19. Despite that no attempt has been made to increase government investment in the healthcare sector, The Niti Aayog has again aimed for increasing the share of private companies in the health sector.

Let us assume a person owns assets worth one crore rupees. Without investing it in a productive way If (s)he lives only by selling parts and pieces of the asset, certainly the value of assets will fall right. How shall we call it growth or degrowth? We can only refer it as stagnation not growth, it will also be considered as spendthriftiness. Not even a fool can assert it as development. But the Indian government each year live by selling parts and parcels of public property to private sector and refer it as development!. The growth in India is not the growth of the people but the growth of private corporations. India ranks 131st out of 189 countries, slips one place further , in the United Nations Development Program (UNDP)'s Human Development Index 2019. But in ease of doing business index India moved up 14 places to 63rd position. From this it is not difficult to see what kind of growth trajectory India is pursuing.

Inflation:

In November Consumer price inflation increased to 6.93 per cent, while food inflation soared to 9.10 per cent. Prices of vegetables soared to 15.63 per cent. Pulses became dearer by 17.91 per cent. Egg prices increased by 20.26 percent. Fish and meat prices increased by 16.67 per cent. In Tamil Nadu Inflation increased to 6.74 per cent.

Production in October:

According to the Index of Industrial Production released by the Ministry of Statistics, the production in primary sectors increased by 3.6 percent. In the mining sector growth is fallen by 1.5 percent. In the manufacturing sector, output grew by 3.5 per cent and electricity generation increased by 11.2 per cent.

in the use-based classification Production of primary goods fell by 3.3 per cent. Production of non-durable consumer goods (7.5%), capital goods (3.3%), intermediate goods (0.8%), construction materials (7.8%) and durable consumer goods (17.6%) increased.

National Family Welfare Survey 2019-20:

The results of the first phase of the National Family Welfare Survey conducted in 22 States / Union Territories have been released by the Ministry of Health and Family Welfare. This survey was previously conducted in 2015-16. There has been no significant improvement in the number of men and women educated for at least 10 years in 2019-20.The number of child marriages has increased in Tripura, Manipur and Assam as compared to 2015-16. Child marriages are still high in West Bengal (41.6 per cent) and Bihar (40.8 per cent). The number of children and women with anemia still remain high in most of the parts in 2019-20. In Kashmir, Tripura, Gujarat and West Bengal There is an increase in the number of children and women with anemia than what is observed in 2015-16. The number of anemic men in Kashmir is higher comparing to other states  which is one of the indicator  how much Kashmiris are suffering by the repression unleashed by  central govt. Spousal violence has increased in five states - Karnataka, Sikkim, Maharashtra, Himachal Pradesh and Assam. Sexual violence has increased in five states - Assam, Karnataka, Maharashtra, Meghalaya and West Bengal. In 20 states / Union territories surveyed less than 1 percent of men undergo sterilization. How unjust it is to impose the extra burden of sterilization to women who already bear the brunt of the family system such as childbirth, child rearing, and chores. This is just one of the many indicators of gender inequality in India.

Due to Covid crisis there is more than 9 percent decline in the number of female workers which will only exacerbate gender inequality.

 

The United Kingdom, which has left the EU, is planning to sign a free trade agreement with India in 2021. In WTO December meeting in Geneva, The negotiation to exclude the Covid-19 vaccine from intellectual property rights (TRIPS) in order to make it accessible to all countries is opposed by the United States and the European Union and failed without consensus. The inhumane World Trade Organization (WTO) has abandoned developing poor countries and crores of people without purchasing power to die at the mercy of the market. WTO Negotiations to ban export fiscal stimulus to protect fish resources have also failed.

The Finance Minister is proud that she has not missed any opportunity to make proper use of this dual crisis period to carry out anti-people reforms, and now she is receiving the demands and suggestions from the High Level Advisory Committees of business groups for the next Budget Statement. The US President has awarded Narendra Modi for his prowess in oppressing the Indian people and states and for threatening peace in the Asiatic region. The Finance Minister and the Prime Minister continue to ignore the millions of farmers who have been struggling for more than a month in the bitter cold in Delhi. So far, more than 33 farmers have sacrificed their lives for the cause. The centre has suspended winter session of parliament just to ignore the demands of the farmers. As a result, central ministries and departments are facing a cash crunch. Narendra Modi, who take pride of keeping the tax rate for corporations lowest in the world, is now concerned to promote the  interests of the real estate sector not an iota about farmers. This undemocratic  Fascist regime, according to Amitabh Kant is toomuch-democracy! which he condemns as an obstacle to reforms. The Delhi Chalo" struggle started by Punjab and Haryana farmers who have been religiously, racially and economically oppressed  has now spread all over India. A large group in India is accumulating more and more wealth doing nothing. But the farmers who fed us are cultivating the land and growing crops even when they are struggling. Along with onions our Farmers are sowing the seeds of revolution. No one can stop its growth.

Wednesday, December 30, 2020

சூழலியல் வகுப்பு - 2

 


காலநிலை மாற்றம்

புவியின் காலநிலை வரலாறு:

நம் சமூகமும், உயிர்க்கோளமும் இன்று சந்திக்கும் மிகப்பெரும் சூழலியல் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உள்ளது. இதைச் சூழலியல் விஞ்ஞானிகளும், மற்றத் துறைகளைச் சார்ந்த நிபுணர்களும்  சுட்டிக்காட்டியுள்ள போதிலும், காலநிலை மாற்றம் என்பது உண்மையல்ல என்றும், அது வெறும் கட்டுக்கதை என்றும் ஒரு சாரார் பரப்புரை செய்கிறார்கள். இதில் எது உண்மை? காலநிலை மாற்றம் அறிவியல் பூர்வமான உண்மையா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அறிய வேண்டியுள்ளது. நிகழ்கால சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், வருங்காலத்தில் பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கும் நாம் வரலாற்று ஒளியைப் பாய்ச்சி ஆராயாமல் அப்பிரச்சனைகளுக்கான சரியான தீர்வைப் பெற முடியாது. வரலாறு என்பது புனையப்பட்ட கதைகளோ புராணங்களோ அல்ல, வரலாற்று ஆய்வு அறிவியல் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்பதை 21ஆம் நூற்றாண்டிலும் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். வேதங்களே அறிவியல் என்று ஓதப்படும் இன்று அறிவியல் என்ன என்பதையும் அறிவுறுத்த வேண்டியுள்ளது. அறிவியல் என்பது ஆய்வுகளின் அடிப்படையிலும், தரவுகளின் அடிப்படையிலும் பெறப்பட்ட உண்மைகளால் ஆனது. இவ்வுலகிலுள்ள எல்லா நிகழ்வுகளுக்கும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும் வரலாறு உள்ளது. அதன் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்கிறோம், உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு உண்டு என்றால் காலநிலைக்கும் ஒரு வரலாறு உண்டுதானே? நம் உலகம் இதுவரை கடந்து வந்த காலநிலைகளைப் பின்சென்று பார்க்கலாமா?

வானிலை என்பது வளிமண்டலத்தின் வெப்பநிலை, ஈரப்பதம் மழைப்பொழிவு ஆகிய கூறுகளை ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் எனக் குறுகிய காலகட்டத்தில் பதிவு செய்வதைக் குறிக்கிறது. நீண்ட கால அளவில் அவை பதிவுசெய்யப்படும் போது அதுவே காலநிலை எனப்படுகிறது, இதுதான் காலநிலைக்கும் வானிலைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு. புவியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகும் கிட்டத்தட்ட 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவி உருவாகத் தொடங்கியது. புவியின் வாழ்வுக் காலம் நான்கு பேரூழிக் காலங்களாக (Eons) பிரிக்கப்பட்டுள்ளது, ஒரு பேரூழிக் காலம் என்பது 50 கோடியிலிருந்து 100 கோடி ஆண்டுகளைக் குறிக்கும். இவை முறையே 1. ஹாடியன், 2. ஆர்கியன் 3. புரோட்டிரோசோயிக் 4. பெனெரோசோயிக் என அழைக்கப்படுகின்றன.

அதற்கு அடுத்த மட்டத்தில் பேரூழிக்காலங்கள் ஊழிக்காலங்களாகவும் (‘Era’-பல மில்லியன் ஆண்டுகள், ஊழிக்காலங்கள் பகுதிகளாகவும் (‘periods’ ஒரு மில்லியன் ஆண்டுகள்) பிரிக்கப்பட்டுள்ளன.

நம் புவியானது அதன் ஆதிக் காலத்திலிருந்து அடுத்தடுத்து பல வெப்பக் காலங்களையும் பனி ஊழிக் காலங்களையும் கண்டுள்ளது. புவியானது மூன்று வடிவங்களில் காணப்பட்டிருந்தது. ஒரு வெப்பமான பசுங்குடிலாகவோ (green house) அல்லது குளிரான பனிக் குடிலாகவோ (ice house), முற்றிலும் உறைந்த பனிப் பந்தாகவோ (ice ball) காணப்பட்டது. பனிக் காலமானது தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் போது அது பனியூழிக் காலம் என அழைக்கப்படுகிறது. இரண்டு பனியூழிக் காலங்களுக்கு இடைப்பட்ட காலம் பனியூழி இடைக்காலம் (Interglacial period) எனப்படுகிறது. அடுத்தடுத்து பனியூழிக் காலத்தின் கால அளவானது 40,000 ஆண்டுகளிலிருந்து 1 லட்சம் ஆண்டுகள் வரை வேறுபடுகிறது. அதன் இடையில் வரும் பனியூழி இடைக்காலம் 10,000 ஆண்டுகள் வரை நீடிக்கிறது. பனியூழி இடைக்காலங்கள் வெப்பக் காலங்களாக உள்ளன.

புவியின் வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன்டை-ஆக்சைடு போன்ற முதன்மையான பசுங்குடில் வாயுக்கள் (Green house gases) ஆகும். பசுங்குடில் விளைவு என்பது செயற்கையான நிகழ்வு அல்ல. அது ஒரு இயற்கை நிகழ்வு தான். இது புவியில் மட்டுமல்ல, வளி மண்டலத்தைக் கொண்டுள்ள பிற கோள்களிலும் பசுங்குடில் விளைவு நிகழ்கிறது. வளி மண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இருப்பதால்தான் புவியில் உயிர்கள் வாழத்தக்க ஒரு சூழ்நிலை நிலவுகிறது. பசுங்குடில் வாயுக்கள் இல்லையென்றால் புவியின் வெப்பநிலை -18 அல்லது -19 பாகையாகக் குறைந்திருக்கும். பசுங்குடில் விளைவினால்தான் நாம் வாழ்வதற்கான சூழல் புவியில் ஏற்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பசுங்குடில் வாயுக்களின் அளவு வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளால் மாறுபட்டுள்ளது. அதுவே  புவியின் வெப்பநிலையையும், புவியின் நீர்ப்பரப்புகளின் அளவையும் (கடல் மட்டத்தின் அளவு), அதன் நிலையையும் (பனிப் பாறைகளின் அளவு) தீர்மானிக்கிறது.

புவி கடந்துவந்த பேரூழிக்காலங்கள்:

ஹாடியன் பேரூழிக்காலம்:

புவியின் முதல் பேரூழிக் காலம் ஹாடியன் எனப்படுகிறது .ஹாடியன் என்பது கீழுலகின் கடவுள் பெயரைக் குறிக்கும் கிரேக்கச் சொல். நரகம் மாதிரியான ஒரு சூழ்நிலையையே, உயிர்கள் வாழத் தகுதியற்ற ஒரு சூழலையே ஹாடியன் குறிக்கிறது. ஏனெனில், பெருவெடிப்புக் கொள்கையை நீங்கள் அறிந்திருப்பீர்கள், புவி தோன்றிய போது எரிமலைகளுடன், நெருப்புப் பிழம்பாக இருந்தது. அது ஒரு முழுமையான திட வடிவம் பெறாமல் ஒரு நெருப்புக் கோளமாகத்தான் இருந்து வந்தது, அந்தக் காலகட்டமே ஹாடியன் எனப்படுகிறது.

ஆர்க்கியான் பேரூழிக்காலம்:

ஹாடியனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது பேரூழிக் காலம் ஆர்க்கியான் எனப்படுகிறது. ’ஆர்க் என்பது ஆதி என்ற பொருளுடையது. ஆர்க்கியான் காலகட்டத்தில்தான் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படைச் சூழல் ஏற்பட்டது ஆர்க்கியான் காலகட்டத்தில்தான் புவியின் வெப்ப நிலை குறைந்து கண்டங்கள் உருப்பெற்றன. அடிப்படையான ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. ஆனாலும் ஆக்சிஜன் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. அதற்கடுத்த புரோட்டிரோசோயிக் காலகட்டத்திலும் ஆக்சிஜன் குறைவாகவே காணப்பட்டது. ஏனென்றால் இரும்பு மற்றும் பிற தாதுக்கள் அதிக வினைப்படும் திறனுடன் காணப்பட்டதால் அவற்றின் ஆக்சிஜனேற்றத்திற்கே பெருமளவு ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், குறைந்த அளவிலே உயிரினங்கள் காணப்பட்டன.

புரோட்டிரோசோயிக் பேரூழிக்காலம்:

ஆர்க்கியானைத் தொடர்ந்து வந்த மூன்றாவது பேரூழிக் காலம் புரோட்டிரோசோயிக் எனப்படுகிறது. புரோட்டிரோசோயிக்கில் உள்ள புரோட்டோ என்றால் முந்தைய என்று பொருள். சோயிக் என்றால் விலங்கு என்று பொருள். அதாவது முந்தைய விலங்கினங்கள் தோன்றிய காலம் புரோட்டிரோசோயிக் காலம் எனப்படுகிறது. இந்த மூன்றாவது பேரூழிக் காலத்தில் இரண்டு பனியூழிக் காலங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் பாக்டீரியா போன்ற ஆரம்பநிலை உயிரினங்களான புரோக்கேரியட்டுகள் தோன்றியுள்ளன. இந்தக் காலகட்டத்திலும் பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும் அளவிற்கு ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கவில்லை. அப்பொழுது ஓசோன் மண்டலமும் ஏற்படாததால் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இருந்தது. நிலப்பகுதிகளில் உயிர்கள் வளர்வதற்கான சூழல் உருவாகவில்லை. ஆரம்ப காலத்தில் நீர்நிலைகளில்தான் உயிரினங்கள் முதலில் தோன்றியுள்ளன. உயிர் தோன்றுவதற்கான உயிர் மூலக்கூறுகள் முதன்முதலில் நீரில்தான் உருவாகின. ஓசோன் படலம் ஏற்பட்ட பிறகுதான் உயிரினங்கள் நிலத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டது. இந்த புரோட்டிரோசோயிக் காலத்தில் ஒரு முக்கியமான பனியூழிக் காலம் ஏற்பட்டது. 2,500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்த முதல் பனியூழிக் காலம் ஹுரானியன் பனியூழிக் காலம் எனப்படுகிறது. புரோட்டிரோசோயிக் காலகட்டம் முடியும் போதும் கிரையோஜனியன் என்ற காலப் பகுதியில் ஸ்டுர்டியன்,மரினோன் என இரு பனியூழிக்காலங்கள் ஏற்பட்டன. ‘கிரையோ என்றால் பனி என்று பொருள். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்தப் பனியூழிக்காலத்தில் புவியின் அனைத்து பகுதியும் பனியாய் உறைந்து ஒரு பனிப்பந்தாக புவி காணப்பட்டது.

பெனரோசோயிக் பேரூழிக்காலம்:

புரோட்டிரோசோயிக்கைத் தொடர்ந்து வந்த நான்காவது பேரூழிக்காலம் பெனரோசோயிக் எனப்படுகிறது. பெனரோசோயிக்கில் வரும் பெனரோ என்றால் கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரிகிற என்று பொருள். கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரிகின்ற உயிரினங்கள் தோன்றிய காலகட்டத்தைக் குறிக்கிறது. பெனெரோசோயிக் பேரூழிக்காலமானது 1.பேலியோசோயிக், 2.மீசோசோயிக், 3.செனோசோயிக் என மேலும் மூன்று ஊழிக்காலங்களாக(eras) பிரிக்கப்பட்டுள்ளன. பேலியோ என்பது பழைய என்னும் பொருளையும், மீசோ என்பது மத்திய எனும் பொருளையும், செனோ என்பது புதிய எனும் பொருளையும் குறிக்கிறது. பெனரோசோயிக் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் முதல் மூன்று பேரழிவுகள் பேலியோசோயிக் ஊழிக் காலத்திலும், அடுத்த இரண்டு பேரழிவுகள் மீசோசோயிக் ஊழிக் காலத்திலும் ஏற்பட்டுள்ளன. ஒரு விதமான உயிரினங்கள் அழிவதும், புதுவிதமான உயிரினங்கள் தோன்றுவதும் அது காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் என உயிர்க்  கோளத்தின் பரிணாம மாற்றம் ஒரு தொடர்  நிகழ்வாக உள்ளது 

1.   பேலியோசோயிக் ஊழிக்காலம்:

பேலியோசோயிக் முதல் காலகட்டமான கேம்பிரியன் காலப் பகுதியில்தான் கேம்பிரியன் வெடிப்பு ஏற்பட்டு பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்பட்டது. ஏனென்றால் அப்போது ஆக்சிஜன் அளவு அதிகரித்ததால் பல்லுயிர்களாகப் பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அடிப்படையாக  வைத்து உலகின் காலத்தை கேம்பிரியனுக்கு முன், கேம்பிரியனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஹாடியன், ஆர்க்கியன். புரோட்டிரோசோயிக் பேரூழிக் காலங்கள் பிரி-கேம்பிரியன் காலகட்டங்களாக அழைக்கப்படுகின்றன.

முதல் பேரழிவு:

கேம்பிரியன் பெருவெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட ஆர்டோடாவிசியன் காலப்பகுதியில் 444 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனியூழிக்காலம் (ஆண்டிஸ்-சகாரா) ஏற்பட்டு கடல் மட்டம் குறைந்ததால் முதல் பேரழிவு ஏற்பட்டது. கடலில் வாழ்ந்த உயிரினங்கள் பேரழிவை சந்தித்தன. கொனோடொன்ட், கடற்பஞ்சுகள் ஆகிய சில உயிரினங்களே தப்பிப் பிழைத்தன. இதைத் தொடர்ந்து சில்லுரியன் காலப்பகுதி ஏற்பட்டது.

இரண்டாம் பேரழிவு:

சில்லுரியன் காலப்பகுதியைத் தொடர்ந்து வந்த நியோடாவியன் காலப்பகுதி மீன்களின் காலம் என்றழைக்கப்பட்டது. இக்காலத்தில் கவச மீன்கள் அதிகம் காணப்பட்டுள்ளன நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் பேரழிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே கார்பனிஃபெரஸ் காலப்பகுதி வந்தது. இந்தக் காலப்பகுதியில் இருந்த காடுகள், உயிரினங்கள் புதைந்து படிம எரிப்பொருட்கள் பெருமளவில் பெறப்பட்டுள்ளதாலே கார்பனிஃபெரஸ் காலப்பகுதி என அழைக்கப்படுகிறது.

மூன்றாம் பேரழிவு:

பெர்மியன் காலப்பகுதியில் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சைபீரியாவில் எரிமலைச் செயல்பாட்டால் மூன்றாவது முறையாக உயிரிகளின் பெரும் பேரழிவு ஏற்பட்டது, பூச்சியினங்கள் அழிந்தன. காடுகள் அழிந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் கண்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பேஞ்சியா என்ற பெருங்கண்டம் தோன்றியது. பெர்மியன் காலப்பகுதியில் 95% உயிரிகள் அழிந்ததால் அது பேரிறப்புக் காலம் எனப்படுகிறது. பெர்மியன் காலப்பகுதியில் ஒரு பனியூழிக் காலமும் ஏற்பட்டது. பெர்மியன் காலப்பகுதியே பேலியோசோயிக் ஊழிக்காலத்தின் கடைசி காலப்பகுதியாகும்.

2. மீசோசோயிக் ஊழிக்காலம்:

நான்காவது பேரழிவு:

பேலியோசோயிக் காலத்தைத் தொடர்ந்து வெப்பமான மீசோசோயிக் ஊழிக்காலம் ஏற்பட்டது. மீசோசோயிக் ஊழிக்காலத்தில் பனியூழிக்காலம் ஏற்படவில்லை. இக்காலப்பகுதியில் பெரும் முதலைகள் காணப்பட்டன, ஊர்ந்து செல்லும் விலங்குகள் அதிகம் காணப்பட்டதால் அது ஊர்ந்து செல்லும் விலங்குகளின் காலமாக அறியப்படுகிறது. மீசோசோயிக் ஊழிக்காலம் டிரையாசிக், ஜுராசிக், கிரெட்டேசியஸ் ஆகிய மூன்று காலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. டிரையாசிக் காலப்பகுதியில் மைய அட்லாண்டிக் பகுதியில் ஒரு பெரும் எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததால் நான்காவது பேரழிவு ஏற்பட்டது. ஊர்ந்து செல்லும் விலங்கினங்கள் அழிந்தன இவை அழிந்த பிறகுதான் டைனோசர்கள் பல்கிப் பெருகுவதற்கான சூழல் உருவானது.

ஐந்தாவது பேரழிவு:

ஜுராசிக் காலப்பகுதியில் டைனோசர்கள் பல்கிப் பெருகின. அதைத் தொடர்ந்து வந்த கிரெட்டெசியஸ் காலப் பகுதியில், 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோவில் விண்கல் மோதியதாலும், தக்காணப் பகுதியில் எரிமலைச் செயல்பாடுகளாலும் ஐந்தாவது பேரழிவு ஏற்பட்டு டைனோசர்கள் அழிந்தன. அவற்றின் அழிவுக்குப் பிறகே பாலூட்டிகள் உருவாவதற்கான ஒரு சூழல்ஏற்பட்டது. அந்தக் காலப்பகுதியில் கண்ட நகர்வும் ஏற்பட்டது.

செனோசோயிக் ஊழிக்காலம்:

மீசோசோயிக் ஊழிக்காலத்தைத் தொடர்ந்து வந்த செனோசோயிக் ஊழிக்காலம் புதிய காலம் என்றும், பாலூட்டிகளின் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கடைசி காலப்பகுதி குவாட்டர்னரி என அழைக்கப்படுகிறது. இந்த குவாட்டர்னரி காலப்பகுதியில் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிலெய்ஸ்டோசீன் பகுதியில் பனியூழிக் காலம் ஏற்பட்டது. அதையடுத்து 11,700 ஆண்டுகளாக தொடர்கின்ற ஹொலோசீன் என்ற வெப்பக் காலத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதாவது நாம் ஒரு பனியூழி இடைக்காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அப்படியென்றால்  நம் புவியானது அடுத்து ஒரு பனியூழிக் காலத்தை சந்திக்கவுள்ளதா?.புவி அதன் இயல்பான செயல்பாடுகளோடு தொடர்ந்திருக்குமானால் கி.பி. 3500இல் ஒரு பனியூழிக்காலம் ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் அது மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட பசுங்குடில் விளைவால் தடுக்கப்பட்டுள்ளது. மனிதச் செயல்பாடுகளால் 1850க்கு பிறகு பெருகிய தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம், போக்குவரத்தால் பசுங்குடில் வாயுக்களின் அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. தொழிற்புரட்சிக்கு முன் ஒரு பில்லியனில் 280 பகுதியாக  இருந்த கரியமில வாயுவின் அளவு இப்பொழுது ஒரு பில்லியனில் 411 பகுதிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்து வரும் பனியூழிக் காலமானது தடுக்கப்பட்டது.

புவியில் பனியூழிக் காலங்கள், வெப்பக் காலங்கள் என மாறி மாறிக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணங்கள் பின்வருமாறு:

1.    முதலாவதாக வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவில் ஏற்படும் மாற்றத்தால் புவியின் வெப்பநிலை மாறுகிறது.

2.    புவியின் சுற்றுப் பாதையில் ஏற்படும் மாற்றம்: புவி சூரியனைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட அச்சில் சுற்றி வருகிறது. அந்த அச்சின் சாய்வு 21.8 பாகையிலிருந்து 24.4 பாகை வரை மாறுபடுகிறது. இந்த மாற்றம் ஒரு சுழற்சியாக ஒவ்வொரு 40,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.

3.    புவியின் சுற்றுப் பாதையானது ஒரு நீள்வட்டப் பாதை என்று நாம் படித்திருப்போம். ஆனால் அது எல்லா நேரங்களிலும் நீள்வட்டப் பாதையாக இருப்பதில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நீள்வட்டப் பாதையானது வட்டப் பாதையாக மாறுகிறது. வட்டப் பாதையில் சுற்றி வரும் போது புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் மாற்றம் ஏற்படாது. ஆனால் நீள்வட்டப் பாதையாக இருக்கும் போது ஓரிடத்தில் புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட  தொலைவு அதிகமாக பெருமத் தொலைவாகவும், மற்றோர் இடத்தில் புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட  தொலைவு குறைவாக சிறுமத் தொலைவாகவும் இருக்கும். இதனால் சூரியனிலிருந்து புவியை வந்தடையும் ஒளி ஆற்றலின் அளவிலும் வெப்பத்தின் அளவிலும் மாற்றம் ஏற்படுகிறது.

4.    புவியானது தன்னைத் தானே சுற்றும் போது அதன் அச்சில் விலகல் ஏற்பட்டு, கற்பனையான கூம்பச்சைச் சுற்றி ஒரு வட்டப் பாதையையும் மேற்கொள்கிறது. புவி வட்ட வடிவில் மேற்கொள்ளும் இந்த தள்ளாட்டச் சுற்று 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த மூன்று சுற்றுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் போது சூரியனிடமிருந்து புவியை வந்துசேரும் வெப்பத்தின் அளவு குறைகிறது. இந்த மூன்று சுற்றுகளையும் ஒன்றிணைத்து மிலன்கோவிச் சுழற்சிகள் என்றழைக்கப்பர். மிலன்கோவிச் என்ற செர்பிய விஞ்ஞானியே இதைக் கண்டுபிடித்தார், மிலன்கோவிச் சுழற்சிகளால் புவி குளிரூட்டப்படுகிறது. கடந்த ஜந்து லட்சம் ஆண்டுகளில் ஐந்து முறை ஏற்பட்ட பனியூழிக் காலங்களுக்கான விளக்கமாக மிலன்கோவிச் கோட்பாடு அறியப்படுகிறது.

5.    எரிமலைகளின் தாக்கம்: எரிமலைகளின் அதிகச் செயல்பாடுகளாலும், பல முறை ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலும், எரிமலைக் குழம்பு பல்லாயிரக் கணக்கான மைல் தூரம் பரவி அதன் மூலம் அதிக வெப்பம் வெளியேறுகிறது. எரிமலை வெடிப்பின் மூலம் வெளியான சாம்பல், கந்தக சல்பைடு, வளிமக் கரைசல் (aerosol) ஆகியவை ஒரு புகை மண்டலமாகி சூரியனிலிருந்து புவிக்கு வரும் வெப்பத்தைத் தடுக்கிறது. அதனால் புவியின் வெப்பம் குறைந்து குளிரூட்டப்படுகிறது. எரிமலைக் குழம்புகளிலிருந்து மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடும் அதிகளவில் வெளியிடப்படுகிறது. இந்த இரு பசுங்குடில் வாயுக்களின் அளவும் பெரிதும் அதிகரித்து புவியின் வெப்பநிலை அதிகரிக்கவும் காரணமாகிறது.

6.    மலைகள் உருவாக்கம்: கண்டத் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுதலால் மலைகள் தோன்றுகின்றன. மலை உருவாக்கச் செயல்பாடானது வளிமண்டலத்தில் இருந்து அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொள்கிறது. அதனால் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு குறைவதால் புவி குளிர்ச்சியடைகிறது. கடைசி பனியூழிக் காலமான பிலைய்ஸ்டோசீனில் புவி அதிகளவு குளிர்ச்சியடைந்ததற்குக் காரணம் இமயமலையின் தோற்றமும், வளர்ச்சியுமே. அண்டார்டிகா எப்பொழுதும் பனி உறைந்து காணப்படவில்லை. 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் அண்டார்டிகா முழுவதும் பனியாக உறைந்தது. வட-தென் அமெரிக்கப் பகுதியின் மலை உருவாக்கமே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அதே போல் ஆர்க்டிக் பனியும் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாகியது. சமீபத்தில் 14ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் புவி குளிர்ச்சியடைந்துள்ளது. இது சிறுமப் பனிக்காலம் என அழைக்கப்படுகிறது. சூரியப் புள்ளிச் சுற்றின் (Sun spot cycle) விளைவாக சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சின் அளவு குறைந்ததே இதற்குக் காரணம் என மாண்டர் என்ற விஞ்ஞானி விளக்கியுள்ளார். சூரியனில் கருமையான பகுதிகள் அதிகரித்தால் சூரியனின் செயல்பாடும், வெப்ப நிலையும் அதிகரிக்கும். கரும்புள்ளிகள் குறைந்து விட்டால் சூரியனின் வெப்ப நிலையும் குறைந்து விடும். 1800களில் சூரியனில் காணப்படும் கரும்புள்ளிகளின் அளவு குறைந்திருந்ததாக அவர் கண்டுபிடித்தார். அதனால்தான் அந்தக் காலகட்டத்தில் புவியின் வெப்பநிலை குறைந்துள்ளது. இது மாண்டர் சிறுமம் எனப்படுகிறது. குறிப்பாக 1618ஆம் ஆண்டு கோடைக்காலம் இல்லாததாக இருந்தது. இந்தச் சிறுமப் பனிக்காலத்தைத் தொடர்ந்து ஒரு வெப்பமான காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

பசுங்குடில் விளைவு:

ஒரு கண்ணாடிப் பெட்டி அதிகமாக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும், ஆனால் அதே அளவிற்கு வெப்பத்தை வெளியிடாது எனவே குளிர்ப் பகுதிகளில் தாவரங்களை வளர்க்க இவை பசுங்குடில்களாக பயன்படுத்தப்படுகின்றன. இது போன்றே புவியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் பசுங்குடில் போல் வெப்பத்தை வெளியிடாமல் தக்கவைப்பதால்தான் இது பசுங்குடில் விளைவு என அழைக்கப்படுகிறது. பசுங்குடில் விளைவை முதன்முதலில் ஜோசப் ஃபுரியர் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். பசுங்குடில் விளைவுக்கு கார்பன் டை ஆக்சைடுதான் முக்கியக் காரணம் என்பதை ஸ்வந்தே அர்ரேனியஸ் என்ற ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி கண்டறிந்தார். அதன் பிறகு 1955இல் படிம எரிபொருள்களை அதிகம் பயன்படுத்துவதுதான் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம்  என்பதை கீலிங்க் என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். அதற்கு பிறகு 1980களில் மனிதனால் தூண்டப்பட்ட பசுங்குடில் விளைவால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. .நா.வின் சூழல் அமைப்பும், உலகக் காலநிலை அமைப்பும் இணைந்து சர்வதேச அரசுகளிக்கிடையிலான காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு (IPCC) 1988இல் ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு தனித்த ஆய்வுகளை மேற்கொள்வதில்லை என்ற போதும் உலகெங்கும் காலநிலை குறித்துச் செய்யப்படும் ஆய்வுகளைத் தொகுத்து அதன் அடிப்படையில் மதிப்பீடுகளை வெளியிடுகிறார்கள். காலநிலை மாற்றத்தால் சமுதாயத்தில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றனவா? அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவ்வமைப்பில் மூன்று வேலைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. முதல் குழு இயற்பியல் அடிப்படையில் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளைத் தொகுத்து அதன் அடிப்படையில் மதிப்பீடுகள் அளித்தது. இரண்டாம் குழு காலநிலை மாற்றம் சூழலியல் அடிப்படையில் உயிரினங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுகளின் மதிப்பீடுகளை அளித்தது. மூன்றாம் குழு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த ஆய்வுகளின் மதிப்பீடுகளை அளித்தது. 2014இல் இவை அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2007இல் ஐபிசிசிக்கும், முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் அல்கோருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் அறிவியல் அடிப்படையில் உண்மை என்பதை இவற்றிலிருந்து அறிய முடியும்.

மனிதர்கள் தோன்றுவதற்கு முன் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் உலகத்தில் இது வரை 5 மிகப் பெரும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவை பல மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்டவை. 5 பில்லியன் ஆண்டுகளில் 5 மிகப்பெரும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. நாம் வாழும் செனோசோயிக் ஊழிக் காலத்தில் ஒரு குறுகிய காலத்தில் வெறும் 150 ஆண்டுகளிலேயே ஒரு பேரழிவு உண்டாவதற்கான சூழல் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளது, பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டதால் உயிரிகளின் பன்மைத்துவம் குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு ஆறாவது பேரழிவு உலகம் முழுவதும் ஏற்படும். தொடர்ந்து இயக்கத்தில் உள்ள புவிக்கு இது இழப்பில்லை. மனிதனே அழிந்து விட்டாலும் மிகவும் நுண்ணிய சிறு உயிர்களால் நீடித்திருக்க முடியும். இல்லையென்றாலும் வேறு உயிரினங்கள் புதிதாக உருவாகலாம். ஆனால் இத்தனை ஆண்டுக் காலம் மனித இனம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அரிய பல கண்டுபிடிப்புகளும், பண்பாடும், மனித வரலாறும் சுவடில்லாமல் அழிய நாமே காரணமாக இருக்கக் கூடாது. ஆறறிவுடைய மனிதன் ஆறாவது பேரழிவு ஏற்படக் காரணமாக இருக்கலாமா?. இந்த ஆறாவது பேரழிவு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மனித சமூகத்திடம் உள்ளது. எனவே இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

காலநிலை மாற்றத்திற்கு முக்கியமான காரணங்கள் என்னவென்று இது வரை பார்த்தோம். இதனுடன் மிகவும் ஆர்வம் ஏற்படுத்தும் ஒரு துறையான தொன்மக் காலநிலையியல் குறித்தும் அறிந்து கொள்வோம்.

தொன்மக் காலநிலையியலை ஆய்வு செய்வோர் தொன்மக் காலநிலையாளர் என அழைக்கப்படுகின்றனர். புவியில் காணப்படும் உயிர்ப் படிமங்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். நாம் பழங்காலத்திற்கு மீண்டும் செல்ல இயலாது. ஆனால் பழங்காலம் விட்டுச் சென்றுள்ள தடயங்களின், பதிவுகளை ஆய்வு செய்து தகவல்கள் பெற முடியும் என்ற அடிப்படையில்  தொன்மக் காலநிலை ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இவற்றிலிருந்து நிறைய புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கு அவர்கள் பல மாதிரிகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஒரு செல் உயிரிகளான ஃபொராம்ஸ் என்ற உயிரினம் ஓடுடைய சிறு உயிரிகளையும், டையாடம்ஸ் ஓடுடன் கூடிய பாசியையும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தண்ணீரை H2O  எனக் குறிப்பிடுகிறோம், அதில் ஆக்சிஜன் உள்ளது. இந்த உயிரிகள் விட்டுச் சென்ற ஓட்டிலுள்ள ஆக்சிஜன் ஐசோடோப்புகளின் தன்மையையும், அளவுகளையும் வைத்து அவற்றின் காலகட்டம் என்ன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். அப்பொழுது என்ன வெப்ப நிலை நிலவியது என்பது, அதில் உள்ள ஆக்சிஜனின் கனமான ஐசோடோப்புகளுக்கும், இலேசான ஐசோடோப்புகளுக்கும் இடையிலான விகிதத்திலிருந்து கண்டறியப்படுகிறது. கனமான ஐசோடோப்புகளின் நிலைத் தன்மை அதிகம், வெப்பநிலை அதிகமாகும் போது இலேசான ஐசோடோப்புகள் குறைந்து விடும், இதன் அடிப்படையில்  வெப்பநிலையைக் கணக்கிடுகிறார்கள்.

மரங்களில் உள்ள ஆண்டு வளையங்களை ஆய்வு செய்வதன் மூலம் பல புதிய தகவல்கள் பெறுகின்றனர். ஆண்டு வளையங்களுக்கிடையே உள்ள பருமன். அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் எவ்வளவு மழை பொழிந்தது, என்ன வெப்பநிலை நிலவியது என்பதையும், தீயால் ஏற்படும் வடுக்கள் உள்ளனவா என்பதிலிருந்து அந்த ஆண்டில் தீ ஏற்பட்டதா என்பதையும் அறிந்து கொள்கிறார்கள்.

மகரந்தம், ,பறவையின் எச்சம், எனப் பல்வேறு படிம மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் செய்கிறார்கள். ஈல் மீனைப் போன்று தொன்மையில் இருந்த கொனொடொன்ட் என்ற மீனின் பற்கள் மிக முக்கியமான மாதிரிகளாக இந்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஆர்ட்டிக் கிரீன்லாந்து, அண்டார்டிக் பகுதிகளில் நிரந்தரமாக உறைந்து காணப்படும் பனி மலைகளின் ஆழத்திலிருந்து ஐஸ் கோர் எனப்படும் நீண்ட பனிக்கம்பிகளை மாதிரிகளாக வெட்டி எடுத்து அவற்றை ஆய்வு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பனிப் பொழிவு ஏற்படும் போது, ஒரு வருடத்தில் பொழியும் பனியெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அடுக்காகிறது. அது போல் அடுத்தடுத்து அடுக்குகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் அந்தக் காலக்கட்டத்திற்கான அரிய தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்வதன் மூலம் அப்பொழுது என்ன வெப்பநிலை நிலவியது. வேறு உயிரினங்கள் இருந்தனவா எனப் பல்வேறு தகவல்கள் பெறப்படுகின்றன. ’ஐஸ் கோர்களில் காணப்படும் உறைந்த வாயுக் குமிழிகளின் மூலம் காற்றில் இருந்த மாசுக்கள் குறித்தும் தரவுகள் பெற முடிகிறது.

இந்த உலகமே ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. இந்தப் புத்தகத்தில் படிக்கப்படாத பல பக்கங்கள் உள்ளன. ஒரு சின்ன மணல் துகளிலிருந்து, நீர்த்துளி, பனிப்பாறை என அனைத்திலும் இந்தப் புவியின் கதைகள் ஒளிந்துள்ளன. இன்னும் நமக்குத் தெரியாத, சொல்லப்படாத பல கதைகள் உள்ளன. தொன்மக் காலநிலையியல் கூறும் கதைகள் வெறும் கட்டுக்கதைகள் அல்ல. அறிவியல் அடிப்படையிலான உண்மைகள்.

(தொடரும்)

டாலருக்கு வந்த வாழ்வு (9):

 


சமமற்ற பரிவர்த்தனை:

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதை சரிசமமான பரிவர்த்தனை என்று சொல்ல முடியுமா? அதை மீன்வேட்டை என்றுதானே சொல்ல முடியும்? வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் / ஏழை நாடுகளுக்கும் இடையிலான சர்வதேசப் பரிவர்த்தனைகளும் ப்படித்தான் உள்ள. சர்வதேசப் பண நிதியமும், உலக வர்த்தக அமைப்புகளும்   சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகளால் அனைத்து நாடுகளும் பயனடையும் என்றும் உலகெங்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்பட வழிவகுக்கும் எனவும் பரிந்துரைக்கின்றன. வளரும் / ஏழை நாடுகள் சர்வதேச வர்த்தகத்திற்குத் தங்கள் சந்தையை முற்றிலும் திறப்பதன் மூலம் காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படும், பொருளாதாரச் சமத்துவமின்மை குறையும் என்றும் பரிந்துரைக்கின்றன. ஆனால் சர்வதேசப் பரிவர்த்தனைகள் வளர்ந்த நாடுகளுக்கே சாதகமானவையாக உள்ளன, வளரும் நாடுகள் அதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. தடையற்ற சர்வதேசப் பரிவர்த்தனைகளே வளரும் / ஏழை நாடுகளின் உள்நாட்டுத் தொழில்களின் வளர்ச்சியைத்டுப்பதுடன் அவை சிதைவடையவும் காரணமாக உள்ளன என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பானது முரண்பாடுகளையே வளர்ப்பதால், இந்த அமைப்பின் மூலம் உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமத்துவத்தையோ பொருளாதாரச் சமத்துவத்தையோ ஏற்படுத்த முடியும் என்பது அறிவியல் அடிப்படையற்ற வாதமே. சர்வதேசப் பரிவர்த்தனைகள் சமமற்றவை என்பதைப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர்களது அனுபவ அறிவின் அடிப்படையில் பெறப்பட்ட உண்மைகளே காரணமாக இருக்கலாம். பெரும்பாலான மேற்கத்திய பொருளாதாரவியலாளர்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள். காலனியாதிக்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அதன் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொள்ள தெரியும்? முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வடிவமே காலனியாதிக்கம். முதலாளித்துவம் சர்வதேச அளவில் ஏகாதிபத்திய / பேரரசிய வடிவத்தின் மூலமே உலகெல்லாம் அழிவை ஏற்படுத்துவதன் மூலம் தன்னை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறது. காலனியாதிக்கம் என்பது  நேற்றைய வரலாறு மட்டுமல்ல, இன்றைய நிஜமாகவும் உள்ளது. நவீன தாராளமயம், புதிய காலனியாதிக்கதின் மூலம் தேச அரசுகளின் இறையாண்மையைப் பறித்து அவற்றை அதிகாரமற்ற கைப்பாவைகளாக்கியுள்ளது. உலக வங்கி- சர்வதேச நாணய நிதியம் தலைமையிலான அமைப்பு மாற்ற திட்டங்களால் (SAP) வளரும் நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளின் மூலம் அரசின் சமூக நலத் திட்டங்களுக்கான செலவினம் முற்றிலும் குறைக்கப்பட்டுக் கட்டற்ற தனியார்மயமும், தாராளமயமும் ஊக்குவிக்கப்படுகின். வளரும் நாடுகள் தங்களது உள்நாட்டுத் தேவைகளைக் கருதாமல்  உலகச் சந்தைக்காகவே உற்பத்தி செய்யும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளைச் சார்ந்து அவற்றைச் சுற்றிவரும் துணைக் கோள்களாக வளரும் நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. முன்னர் காலனி நாடுகளாக இருந்த தற்போதைய வளரும் / ஏழை நாடுகள், அரைக் காலனிகளாக்கப்பட்டுள்ளன. தடையற்ற வர்த்தகத்தால் அந்நாடுகளின் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான தடையற்றசர்வதேசப் பரிவர்த்தனைகள் சமமற்ற பரிவர்த்தனைகளாகவும், இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மூன்றாம் உலக நாடுகளே, வளரும் / ஏழை நாடுகளே என்பதும், ஏதோ உணர்ச்சி வயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றோ அறிவியலுக்கு புறம்பானது என்றோ புறந்தள்ளி விட முடியாது. சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகள் ஏன் சமமற்றவையாக இருக்கின்றன? தற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? என்று பரிசீலிக்கும் போது ஐந்து முக்கியக் காரணிகளை அடையாளம் காண முடியும். இக்காரணிகள் ஒன்றிற்கொன்று இடைத் தொடர்பும், தாக்கமும் கொண்டுள்ள என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சமமற்ற பரிவர்த்தனைக்கான ஐந்து முக்கியக் காரணிகள் பின்வருமாறு:

1.    முதன்மைப் பொருட்களின் விலை குறைப்பு,

2.    அதிகார உறவுகளில் ஏற்றத்தாழ்வு,

3.    கூலி ஏற்றத்தாழ்வுகள்,

4.    மூலதனத்தின் அங்கக மதிப்பிலான  ஏற்றத்தாழ்வுகள்,

5.    நாணய மதிப்பிலான ஏற்றத்தாழ்வுகள்.

 

1.    முதன்மை பொருட்களின் விலை குறைப்பு:

வேளாண்மை சார்ந்த தொழில்களின் மூலமும், சுரங்கத் தொழிலின் மூலமும் பெறப்படும் பொருட்களே முதன்மைப் பொருட்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பருத்தி, சணல், உலோகத் தாதுக்கள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவை முதன்மைப் பொருட்கள் ஆகும். பருத்தி, சணல், உலோகங்கள் ஆகியவை பல தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாகவும் உள்ளன. வளரும் நாடுகளின் ஏற்றுமதியில் முதன்மைப் பொருட்களே பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் இவற்றின் விலையானது தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1950ல் ரவுல் பிரபிஷ் மற்றும் ஹன்ஸ் சிங்கர் இருவரும் தனித்தனியே மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் சர்வதேசப் பரிவர்த்தனையின் பலன்கள் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்முமிடையே சமமற்ற முறையில் பகிரப்படுகின் என்றும், சர்வதேச வர்த்தகம் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கே சாதகமாக உள்ளது என்றும், மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குப் பாதகமாக அமைகிறது என்றும் முடிவிற்கு வந்தனர். இது பிரீபிஷ்-சிங்கர் கோட்பாடு எனப்படுகிறது. 1980களின் முற்பகுதியில் இருந்தும் முதன்மைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.  ஏற்றுமதி சார்ந்த தொழில்மய வளர்ச்சிப் பாதையே நவீன தாராளமயத்தால் முன்னிறுத்தப்படுகிறது. இறக்குமதி மாற்றுத் தொழில்மயமாக்க (ISI) வளர்ச்சிப் பாதையை மேற்கொள்ள மூன்றாம் உலக நாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது தடைபடுகிறது. உள்நாட்டுத் உற்பத்தி வளர்ச்சி தடைபடுவதே அந்நாடுகளின் ஏற்றுமதியில் முதன்மைப் பொருட்கள் பெரும்பங்கு வகிப்பதற்கான முக்கியமான காரணமாக உள்ளது. அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் விதமாக உற்பத்தித் துறையில் முதலீடு செய்யப்படாமல் சொத்துக் குமிழிகளை உருவாக்கும் ஊக முதலீடுகளாக நிதித் துறை, ரியல் எஸ்டேட் துறையிலும் மற்றும் சேவைத் துறைகளிலுமே செய்யப்படுகிறது. வளரும் நாடுகளின் ஏற்றுமதியில் உற்பத்திப் பொருள்களின் அளவு வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது. விலைக் குறைப்பு என்பது மூன்றாம் உலக நாடுகளின் முதன்மைப் பொருட்களுடன்  நின்று விடவில்லை. பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் பொருட்களும் சேவைகளும் குறைந்த விலையில் கிடைப்பதற்கு அங்கு நிலவும் குறைந்த கூலியே காரணமாகிறது. மூன்றாம் உலக நாடுகளின் பொருட்கள் எதனால் குறைந்த விலைக்குப் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கான விடையாக அடுத்த நான்கு காரணிகளும் அமைகின்றன.

2.    அதிகார ஏற்றத்தாழ்வுகள்:

இயற்கையில் எந்தப் பொருளும் விலைக் குறியீட்டுடன் தோன்றுவதில்லை. பொருட்களின் விலையானது சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளுக்கான வேண்டலும் வழங்கலும் சமமாக இருக்கும் போது சந்தை சமநிலை அடைவதால் பொருள் அதன் உற்பத்தி விலைக்கே விற்கப்படுகிறது. ஆனால் பொருளின் வேண்டல் வழங்கலை நிர்ணயிப்பது சந்தை ஆற்றல்களே தவிர இயற்கைச் சக்திகள் மட்டும் அல்ல. ஒரு முற்றுரிமை பெற்ற விற்பனையாளர் போட்டியாளர்களை விலக்கிப் பொருளின் விற்கும் விலையை அதன் உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு கூட்டி விற்க முடியும். அதே போல் முற்றுரிமை பெற்ற வாங்குபவர் பொருளை அதன் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைத்து வாங்க முடியும். பொருட்கள் / சேவைகளின் வாங்கும் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் முற்றுரிமை பெற்ற பன்னாட்டு அமைப்புகளாலும், கூட்டமைப்புகளாலும் (monopolies, oligopolies) கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும் வர்த்தக அமைப்புகள் வாங்குவதற்கான முற்றுரிமையைப் பெற்றிருப்பதால் உற்பத்தியாளர்கள் விற்கும் விலையையும் அவையே தீர்மானிக்கின்றன முற்றுரிமைக் கொள்முதலாண்மைகள் (monopsonies). காட்டாக வால்மார்ட், அமேசான்). உழைப்புச் சக்தியும் ஒரு சரக்கு என்பதால் அதன் வாங்கும் விலையும் இவர்களால் குறைக்கப்படுகிறது. இவ்வாறு பொருட்கள் / சேவைகளின் வழங்கலையும் வேண்டலையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்களின் நுகர்வும்வற்றின் கையில் உள்ளது. பெரும்பாலான மக்களின் நுகர்வுப் பற்றாக்குறைக்கு நவீன தாராளமய அமைப்புகளே  காரணமாகவுள்ளது. அவற்றின் அதிகார முற்றுரிமை கூடுதல் லாபம் பெறுவதற்கும், அதன் மூலம் அதிகார முற்றுரிமையை  நிலைநாட்டுவதற்கும் காரணமாகிறது. உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளிலும் பன்னாட்டுத் தீர்ப்பாயங்களிலும் வளர்ந்த நாடுகளே அதிக அதிகாரம் கொண்டிருப்பதால் அவற்றில் வளரும் நாடுகள் பிரதிநிதித்துவம் பெறுவதில்லை என்பதுடன் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகவே அமைந்துள்ளன. தடையற்ற வர்த்தகம் என்பது பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்வதற்குப் பல்வேறு தடைகள் நிலவுகின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் சந்தைகளை வளரும் நாடுகளுக்கு முற்றிலுமாகத் திறப்பதில்லை. காப்பு வரிகள் மற்றும் வரியல்லாத தடைகளின் மூலம் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளைத் தடுக்கின், 

3.   கூலி / ஊதியங்களில் ஏற்றத்தாழ்வுகள்:

லாபத்தை நோக்கிய மூலதனம் தடைகளின்றி எல்லையில்லாமல் உலகெங்கும் பயணிக்கிறது. ஆனால் உழைப்பாளி உயர்ந்த ஊதியம் பெற தேச எல்லைகளைத் தாண்டுவதற்கு தேசியம் / மொழி / கல்வி / தொழில்நுட்ப அறிவு / பொருளாதாரம் எனப் பல்வேறு தடைகள் உள்ளன. உழைப்பாளரின் வெளியானது ஒரு தேசத்திற்குள் குறுக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களையும், நிபுணர்களையும் வளர்ந்த நாடுகள் இறக்குமதி செய்கிற போதிலும் இவர்கள் தேசங்களின் மொத்த மக்கள்தொகையில் ஒப்பளவில் சிறுபான்மையினரே. ஆனால் இதனாலும் மூன்றாம் உலக நாடுகளின் அறிவுவளமானது அந்நாடுகளுக்குப் பயன்படாத வகையில் கடத்தப்படுவதால் (brain drain) அந்நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் போது உபரிமதிப்பாக்கம் அதிகமாவதால் லாபத்தின் அளவைப் பாதிக்காமலே அதிகரித்த உற்பத்தித் திறனுக்கு நிகராக கூலியையும் அதிகப்படுத்த முடியும். ஆனால் லாபத்தையும், மூலதன திரட்டலையும் அதிகரிக்கும் பொருட்டு, கூலி குறைக்கப்படுகிறது. ஒரே உற்பத்தித் திறனைக் கொண்ட நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியம் வளர்ந்த நாடுகளில் அளிக்கப்படுவதை விட வளரும் நாடுகளில் மிகக் குறைவாகவே உள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கான போட்டியில் தங்கள் லாபம் குறையாமல் பாதுகாக்கக் கூலியை மேலும் குறைக்கவும் காரணமாகிறது. ஊதியம் / கூலி வேறுபாடுகளிலிருந்து ஏகாதிபத்திய நாடுகள் கூடுதல் லாபங்களைப் பெறுகின்றன. வளரும் நாடுகளில் கூலி குறைவாக இருப்பதால் இங்கிருந்து குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் சலுகையை வளர்ந்த நாடுகள் பெற்றுள்ளன. உலகளவில் நிதி மூலதனம் உலகமயமாக்கப்பட்டுள்ளது, கூலியானது உலகமயமாக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வாறு உலகளவில் கூலி சமமாக்கப்படுமானால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து மலிவாகப் பொருட்களையும், மூலப்பொருட்களையும், சேவைகளையும், வளர்ந்த நாடுகள் பெற முடியாது. மூன்றாம் உலக நாடுகளில் உழைக்கும் மக்கள் கூலிக் குறைவினாலும், விலை உயர்வாலும் பணவீக்கத்தாலும் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

4.    மூலதனத்தின் சராசரி அங்கக மதிப்பிலான ஏற்றத்தாழ்வுகள்: வளர்ந்த பொருளாதாரங்களின் மூலதனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, சராசரி அங்கக மதிப்பு, வளரும் பொருளாதாரங்களின் சராசரி அங்கக மதிப்பை விட அதிகம், ஆகவே தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகளுடைய நாடுகளிடையே நடக்கும் வர்த்தகப் போட்டியில், சர்வதேச லாப சராசரியாக்கத்தால் --- தொழில்நுட்ப வசதி வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாவதால் --- வளர்ச்சி  குன்றிய நாடுகளிடமிருந்து பெறப்படும் உபரி கூடுதல் லாபமாக -ஏகாதிபத்திய லாபமாக (super profit / imperialist profit) வளர்ந்த நாடுகளை அடைகிறது. சர்வதேச வர்த்தகத்தில் வளரும் நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விடக் குறைவான விலைக்கு விற்பதற்கும், வளர்ந்த நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விட அதிக விலைக்கு விற்பதற்கும் இது  காராணமாகிறது. இவ்வாறு சர்வதேச வர்த்தகப் போட்டியில் நீடிக்கக் கூலியைக் குறைக்கும் போக்கை ஊக்குவிப்பதன் மூலம் கூலி வேறுபாடுகள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது.

5.    நாணயங்களின் மதிப்பில் ஏற்றத்தாழ்வுகள்: நாணயங்களின் மதிப்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளால் வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் கணிசமான லாபம் பெறுகின்றன. ஆனால் இது குறித்து அதிகம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலே உள்ளதால் இதன் முக்கியத்துவம் வெளியே தெரியாமல் இருப்பதுடன் இந்தச் சுரண்டல் கேள்விக்குட்படுத்தப்படாமல் நீடிப்பதற்கும் காரணமாகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது. இன்று மூன்றாம் உலக நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்ததற்கான முக்கியக் காரணமாக உலக வங்கி-சர்வதேசப் பண நிதியம் ஆகியவற்றின் தலைமையில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் தாராளமய அமைப்பு மாற்றத் திட்டங்களே (SAP-structural adjustment programmes) உள்ளன.

கடன் நெருக்கடியில் உள்ள நாடுகள் நிதியுதவிக்காக சர்வதேசப் பண நிதியத்தை அணுகும் போது பல நிபந்தனைகளைச் செயல்படுத்தினால் மட்டுமே அது கடன் கொடுக்கிறது. அந்த நிபந்தனைகளில் ஒன்றுதான் நாணய மதிப்புக் குறைப்பு. இதைப் பரிந்துரை செய்வதற்கு கூறப்படும் காரணம் என்னவென்றால், ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கச் செய்தால் ஏற்றுமதி மலிவாக்கப்படுவதால் உலக சந்தையில் அதன் போட்டியிடும் திறன் அதிகரிக்கும், அந்நாட்டின் இறக்குமதிகளுக்கான  விலையும் இதனால் அதிகரிப்பதால் இறக்குமதி கட்டுப்படுத்தப்படும், இவ்வாறு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலம் நிதிச் சமநிலையை அடைய முடியும் என்பதே. இது கோட்பாட்டளவில் மட்டுமே உண்மையாகும். நடைமுறையில் நாணய மதிப்பு குறைப்பு அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிச் செலவுகளை அதிகரிப்பதாலும், ஏற்றுமதி வருவாயைக் குறைப்பதாலும் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கவே காரணமாகிறது. அதிக ஆற்றல் தேவை உள்ள இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலமே ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் நாணய மதிப்பு குறைப்பால்  அதற்கான இறக்குமதிச் செலவானது அதிகரிக்கிறது, வளரும் நாடுகள் உள்நாட்டு உற்பத்தித் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்குத் தேவையான இயந்திர பாகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவும் இதனால் அதிகரிக்கிறது. இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் திறந்த வர்த்தகத்தில் தடுக்கப்படுகின். திறந்த வர்த்தகத்தின் மூலம் வளர்ந்த நாடுகளின் ஏற்றுமதிச் சந்தையாக வளரும் நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தேவையில்லாத வெளிநாட்டுப் பொருட்கள் வளரும் நாடுகளின் தலையில் கட்டப்படுகின்றன. இதுவும் இந்நாடுகளின் இறக்குமதிச் செலவுகளை அதிகரிக்கிறது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாவதாலும் பணவீக்கம் ஏற்படும். அதாவது பணம் மதிப்பிழக்கும். அது உண்மையான கூலியின் மதிப்பை, கூலியின் வாங்கும் திறனைக் குறைக்கும். வெளிநாட்டுக் கடன் பெற்ற நாடுகள் அவற்றை அடைப்பதற்கும் இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இவ்வாறு சர்வதேசப் பண நிதியம் பரிந்துரைக்கும் நவீன தாராளமயத் தீர்வே பிரச்சனைகளை அதிகப்படுத்துகிறது.

வளரும் நாடுகள் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதற்கான காப்பு வரிகள் விதிக்க அனுமதிக்க வேண்டும். அதை விட்டு விட்டு முற்றிலும் இறக்குமதியைத் திறந்து விட்டுச் சமநிலையை ஏற்படுத்துவதற்காக நாணயங்களின் மதிப்பைக் குறைக்கச் செய்தால், தன்னிச்சையாகத் தானாகவே ஏற்றுமதி அதிகரித்து விடுமா?

சென்ற இதழில் பேங்கர் திட்டம் குறைபாடுடையது எனக் குறிப்பிட்டோம். பேங்கர் திட்டம் நிதிச் சமநிலை ஏற்படுத்துவதற்கு நவீன தாராளமயக் கொள்கையையே பரிந்துரைக்கிறது. சர்வதேசப் பரிவர்த்தனையின் போது வர்த்தகப் பற்றாக்குறை கொண்ட நாடுகளின் நாணயம் மதிப்பைக் குறைப்பதால், ஏற்றுமதிக்கான போட்டித் திறன் அதிகரித்து அந்நாடுகளின் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும், இதனால் வர்த்தகச் சமநிலை ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடுகிறது. வளர்ச்சி குறைந்த நாடுகளில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் அந்நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் விதமாக முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். கடன் சுமையற்ற முதலீடுகளின் மூலம் உற்பத்தித் துறையை மேம்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய முடியும். இதையெல்லாம் செயல்படுத்தாமல் நாணய மதிப்புக் குறைப்பு தானாகவே ஏற்றுமதியை அதிகரித்து விடாது. வளர்ச்சி குறைந்த நாடுகளில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் எந்தத் திட்டமும் பேங்கர் திட்டத்தால் முன்வைக்கப்படவில்லை என்பதே அதன் முக்கியமான குறைபாடு.

சம வளர்ச்சியற்ற நாடுகளிடையேயான வர்த்தகத்தில், நாணய மதிப்பைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதியை அதிகரித்து வருவாயை அதிகரிக்கலாம் என்பது முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தாமல் சாத்தியமில்லை. ஒரு நாட்டின் நாணயம் மதிப்பிழக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்நாட்டில் ஏற்றுமதி செய்யும் முதலாளி நாணயம் மதிப்பிழந்ததால் சரக்குகளை அதன் உற்பத்தி விலைக்குக் கீழேதான் விற்க முடியும். அவ்வாறு விற்றால் முதலாளிக்கு லாபக் குறைவுதானே ஏற்பட வேண்டும்? ஆனால் உற்பத்தி விலைக்குக் கீழே விற்கப்பட்ட போதிலும் அதிக வருவாய் பெற முடிகிறது என்றால் அதன் பின்னே என்ன நடக்கிறது? முதலாளி தொழிலாளரிடம் ஊதியம் தராமல் இலவசமாகப் பெறும் கூடுதல் உபரி உழைப்பை மேலும் அதிகப்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும். உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகிறது என்றால் அங்கே இழப்பவர் யார், தொழிலாளியே. வெளியில் ஏற்றுமதிக்கான போட்டியாக மட்டுமே தெரிவது உள்ளே உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்துவதிலான போட்டியாக இருக்கிறது, உழைப்புச் சுரண்டலுக்கான போட்டியில் முதலாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம், ஆனால் நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கிடையிலான  பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் குறைக்கவோ சமநிலைபடுத்தவோ முடியாது. மாறாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

 

(பி.கு.: அடக்கவிலை என்பது பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்கள், உழைப்புச்சக்தி ஆகியவற்றின் கூடுதல். பொருட்கள் அவற்றின் அடக்கவிலையில் (cost price) விற்கப்படுவதில்லை. அவ்வாறு விற்கப்படுமானால் முதலாளிக்கு லாபம் கிடைக்காது. அடக்கவிலையுடன் சராசரி லாபமும் சேர்ந்த உற்பத்தி விலையில் (production price) பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் ஒரு நிபந்தனை: பொருட்களின் வழங்கலும் வேண்டலும் சமமாக இருக்கும் போதே பொருட்கள் அவற்றின் உற்பத்தி விலையில் விற்கப்படும், அதாவது சந்தை விலை உற்பத்தி விலைக்குச் சமமாக இருக்கும். அதற்குத் தேவை அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகமாக்கப்படும். அவற்றின் தேவை குறையும் போது பொருட்களின் விலை குறையும்.)

வளர்ந்த பொருளாதாரங்களின் மூலதனங்களில், தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, சராசரி அங்கக மதிப்பானது வளரும் பொருளாதாரங்களின் சராசரி அங்கக மதிப்பை விட அதிகமாக இருக்கிறது, ஆகவே தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகளுடைய நாடுகளிடையே நடக்கும் வர்த்தகப் போட்டியில், சர்வதேச லாப சராசரியாக்கத்தால் --- தொழில்நுட்ப வசதி வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாவதால் --- வளர்ச்சி  குன்றிய நாடுகளிடமிருந்து பெறப்படும் உபரி கூடுதல் லாபமாக / ஏகாதிபத்திய லாபமாக (super profit / imperialist profit)  வளர்ந்த நாடுகளை அடைகிறது. சர்வதேச வர்த்தகத்தில் வளரும் நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விடக் குறைவான விலைக்கு விற்பதற்கும், வளர்ந்த நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விட அதிக விலைக்கு விற்பதற்கும் இது காராணமாகிறது. வளரும் நாடுகளில் உள்ள முதலாளிகள் உழைப்புச் சுரண்டலை மேலும் அதிகப்படுத்தாமல் சர்வதேசச் சந்தையில் போட்டி போடவோ நீடிக்கவோ முடியாது. இவ்வாறு சர்வதேச வர்த்தகப் போட்டியில் நீடிக்கக் கூலியை குறைக்கும் போக்கை ஊக்குவிப்பதன் மூலம் கூலி வேறுபாடுகள் அதிகரிப்பதற்கும் சர்வதேசப் பரிவர்த்தனைகள் காரணமாகின்.

1991ல் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமானதால் இந்தியா சர்வதேசப் பண நிதியத்தின் உதவியை நாடியது. சர்வதேசப் பண நிதியம் இந்தியாவிற்கு அமைப்பு மாற்றத் திட்டங்களான நான்கு நிபந்தனைகளை செயல்படுத்துமாறு கட்டளையிட்டது. அவையாவன:

1. ரூபாயை 20 சதவீதம் மதிப்பிழக்க செய்ய வேண்டும். 2. இறக்குமதிக்கான காப்பு வரிகளை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் 3. அரசின் எல்லா  செலவுகளையும் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் குறைக்க வேண்டும். 4. உற்பத்தி வரிகளை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்திய அரசு இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதுடன் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் துரிதகதியில் தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் செயல்படுத்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைபடுத்தியது. இன்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகளே நடைமுறையில் உள்ள. இவற்றின் விளைவாக 1970ல் 7.5 ரூபாயாக இருந்த டாலரின் மதிப்பு ப்போது 75 ரூபாயாக உயர்ந்துள்ளது. நவீன தாராளமயத்தின் அமைப்பு மாற்ற திட்டங்களே மூன்றாம் உலக நாடுகளின் நாணயங்கள் மதிப்பேற்றம் பெறாமல் வீழ்ச்சியடையவும், வளர்ந்த நாடுகளின் வலுவான நாணயங்களின் மேலாதிக்கம் நிலைநாட்டப்படவும் முக்கியக் காரணமாக உள்ள.

1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10ரூ என வைத்துக் கொள்வோம். ரூபாயை சர்வதேசப் பண நிதியம் 20% மதிப்பிழக்கச் செய்ய பரிந்துரைக்கிறது. அந்நாட்டின் நாணயம் 20% மதிப்பிழந்தால் விளைவுகள் என்னவாகும்? டாலருடனான அதன் பரிமாற்ற மதிப்பு 12 ரூபாயாக வீழும். இதனால் ஏற்றுமதியின் போது 20 சதவீதம் வருவாய் இழப்பும், இறக்குமதியின் போது 20% கூடுதல் செலவும் ஏற்படும். 1000 ரூபாய் வர்த்தகத்தில் 200 ரூபாய் இழப்பு ஏற்படும். 100 டாலரின் ரூபாய் மதிப்பு மதிப்புக் குறைப்பின் முன் 1000 ரூபாயாக இருந்தது மதிப்புக் குறைப்புக்குப் பின் 1200 ரூபாயாக வீழும். மதிப்புக் குறைப்புக்கு முன் 1000 ரூபாயாக இருந்த 100 டாலர் மதிப்புள்ள இறக்குமதி சரக்கின் விலை 1200 ரூபாயாக அதிகரிக்கும். அதே போல் 100 டாலர் மதிப்புக்குச் சரக்கை ஏற்றுமதி செய்யும் போது 200 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். 200 டாலர் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் 400 ரூபாய் இழப்பு ஏற்படும். சர்வதேசப் பண நிதியத்தின் கோட்பாட்டின் படி நாணய மதிப்புக் குறைப்பினால் ஏற்றுமதி அதிகரிக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும், 100 டாலரிலிருந்து 105 டாலருக்கு ஏற்றுமதி 5%  அதிகரிக்குமானால் அதன் மூலம் 60 ரூபாய் (5 டாலர் X 12 = 60 ரூ)  மட்டுமே ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கும் என்பதால் 140 ரூபாய் இழப்பு ஏற்படும். இது மட்டுமல்லாமல் டாலரில் பெற்ற கடன் மதிப்பும் 20% அதிகரிக்கும் என்பதால் கடனை தீர்க்க 20% கூடுதலாகச் செலவாகும்.

மற்ற நாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுவது போல் உலகளவில் நிதிப் பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும் அமெரிக்காவிற்கு இத்தகைய நாணய மதிப்புக் குறைப்புக் கொள்கையை சர்வதேசப் பண நிதியம் பரிந்துரை செய்திருக்குமானால்  டாலர் முன்னிலை உலகப் பணமாக நீடித்திருக்க முடியாது.

வளர்ந்த நாடுகள் தங்கள் பொருட்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு அதிக விலைக்கு  விற்பதற்கும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அவற்றின் பொருட்களை மலிவான விலைக்கு வாங்குவதற்கும் நாணய ஏற்றத்தாழ்வுகளும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. ஒரு நாணயத்தின் மதிப்பீட்டிற்கு இரண்டு அளவுகோல்கள் உள்ளன. ஒன்று அந்த நாணயத்தின் சந்தைப் பரிவர்த்தனை மதிப்பு (MER), ஒரு மெரிக்க டாலருக்கு சமமான ரூபாயின் பரிவர்த்தனை-மதிப்பு 2019ல் 73.00 ரூபாய். இன்னொன்று நாணயத்தின் உள்நாட்டு வாங்கும் திறன் மதிப்பு (purchasing power parity-ppp). அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வாங்கும் திறனின் மதிப்பு. அமெரிக்காவில் ஒரு டாலரில் வாங்கப்படும் பொருட்களை இந்தியாவில் எத்தனை ரூபாயில் வாங்க முடியும் என்பதன் மதிப்பைக் குறிக்கிறது.

2019ல் ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் வாங்கும் திறனின் மதிப்பு 21.1. அமெரிக்காவில் ஒரு டாலரில் வாங்கக் கூடிய பொருட்களை இந்தியாவில் 21.1 ரூபாயில் வாங்க முடியும் என்பதைக் குறிக்கிறது. ஆனால் ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு 70.4 ரூபாய். ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பிற்கும் வாங்கும் திறனுக்கும் இடையிலான விகிதம் 3.3. அதாவது ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு, அதன் வாங்கும் திறனை விட 3.3 மடங்கு குறைவாகவுள்ளது. ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பும், அதன் வாங்கும் திறனும் சமமாக இல்லை.

பொதுவாக அதிக வருவாய் பெறும் வளர்ந்த நாடுகளின் நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்பும், வாங்கும் திறனும் ஏறத்தாழ சமமாகக் காணப்படுகின். ஆனால் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புக்கும், வாங்கும் திறனுக்கும், இடையே அதிக வேறுபாடு காணப்படுகிறது. வளரும் நாடுகள், ஏழை நாடுகள் / குறைந்த வருவாயுடைய நாடுகளில் உழைப்பிற்குக் குறைந்த கூலியே வழங்கப்படும் நிலை உள்ளதால் அங்கே பல பொருட்களையும், சேவைகளையும் மலிவாகப் பெற முடிவதே இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. சர்வதேச அமைப்புகள் நாடுகளுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடுவதற்கு அவற்றின் தேசிய நாணயங்களின் வாங்கும் திறனைப் பயன்படுத்துகின்றன.

சர்வதேச ஒப்பீட்டு அமைப்பு மூலமாக 3,000 முக்கியமான நுகர்வுப் பொருட்கள், சேவைகள், 30 தொழில்கள், 200 வகையான உபகரணப் பொருட்கள், 15 கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றைக்  கொண்டு நாணயங்களின் வாங்கும் திறன் மதிப்பு கணக்கிடப்படுகிறது. (விலைக் குறியீட்டின் தலைகீழியே வாங்கும் திறன் ஆகும்). நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான பணவீக்கமும் இதையொத்த முறையிலேயே கணக்கிடப்படுகிறது.

கெர்னாட் கொஹ்லெர் என்ற பொருளாதார அறிஞர் உலகளாவிய அளவில் பண மதிப்பு குறித்து ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளார். பணத்தின் மதிப்பு உலகெங்கும் ஒரே மாதிரியாக இல்லை (அதன் பரிமாற்ற விகிதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரும் கூட); (2) குறைந்த வருமானமுடைய நாடுகளின் நாணயங்கள் குறைவாக மதிப்பிடப்படுகின்றனவே ஒழிய பல பொருளாதாரவியலாளர்கள் கூறுவது போல் அதிகமாக மதிப்பிடப்படவில்லை; (3) அதிக வருவாயுடைய நாடுகள், குறைந்த வருவாயுடைய நாடுகளிடமிருந்து மதிப்பைக் கறப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றே பரிமாற்ற விகித முறை என்றும், இதுவே மைய நாடுகளுக்கும் விளிம்புநிலை நாடுகளுக்கும் இடையிலான சமமற்ற பரிவர்த்தனைக்குக் கணிசமாகப் பங்களிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உட்ஸ் பீட்டர் ரெய்ச் என்ற பொருளாதார அறிஞர் 2000ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகத் தரவுகளை ஆய்வு செய்து சமமற்ற பரிவர்த்தனை குறித்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் அமெரிக்கா அதன் மொத்த தேசிய வருவாயில் ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் 15% கூடுதலாக இறக்குமதிகளைப் பெறுவதாகவும், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சர்வதேச வர்த்தகத்தின் மூலம் அவை ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் கூடுதலாக 5,116 பில்லியன் டாலர் பெறுவதாகவும் கணக்கிட்டுள்ளார்.

இந்தியா 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது என வைத்துக் கொள்வோம் இந்தியாவின் வருவாய் 10,000 / 70.4= 142.04 டாலர்கள். இந்தியாவின் ஏற்றுமதி ரூபாயின் வாங்கும் திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால் இந்தியா பெறும் வருவாய் 10000 / 21.1 = 473.93 டாலர்கள்   (2019ல் ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் வாங்கும் திறனின் மதிப்பு 21.1). ந்த ஏற்றுமதியால் இந்தியாவிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 331.89 டாலர். அதே போல் இந்தியா 1,000 டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யுமானால் 70,400 ரூபாய் செலவு ஏற்படும். இறக்குமதி வாங்கும் திறனின் அடிப்படையில் செய்யப்படுமானால் 21,100 ரூபாய் செலுத்தினால் போதும். இதனால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு 49,300 ரூபாய். நாணயப் பரிமாற்ற ஏற்றத்தாழ்வுகளால் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை விட இறக்குமதிக்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்பதையும், ஏற்றுமதியிலிருந்து குறைந்த வருவாயே பெறுகின்றன என்பதையும் இந்த உதாரணத்தின் மூலம் அறிய முடியும்.

வளரும் நாடுகள் / ஏழை நாடுகள் தொழில்மய உற்பத்தித் திறனை அதிகமாக்க வேண்டுமானால், அவற்றின் ஆற்றல் தேவைகளும் அதிகரிக்கும் ஆனால் சமமற்ற பரிவர்த்தனையால் இறக்குமதிச் செலவுகள் அதிகமாவதால் அவற்றைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகிறது. இதனால் அந்நாடுகளின் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள் / அமைப்புகள் கடன்களைப் பெரும்பாலும் டாலரிலேயே அளிக்கின். இந்த நாணயப் பரிமாற்ற ஏற்றத்தாழ்வுகளால் நாடுகள் கடனிலிருந்து மீள முடியாத நிலை உள்ளது. வளரும் நாடுகளுக்கு நிதிப் பற்றாக்குறை / வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டால் தரமதிப்பீட்டு நிறுவனங்கள் அவற்றுக்கான தர மதிப்பீட்டைக் குறைக்கின்றன். இதனால் அந்நாடுகளுக்கு மலிவுக் கடன் மறுக்கப்படுவதால், கூடுதல் வட்டியின் மூலமே கடன் பெற முடியும். இந்தக் கூடுதல் வட்டிச் சுமை அந்நாடுகளின் கடன் சுமையை மேலும் அதிகமாக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் வளர்ந்த நாடுகளின் வலுவான நாணயங்களையே விரும்புவதால் அவை மேலும் மதிப்பு ஏற்றம் பெறவும், வளரும் நாடுகளின் நாணயங்கள் மேலும் மதிப்பிழக்கவும் காராணமாக உள்ளது. அந்நிய நிதி முதலீடுகளைக் கவர்வதற்காக வளரும் நாடுகள் அதிக சலுகைகளை அளிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இதுவும் அந்நாடுகளின் நிதிநிலையைப் பாதிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் வலுவிழந்த நாணயங்கள் அந்நிய முதலீடுகளைச் சார்ந்து ஊசலாடுகின்றன. அந்நாடுகளின் தலைமை வங்கிகள் நாணயம் மதிப்பு ஏற்றம் பெறுவதைத் தடுக்க வெளிச் சந்தை நடவடிக்கைகளின் மூலம் டாலரைப் பெறுமாறும் அதற்கென கூடுதல் அந்நியச் செலவாணி இருப்புகளைப் பராமரிக்குமாறும் நிர்பந்திக்கப்படுவதும் ஒரு தேவையில்லாத நிதிச் சுமையே.

இவை அல்லாமல் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி அலகுகள், சேவைத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் லாபங்களையும், அவற்றுக்கு அளிக்கப்படும் வரி வாடகைச் சலுகைகள்,  அந்நிய நிதி முதலீடுகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் லாபங்களையும், நிதியுதவி என்ற பேரில் சுரண்டப்படும் வளங்களையும் கணக்கில் கொண்டால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சுரண்டப்படும் ஏகாதிபத்திய லாபங்களின் பரிமாணம்  இன்னும் பன்மடங்காகும்.

ஏகாதிபத்திய ஒடுக்குமுறை வடிவங்களில் முக்கியமானதாக இந்த நாணய ஒடுக்குமுறை உள்ளது. வலுவான நாணயங்களைக் கொண்ட வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சமமற்ற பரிவர்த்தனையின் மூலம் கணிசமான அளவில் பொருள்களையும், செல்வங்களையும் சுரண்டுவதற்கான ஆயுதமாக அது செயல்படுகிறது. இதற்குத் துணை புரியவே சர்வதேசப் பண நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய நவீன தாராளமய அமைப்புகள் செயல்படுகின்றன. சர்வதேசப் பண நிதியமும், உலக வர்த்தக அமைப்பும் உலகெங்கும் உள்ள வளரும் / ஏழை நாடுகளில் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் நவீன தாராளமயக் கொள்கைகளைச் செயல்படுத்தி நாணயங்களை மதிப்பிழக்கச் செய்து, காப்பு வரிகளைத் தடுத்துத் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவித்து வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமான சமமற்ற பரிவர்த்தனைகளுக்கே பாதை அமைத்துள்ள. ஆகவே சமமற்ற பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் விதமாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் / வளரும் நாடுகள் / ஏழை நாடுகள் (ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள்) டாலரிலான ஏற்றுமதி இறக்குமதிகளை குறைத்து தங்களுக்குள்ளே ஏற்றுமதி இறக்குமதிகளைச் செய்ய வேண்டும். அது இந்நாடுகளின் பொருளாதாரங்களையும் நாணயங்களையும் வலிமைப்படுத்தி ஒருங்கிணைப்பதுடன் ஏகாதிபத்தியத்தை வலிமையிழக்கச் செய்யவும் நவீன காலனியாக்கத்திலிருந்து விடுதலை பெறவும் வழிகோலும். ஆனால் இந்திய அரசோ வெட்கக்கேடான முறையில் அமெரிக்காவிடம் அடிபணிந்து கிடக்கிறது.

(தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...